Latest Updates
-
1 முள்ளங்கியும், அரிசி மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது! -
நவம்பர் 27, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
நவம்பர் இறுதியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
முட்டையை எப்பவும் ஒரே மாதிரி மசாலா செய்யாம.. ஒருடைம் இப்படி கீமா மசாலா செய்யுங்க.. -
தலைமுடி வறண்டும், அதிக சிக்கலுடனும் இருக்கா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 1 முறை போடுங்க.. -
12 ராசிக்காரர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் ஸ்டைல் எப்படி இருக்கும்? உங்க ராசிப்படி நீங்க எப்படின்னு பாருங்க.. -
எலுமிச்சை தோலை இனி குப்பையில் போடாதீங்க... இந்த 5 விஷயங்களுக்கு பயன்படுத்துங்க! -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - இப்படி செய்யுங்க.. நாக்குல அரிப்பே ஏற்படாது! -
இரத்த சர்க்கரை குறையணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 10 காய்கறிகளை சாப்பிடுங்க.. -
டிசம்பர் மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
ஆவணி வெள்ளி... அதிர்ஷ்டலட்சுமி யார் பக்கம்? உங்க ராசிக்கு எப்படி... தெரிஞ்சிக்கங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உறவினர்களின் வருகையினால் மனமகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அமைதியுடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரம் சம்பந்தமாக வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
பரம்பரை சொத்துக்களால் சுப விரயங்கள் செய்ய வேண்டியிருக்கும். நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்ற வெளியிடங்களுக்குச் செல்வீர்கள். மனதில் புதுவித எண்ணங்கள் உண்டாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். அந்நியர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

கடகம்
பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வான் வழியான சம்பந்தம் உடைய தொழில் செய்பவர்களுக்கு புகழ் உண்டாகும். சுயதொழில் புரிகின்றவர்கள் தங்களுடைய முயற்சியால் லாபம் அடைவார்கள். சகோதரர்களால் சுப விரயம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கன்னி
கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் சுப விரயங்கள் ஏற்படும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

துலாம்
மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும் நாள். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
பிள்ளைகளின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். குல தெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல் திட்டங்கள் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுப விரயங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

தனுசு
பிள்ளைகளின் வழியாக சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வாகனப் பயணங்களின் வழியாக லாபம் அடைவீர்கள். பொன், பொருள் போன்றவற்றைக் கையாளும்போது நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். போட்டிகளில் வெற்றியடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

மகரம்
நிர்வாகத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் வரும். மாற்றங்கள் செய்வதால் நிறைய சாதகமான சூழல்கள் உண்டாகும். சுயதொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவும் நினைத்த பலன்களைத் தரும். தொழிலுக்கு பெற்றோர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக கருப்பு நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
எந்த காரியமாக இருந்தாலும் எடுத்த காரியத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

மீனம்
சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
