For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்களுக்கு இன்றைக்கு ரொமான்ஸ் அதிகரிக்கும்!

இன்றைக்கு ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? இன்றைக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதோ என்று நினைக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களைப் படியுங்கள் உங்க அனைத்து கேள்

|

இன்றைக்கு ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? இன்றைக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதோ என்று நினைக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களைப் படியுங்கள் உங்க அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைய நாள் காதலர்களுக்கு ஏமாற்றமான நாளாகவே இருக்கும். உங்கள் காதல் விவகாரத்தை வீட்டிள் உள்ளவர்களிடம் தெரிவிக்க நினைத்தால் நன்கு யோசித்து சொல்லவும். இல்லாவிட்டால், உங்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். சாதகமான வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்பது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இன்றைக்கு நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். அதிக லாபம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மோசடியான நிதித் திட்டங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம். பணப்பரிவர்த்தனைகளில் அதிக கவனம் அவசியம் தேவை. வீட்டில் அமைதியான சூழல் நிலவும். இல்லற வாழ்க்கை சாதாரணமாகவே கழியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறிது நேரம் செலவிடுவது நல்லது. இல்லாவிட்டால் வாக்குவாதம் ஏற்பட்டு ஊடல் ஏற்படக்கூடும். பயணத்தை தவிர்க்க வேண்டிய நாள். உடல் ஆரோக்கியம் சீர்கெடும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 10:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

வேலை விசயத்தை பொறுத்த வரையில், உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். நீங்கள் ஏற்கனவே ஏதாவது வேலைக்கான நேர்காணலுக்கு சென்று வந்திருந்தால். நிச்சயம் உங்களுக்கு சாதகமான பதிலை எதிர்பார்க்கலாம். வர்த்தகர்களுக்கு இன்றைக்கு சிறப்பான நாளாக இருக்கக்கூடும். சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும். வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால், அது எதிர்காலத்தில் பயனளிக்கும். பொருளாதார விசயத்தை பொறுத்த வரையில், உங்கள் முடிவுகளை யோசித்து செயல்படுத்துவது நல்லது. இல்லாவிட்டால் அது ஆபத்தில் முடியக்கூடும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனை முடிவுக்கு வருவதோடு வீட்டில் அமைதியான சூழல் நிலவும். இதனால் உங்கள் தனிப்பட்ட பிரச்சனையில் அதிக கவனம் செலுத்த முடியும். உடல் நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் இரவு 7:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்றைக்கு உங்கள் தாயின் உடல்நலத்தைப்பற்றி அதிகம் கவலைப்படுவீர்கள். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு பணியிடத்தில் வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உயரதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். ஆதலால் வேலையில் கூடுதல் கவனம் தேவை. வர்த்தகர்களுக்கு இன்றைக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். சட்டச்சிக்கல்கள் தீர்ந்து, நீங்கள் வழக்கமான பணியை தொடர முடியும். பொருளாதார நிலையில் கூடுதல் நன்மை கிடைக்கக்கூடும். காதலர்களுக்கு இன்றைக்கு சாதகமான நாளாக இருக்கும். காதலர்களின் உறவு பலப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : விடிகாலை 4:10 முதல் பிற்பகல் 3:50 மணிவரை

கடகம்

கடகம்

இன்றைக்கு நீங்கள் உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் உங்களை சிலாகித்து பாராட்டுவார்கள். தொடர்ந்து உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தினால் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். நீங்கள் இன்று புதிய நபர்களை சந்திக்கக்கூடும். வியாபாரிகளுக்கு இன்றைக்கு உகந்த நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் இல்லத்தரசியுடன் அதிக நேரம் செலவழிப்பது நல்லது. இதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிணக்கு நீங்கும். அதோடு உறவும் பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : மாலை 6:15 முதல் இரவு 11:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்றைக்கு பணியிடத்தில் உற்சாகமுடன் செயல்படுவீர்கள். இதனால் நீங்கள் பார்க்கும் வேலையில் அதிக கவனமுடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவதோடு, அவர்கள் முக்கியமான வேலையை உங்களிடம் ஒப்படைக்கக்கூடும். அதோடு உங்கள் கடினமான உழைப்புக்கு பரிசாக பதவி உயர்வும் உங்களை தேடிவரும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை உங்களின் சமயோசித புத்தியால் உடனடியாக தீர்த்து வைப்பீர்கள். இல்லற வாழ்க்கை இனிதாக கழியும். வாழ்க்கைத் துணையுன் அன்பு ஆறுதல் அளிக்கும். இருவரும் சேர்ந்து பொழுதை இனிமையாக கழிக்க தனிமையான இடத்திற்கு பயணம் செய்யலாம். பணவரவு சீராக இருந்து வரும். செலவுகளை திட்டமிட்டு செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கன்னி

கன்னி

இன்றைக்கு நீங்கள் மற்றவர்கள் விசயத்தில் தலையிடாமல் ஒதுங்கி நிற்கவும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் வேலையில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மற்றவர்களைப் பற்றி குறை கூறுவதை தவிர்க்க வேண்டும். வேலையில் திடீர் தடைகள் ஏற்பட்டு உங்களை வருத்தமடைய செய்யும். இதனால் ஆபத்தான முடிவுகளை எடுப்பதை தள்ளிப்போடுவது நல்லது. வியாபாரிகளுக்கு இன்றைக்கு மந்தமான நாளாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் அதிகரிக்கும். இதனால் வீட்டின் அமைதியான சூழ்நிலை பாதிப்படையும். ஆகவே கோபத்தை கட்டுப்படுத்தி, சமயோசிதமாக செயல்படுவது நல்லது. நிதி நிலைமை மந்தமாகவே இருந்து வரும். உடல் நலத்தில் அலட்சியப் போக்கை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : விடிகாலை 5:20 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்

துலாம்

திருமணமாகதவர்களுக்கு இன்றைக்கு இனிமையான நாளாக அமையும். திருமணம் பற்றிய நல்ல தகவல் உங்கள் வீட்டுக் கதவை தட்டும். விரைவில் கெட்டிமேள சத்தத்தை வீட்டில் எதிர்பார்க்கலாம். உங்கள் பெற்றோருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். குடும்பத்தாருடனும் பொழுது போக்குவதற்கு போதிய நேரம் கிடைக்கும். பொருளாதார நிலைமை வலுவாக இருந்து வரும். பெரிய செலவுகள் எதுவும் இருக்காது என்பதால் சிறிது சேமிக்கவும் வாய்ப்புண்டு. பணியிடத்தில் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடும். பணியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கு உயரதிகாரி உங்களுக்கு உதவக்கூடும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரிகள் இன்றைக்கு சிறிய அளவில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 38

சாதகமான நேரம் : காலை 8:25 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

பணியாளர்களுக்கு இன்றைக்கு சிறப்பான நாளாக அமையக்கூடும். உங்கள் வேலையை விரைந்து முடிப்பீர்கள். இதனால் உங்களுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும். குடும்பத்தாருடன் வெளியில் சென்றுவர திட்டமிடலாம். உங்கள் தந்தையின் உடல்நிலை மேம்படும் என்பதால், அதுவே உங்களுக்கு சற்று நிம்மதியை கொடுக்கும் இன்றைக்கு உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்கள் மீது அதிருப்தி கொள்ளலாம். அதிருப்திக்கான காரணத்தை தெரிந்து கொள்ள அவரிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. இல்லாவிட்டால் தவறான புரிதல் ஏற்படுவதோடு, இடைவெளி அதிகரிக்கும். பழைய கடனை திருப்பி செலுத்துவதால், நிதி நிலைமை குறையும். மாலையில் எதிர்பாராத விதமாக நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 6:05 முதல் இரவு 9:30 மணிவரை

தனுசு

தனுசு

இன்றைக்கு குடும்பப் பிரச்சனைகள் உங்களை கவலை கொள்ள வைக்கும். பல விஷயங்களைப் போட்டு குழப்பிக்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இல்லாதது உங்களை வருத்தமடையச் செய்யும். இதனால் உங்கள் மன அழுத்தமும் கூடும். ஆனாலும், உங்களுடைய மனைவி உங்களுக்கு பக்க பலமாக இருப்பதால், பிரச்சனைக்கு தீர்வு காண உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து நல்ல முடிவு எடுக்கவேண்டியது கட்டாயமாகும். பணியிடத்தில் உங்கள் உயரதிகாரி உங்களிடம் மிக மோசமாக நடந்துகொள்ள நேரிடும். எனவே பணியில் விடாமுயற்சியும் அக்கறையும் இருக்கவேண்டியது அவசியம். பொருளாதார நிலைமை மேம்படும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை மேம்பட திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். காதலர்களுக்கு இன்றைக்கு திடீர் பிரச்சனைகள் எழக்கூடும். இருவருக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டு பிரிய நேரிடும். இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் தெளிவான மனநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 31

சாதகமான நேரம் : மாலை 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

மகரம்

மகரம்

மாணவர்களுக்கு இன்றைக்கு உகந்த நாளாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு இன்றைக்கு நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். பணியிடத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையை பாக்கி இல்லாமல் விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் வர்த்தகம் தொடர்பாக இன்றைக்கு வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணம் இனிதாக முடியும் என்பதோடு, பயணத்தால் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சொத்துப்பிரச்சனை இன்றைக்கு முடிவுக்கு வரும் என்பதால், உங்கள் மன அமைதி கூடும். விரைவில் நல்ல செய்தி ஒன்றை எதிர்பார்க்கலாம். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை மேலோங்கும். அதனால் உங்கள் ஆரோக்கியமும் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் இரவு 8:05 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்றைக்கு உங்கள் உடல் நிலை சரியில்லாததால், இலகுவான பணியும் உங்களுக்கு பெரும் சுமையாக மாறி உங்களை எரிச்சலடையச் செய்யும். கையிருப்பு கரைவதோடு, பண இழப்பும் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை. இவை யாவும் உங்களின் தவறான திட்டமிடுதலால் ஏற்படுவதாகும். எனவே தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இன்றைக்கு உங்களின் பிடிவாத குணம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். அவர்களை அரவணைத்து செல்வது அவசியமாகும். பணியிடத்தில் வீண் அரட்டையை தவிர்க்கவும். உங்கள் மேலதிகாரி உங்களை கண்காணிக்கக்கூடும் என்பதால் வேலையில் கவனம் தேவை. வியாபாரிகள் நிலைமையை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டியது கட்டாயம். எதிர்காலத்தில் பெரும் இழப்புகளை சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் நண்பகல் 12:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்றைக்கு உங்களுக்கு நிம்மதியான நாளாக அமையும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் நல்ல முறையில் பொழுதை கழிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். நீங்கள் பழைய சொத்தை விற்க விரும்பினால் அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. சொத்து விற்பனையும் கைகூடும் நேரமிது. குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்ச்சி பொங்கும். பெற்றோர் உங்களிடம் அனுசரனையாக இருப்பார்கள். இல்லற வாழ்க்கை இனிக்கும். வாழ்க்கை துணை உங்களிடம் அன்பாகவும் நெருக்கமாகவும் இருப்பார். காதலர்களாக இருந்தால் காதலிக்கு பரிசு கொடுக்க ஏற்ற நாள் இது. மன பாரம் நீங்கும் நாள். மாலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : விடிகாலை 5:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 6th November 2019 Wednesday

Check out the daily horoscope for 6th november 2019 wednesday. Read on...
Story first published: Tuesday, November 5, 2019, 23:07 [IST]
Desktop Bottom Promotion