Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
இந்த 4 ராசிக்காரங்களும் இன்னைக்கு மவுன விரதம் இருங்க ரொம்ப நல்லது...
சனிபகவானின் ஆசி நிறைந்த நாள். இந்த நாளில் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடைபெறும். சந்திராஷ்டமத்தால் சில ராசிக்காரர்களுக்கு சில சங்கடங்கள் வரும்.
சனிபகவானின் ஆசி நிறைந்த நாள். இந்த நாளில் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடைபெறும். சந்திராஷ்டமத்தால் சில ராசிக்காரர்களுக்கு சில சங்கடங்கள் வரும். மனதிலும் உடலிலும் உற்சாகம் பிறக்கும். பண வருமானம் வரும். இன்றைக்கு மேஷம், ரிஷபம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்க. கூடுமானவரைக்கும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, மத்தவங்க விஷயத்துல தலையிடாம ஒதுங்கிப் போறது உங்களுக்கு நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல்ல ரொம்ப எச்சரிக்கையா நடந்துக்கோங்க. இன்னிக்கு சுபகாரிய முயற்சிகளை அவாய்ட் பண்றது நல்லது. அதே மாதிரி எந்த விஷயத்திலும் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம் : மெருன்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : அதிகாலை 4:20 முதல் நண்பகல் 12:00 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு சாயந்திரத்துல இருந்து உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குறதுனால, தேவையில்லாம யார்கிட்டயும் வீண் வம்பு பேசி வழக்கு எதுவுலயும் சிக்கிற வேணாம். பேசாம வீட்டுக்குள்ளயே முடங்கி கிடக்குறது நல்லது. சொந்தக்காரங்களோட அன்பும் அரவணைப்பும் இன்னிக்கு கிடைக்கும். இன்னிக்கு நீங்க எந்த வேலையையும் ரொம்பவே உற்சாகமா செய்வீங்க.
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : நண்பகல் 1:25 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு குடும்பத்துல இருந்து வந்த ஃபைனான்ஸ் பிரச்சனை குறையலாம். வேலை விஷயமா திடீர் வெளியூர் பிரயாணம் பண்ண வேண்டியிருக்கும். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பமே மகிழ்ச்சியில மூழ்கிடும். சில பேத்துக்கு புது வண்டி வாகனம் வாங்குற வாய்ப்பு கிடைக்கும். பிசினஸ்ல நீங்க எடுக்குற முயற்சியினால வெற்றியும் கூடுதல் லாபமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

கடகம்
இன்னிக்கு மதியத்துக்கு மேல மனசுல இருந்த குழப்பமும் பாரமும் குறையும். அதோட மனசுல புதுசா உற்சாகம் பிறந்துடும். இன்னிக்கு எதுலயும் நீங்க விட்டுக்கொடுத்து போறதுனால பிரச்சனை பெருசாகாம அவாய்ட் பண்ணிடலாம். இன்னிக்கு எடுக்குற முயற்சியில வெற்றியும் கிடைக்கும். பிசினஸ்ல பணம் கொடுக்கல் பரிவர்த்ததைனயில சின்னதா இடைஞ்சல் உண்டாகும். குடும்பத்துலயும் சின்னச்சின்ன பிரச்சனை முளைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 13
சாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீங்க. சுபச்செலவுகளும் வந்துடும். சொந்தக்காரங்க கூட சிரிச்சி பேசி சந்தோஷப்பட்டுக்குவீங்க. கூடப்பொறந்தவங்களும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. பிள்ளைங்க மூலமாவும் சந்தோஷமான செய்திகள் வந்துடும். குடும்பத்துலயும் எல்லோரும் சந்தோஷப்படும்படியான தரமான சம்பவங்களும் நடந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 3:45 மணிவரை

கன்னி
இன்னிக்கு புது பொருட்களை வாங்குறதுல ரொம்பவே ஆர்வம் காட்டுவீங்க. சமூகத்துல முக்கிய வி.ஐ.பி.க்களோட சப்போர்ட்டுனால நல்லது நடந்துடும். உங்க வருமானம் கூடுறதுக்கான வாய்ப்புகளும் உண்டாகும். பெண்கள் நகை நட்டு வாங்குறதுல ஆர்வம் கூடிடும். உங்க வருமானம் கூடுறதுக்கான வந்தர்ப்பம் கிடைக்கும். அதனால இன்னிக்கு நீங்க ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : அதிகாலை 4:20 முதல் நண்பகல் 12:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு திடீர் வெளியூர் பிரயாணம் போறதுனால ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க. கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யமும் அன்பும் கூடிடும். பிள்ளைங்க மூலமா சுபச் செய்திகளும் உங்க காதுக்கு வந்துடும். குடும்பத்துலயும் சந்தோஷமான சம்பவங்கள் நடந்துடும். உங்க முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும். அதனால மனசளவுலயும் ஹெல்த் லெவல்லயும் ரொம்பவே ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு திடீர் பண வரத்து வந்து உங்களை திக்குமுக்காட வைக்கும். புது பொருட்களையும் வாங்கி சந்தோஷப்படுவீங்க. குடும்பத்துலயும் ஒத்துமை கூடும். பிசினஸ் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காக போட்ட எல்லா திட்டங்களும் நிறைவேறிடும். சொந்தக்காரங்க வழியில இருந்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் குறையும். இன்னிக்கு தடைகள் எல்லாமே உடையும் நாள்.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணி வரை

தனுசு
இன்னிக்கு பிசினஸ்ல சின்னச் சின்ன மாறுதல்களை செஞ்சிட்டா வியாபாரம் பெருகி நல்ல லாபம் கிடைக்கும். இருந்தாலும் உங்க பேச்சுல கூடுதல் கவனம் அவசியம். எதுலயும் விட்டுக்கொடுத்து போகவேண்டியது கட்டாயம். கூடப்பொறந்தவங்களால வீண் பிரச்சனைகள் வந்து தொந்தரவு கொடுக்கு. குடும்பத்துலயும் பெரியவங்க கிட்ட விட்டுக்கொடுத்து தன்மையா பழகுறது அவசியம். இன்னிக்கு மனசுல குழப்பம் இருக்கும்கிறதுனால, செய்ய நினைச்ச வேலையை முடிக்கிறதுல தடங்கல் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை

மகரம்
இன்னிக்கு சுப காரிய முயற்சிகள்ல உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளியூர் பிரயாணம் பண்றதுனால பிசினஸ்லயும் நல்ல மாற்றம் உண்டாகும். கூடப்பொறந்தவங்க கூட சுமூக உறவு மலரும். பெத்தவங்களோட அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். அதனால குடும்பத்துலயும் சந்தோஷம் பிறக்கும். இன்னிக்கு நீங்க எடுக்குற எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமான கடன் பிரச்சனைகள் கட்டுக்குள்ள வந்துடும். குடும்பத்தோட வெளியூர் பிரயாணம் போறதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும். நீங்க எடுக்குற முயற்சிக்கு பெத்தவங்களோட அன்பும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதனால இன்னிக்கு நீங்க எந்த வேலையையும் ரொம்பவே துணிச்சலா செஞ்சி முடிப்பீங்க. ஹெல்த் கண்டிஷனும் அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 8:20 மணிவரை

மீனம்
இன்னிக்கு உத்தியோகம் பாக்குற இடத்துல சின்னச் சின்ன இடைஞ்சல்கள், தடங்கல்கள் வந்து முளைக்கும். கூடுதல் கவனத்தோட நடந்துக்கோங்க. பிசினஸ்ல புது நபர்களோட அறிமுகத்தால நன்மைகள் நடந்துடும். கூடவே லாபமும் பெருகிடும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமான வழக்குல உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.ரொம்ப நெருங்குன சொந்தக்காரங்க கூட சின்னதா மனஸ்தாபம் வரலாம். இன்னிக்கு பண வரவு சுமாரா தான் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை



Click it and Unblock the Notifications