இந்த நாள் யாருக்கெல்லாம் பண வருமானத்தை கொடுக்கப் போகுது பாருங்க...

வெற்றி என்பது தோல்விகளில் இருந்து பாடம் படிப்பதுதான். இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்க எல்லா கேள்விகளுக்கு ஈஸியான விடை கிடைக்கும்.

வெற்றி என்பது தோல்விகளில் இருந்து பாடம் படிப்பதுதான். இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்க எல்லா கேள்விகளுக்கு ஈஸியான விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த நாள் உங்களுக்கு மிக இனிதாக அமையும். பண விஷயத்தைப் பொருத்த வரையில், பண விஷயத்தில் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம். முன்னர் செய்த முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். இல்லற வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இன்றைக்கு உங்களின் நெருங்கிய உறவினர்களுடன் பொழுதுபோக்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் விட்ட பணியை குறைவின்றி முடிப்பீர்கள். தொழிலதிபராக இருந்தால், உங்கள் தொழிலில் அதிக லாபத்தை பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பில் திக்குமுக்காடிப்போவீர்கள், உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற யோக, தியானம் செய்யுங்கள்

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 43

சாதகமான நேரம் : காலை 8:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இந்த நாள் உங்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பாக அமையும், உங்கள் உடல் நலமும் மன நலமும் திருப்திகரமாக அமையும். இன்றைக்கு நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். புதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு உகந்த நாளாக அமையும். பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிகம் செலவிட நேரிடலாம். ஆனால் மற்றவர்களின் திருப்திக்காக செலவு செய்வதை தவிர்க்கவும். உங்கள் மனைவியின் நோக்கத்தை புரிந்து அனுசரித்து சென்றால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண இன்றைக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 9:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

பணியாளர்களுக்கு இன்றைக்கு சிறப்பான நாளாக அமையும். உங்கள் திட்டமிட்ட இலக்கை அடையா கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். கூடுதலாக ஒதுக்கப்பட்ட பணிகளையும் இடைஞ்சல் இல்லாமல் விரைந்து முடிக்க வேண்டியதிருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு இனிமையான நாளாக அமையக்கூடும். உங்கள் மனைவியின் செயல் உங்களை திக்குமுக்காட வைத்திடும். உங்கள் தாயின் உடல் நிலை சீராக இருக்கும். தாயின் ஆசீர்வாதம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் இழுபறியான நிலை இருக்கும். அவசரப்பட்டு செலவுசெய்துவிட்டு பின்னர் அவஸ்தைப்பட நேரிடும், இன்றைக்கு உங்கள் உடல்நிலை திருப்திகரமாக இல்லை. தூக்கமின்றி அவதிப்பட நேரிடும். மாலையில் விருந்தினர் வருகையால், உங்கள் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவதில் தடைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 37

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:15 மணிவரை

கடகம்

கடகம்

இன்றைக்கு பல இடைஞ்சல்கள் இருந்தாலும், இனிமையான நாளாக அமையும். பல சிக்கல்கள் ஏற்பட்டாலும், உங்கள் மனைவியின் அன்பும் அரவணைப்பும் அத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் சற்று நிம்மதியைக் கொடுக்கும். இருவருக்கும் இடையில் பரஸ்பர அன்பு அதிகரிக்கும்.

பணியிடத்தில் வேலைப்பளு குறைந்து, சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் கிடைக்கும். பணியிடத்தில் ஏற்பட்ட சிக்கல், தகுதி வாய்ந்த நபரின் உதவியுடன் தீர்த்து வைக்கப்படும். வர்த்தகர்களுக்கு இன்றைக்கு மிகச் சாதாரண நாளாகவே அமையும். கூடுதல் பணவரவு கிடைக்க நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். உடல் நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : விடிகாலை 5:20 முதல் நண்பகல் 12:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

பணியிடத்தில் அதிர்ஷ்ட வாய்ப்பு குறைவாகவே இருக்கும். உங்களின் அலட்சிய மனப் போக்கால் வேலையில் சிக்கல் ஏற்படலாம். இதனால் வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது போகும். வீட்டில் சிறிய விஷயங்களில் மனைவியிடம் விட்டுக்கொடுத்து அனுசரித்து போகவும். இல்லாவிட்டால் கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிரிகளிடம் இருந்து விலகி இருக்காவிட்டால் சிக்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உடல் எடையை குறைக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : பிற்பகல் 3:20 முதல் இரவு 9:05 மணிவரை

கன்னி

கன்னி

எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் இழுபறி நிலை ஏற்படும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போவதால் மனதில் இனம் புரியாத கவலை ஏற்படும்

நிதி தொடர்பான ஆவணங்களில் அவசரப்பட்டு எந்த கையெழுத்தும் போட வேண்டாம். ஆவணங்களை முழுமையாக படித்துப் பார்த்துவிட்டு பின்பு கையெழுத்திடுங்கள். இல்லை என்றால் ஏமாற்றம் ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். இல்லாவிட்டால் பிரச்சனைகள் முளைக்கும்

பணிகளை திட்டமிட்டு செய்யுங்கள். வெற்றிக்கு வழிவகுக்கும். உடல் நலம் சீராக இருக்க ஒய்வு எடுக்க வேண்டியது அவசியம். ஓய்வு நேரத்தில் நல்ல புத்தகங்களை படிக்கலாம். மாணவர்களுக்கு இன்று உகந்த நாளாக அமையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : காலை 9:30 முதல் இரவு 10:00 மணிவரை

துலாம்

துலாம்

இன்றைக்கு உங்கள் உடல் நலனில் ஏற்படும் திடீர் கோளாறுகளால், திட்டமிட்ட பணிகளில் தடை ஏற்படக்கூடும். பணியிடத்தில் ஏற்படும் கூடுதல் வேலைச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறக்கூடும். உங்கள் உடல் நலனும் அதற்கு இடம் கொடுக்காது. இது உங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அதிக வேலைச்சுமையை கொடுக்க வேண்டாம்.

பொருளாதார நிலை வழக்கம் போலவே இருக்கும். பணப்பிரச்சனையில் கவனமாக இருங்கள். அதிகமாக செலவழித்து வெறுங்கையுடன் வீடு திரும்ப நேரிடும். பணப்பரிவர்த்தனையில் முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள் கிடையாது. குடும்பத்தில் ஏற்படும் பதட்டமான சூழ்நிலையால் உங்கள் கவலை அதிகரிக்கும், உங்கள் மனைவியின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு தெம்பாக இருக்கும். மாலையில் வெளிவட்டா நிகழ்ச்சியில் பங்கேற்க சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 8:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கலாம். உடல் ஆரோக்கியம் சீராக நடைப் பயிற்சி மேற்கொள்ளவும். தந்தையுடன் சூடான வாக்குவாதத்தை தவிர்க்கவும். சூழ்நிலையை கவனமாக கையாளவும். உங்கள் கருத்தை மிக புத்திசாலித்தனமாக உங்கள் தந்தையிடம் எடுத்துக்கூறவும், நாளின் பின்பகுதியில் சற்று சலிப்பாக உணர்வீர்கள். சலிப்பை தவிர்க்க நண்பர்களுடன் பொழுது போக்குவது நல்லது,மேலும், நல்ல புத்தகங்களை படிப்பதால், மனம் இலகுவாகும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.வீண் அரட்டையையும், பகல் கனவு காண்பதையும் தவிர்க்கவும். பயனுள்ள வேலையில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 39

சாதகமான நேரம் : விடிகாலை 4:20 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

தனுசு

தனுசு

இல்வாழ்க்கை இணக்கமாக அமையும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று மாலை உங்களுக்கு இனிமையான பொழுதாக அமையும். நேர்மறையான எண்ணங்கள் மேலோங்கும். இதனால் அனை அமைதி கூடும். பொருளாதார வசதி கூடும். புதிய தொழிலை தொடங்க உகந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். உங்கள் திறமை பளிச்சிடும், இன்றைக்கு உங்கள் உயரதிகாரி உங்களை புகழக்கூடும். புகழ்ச்சியில் மயங்கினால், தவறுகள் செய்து, பின்னர் வருத்தப்பட நேரிடும். காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 23

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:15 மணிவரை

மகரம்

மகரம்

இன்றைக்கு உங்கள் வீட்டில் சில மாறுதல்களை செய்ய நினைத்தால், குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு செய்யவும். பல விஷயங்கள் உங்கள் பொறுமையை சோதிப்பதாக அமையும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படவும். முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. அவசர முடிவுகளை எடுக்கவேண்டாம். நிதி நிலைமை சீராக இருக்கும். உங்கள் தாராள மனப்பான்மையை, உங்கள் பிள்ளைகள் மேற்கொள்ள அனுமதிக்காதீர்கள். இல்வாழ்க்கையில் இணக்கமான சூழல் நிலவும். உங்கள் மனைவி உங்களுக்கு பக்க பலமாக இருப்பார். அநாவசியமாக கவலைப்படுவதை விட்டொழியுங்கள். உங்கள் பொன்னான நேரத்தை வீணாக கழிக்க வேண்டாம். உங்களுக்கு நன்மை விளைவிக்கும் ஒரு செயலை செய்வதன் மூலம் மனம் நிம்மதியடையும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : காலை 7:35 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கும்பம்

கும்பம்

உங்கள் பிடிவாத குணம் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, உங்கள் நடத்தையை சிறப்பாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், பல விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். நீங்கள் சொல்வது மட்டுமே சரி என்று நினைக்காமல், மற்றவர்களின் சொல்லுக்கு மதிப்பளியுங்கள். இல்லாவிட்டால், அவர்கள் உங்களிடம் இருந்து விலக நேரிடும். நிதி நிலைமை அருமையாக இருக்கும். உங்கள் வேலையை உற்சாகமாக செய்யவும். அதனால், கடின உழைப்பும் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். இல்வாழ்க்கை இனிதாக கழியும். உங்கள் மனைவியின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 44

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 9:00 மணிவரை

மீனம்

மீனம்

வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் கவனம் சிதறும். இது உங்கள் மேலதிகாரியை எரிச்சலடையச் செய்யும். இதனால் வேலையை இழக்கும் அபாயமும் நேரும். பணவரவு எதிர்பார்த்த மாதிரி அமையும். முன்னர் செய்த முதலீடுகள் இன்றைக்கு உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். பணத்தை எதிர்பார்க்கும் நண்பர்களிடம், தயங்காமல் பணம் இல்லை என்று சொல்லுங்கள். கடன் கொடுப்பதையும் தவிர்க்கப் பாருங்கள். உங்கள் தினசரி வாழ்க்கையில் செய்யும் சிறிய மாற்றமும், உங்கள் வாழ்க்கையில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். உடல் ஆரோக்கியம் சீராக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : முற்பகல் 10:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion