இந்த ராசிக்கார முரட்டு சிங்கிள்ஸ் இன்னைக்கு கமிட் ஆனாலும் ஆச்சரியமில்லை...

இந்த கொரோனா வந்தாலும் வந்துச்சு நமக்கு பொண்ணு பார்க்க கூட போக முடியலையே என்று வருத்தப்படுகிறார்கள் பல சிங்கிள்ஸ். கோவில் திருவிழாக்கள் வந்தாலாவது சாமி கும்பிடும் சாக்கில் சைட் அடிக்கலாம்.

இந்த கொரோனா வந்தாலும் வந்துச்சு நமக்கு பொண்ணு பார்க்க கூட போக முடியலையே என்று வருத்தப்படுகிறார்கள் பல சிங்கிள்ஸ். கோவில் திருவிழாக்கள் வந்தாலாவது சாமி கும்பிடும் சாக்கில் சைட் அடிக்கலாம். ஆனால் அதற்கும் வழி இல்லாமல் போச்சே எல்லா கோயிலையும் பூட்டி திருவிழாவை நிறுத்திட்டாங்க. கவலைப்படாதீங்க முரட்டு சிங்கிஸ் இனி உங்களுக்கு கமிட் ஆகிறதுக்கான காலம் வரப்போகுது கிரக மாற்றங்களும் நடக்கப் போகுது. இன்றைய ராசி பலனை படிங்க உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல லாபம் அதிகமா இருக்கும். பெத்தவங்களாலயும் உங்களுக்கு நல்லது நடந்துடும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்குற சத்தான ஆகாரத்தை எடுத்துக்கோங்க. பிள்ளைங்களால பிரச்சனையும் தண்டச்செலவுங்களும் வரலாம். உத்தியோகத்துல அநாவசிய பிரச்சனை வந்தாலும், அதை திறமையா சமாளிப்பீங்க. கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். லவ்வர்ஸுங்க நடுவுல ரொமான்ஸ் அதிகமாகும் போனிலேயே காதல் மொழி பேசிப்பீங்க. சில சிங்கிஸ் இன்னைக்கு கமிட் ஆக வாய்ப்பு இருக்கு போன் மூலமாக காதல் வார்த்தைகள் பேசலாம்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 4 : 20 மணி முதல் காலை 8 :00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு வீண் தண்டச்செலவுங்களால கை காசு கரையலாம். பிசினஸ்ல லாபம் எதிர்பாத்த மாதிரி இருக்கும். முகத்துல தன்னம்பிக்கையும் வசீகரமும் கூடிடும். கவர்மெண்ட் ஆஃபீஸர்களை தேவையில்லாம பகைச்சிக்க வேண்டாம். உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்க கெடுபிடி காட்டுவாங்க. இன்னிக்கு பண வரத்தும் தாராளமா இருக்கும். உங்க வீட்ல இன்னைக்கு காதல் வாசனை அதிகமாக வீசுமாம் என்ஜாய் பண்ணுங்க.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : காலை 7: 00மணி முதல் பிற்பகல் 1:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு குடும்பத்தோட சந்தோஷமா என்ஜாய் பண்ணுவீங்க. பிசினஸ்ல வர்த்தகம் கூடி லாபமும் அமோகமா இருக்கும். சுபகாரிய செலவுங்க வரலாம். வீட்டுக்கு தேவையான சாமான்களையும் வாங்குவீங்க. உங்க முயற்சிகளுக்கும் இன்னிக்கு வெற்றி கிடைக்கும். மொத்தத்துல இன்னிக்கு ரொம்பவே சந்தோஷமா இருப்பீங்க. சிங்கிள்ஸ் சிலருக்கு மேட்ரிமோனியல் மூலமான நல்ல வரன் அமைய வாய்ப்பு வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12: 00மணி முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகத்துல வேலைப்பளு ரொம்ப அதிகமா இருக்கும். ஃப்ரண்ட்ஸுங்ககிட்ட மனசுவிட்டு பேசுறதுனால மனசுக்கு இதமா இருக்கும். கூடவே மன உளைச்சலும் கம்மியாகும். பிசினஸ்ல லாபம் இருக்கும். எதிர்பாத்த உதவி, ஒத்தாசையும் கிடைக்கும். இன்னிக்கு பண வரத்து இருந்தாலும், கூடவே தண்டச்செலவுங்களும் பின்னாடியே வந்துடும். உங்க வீட்ல சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் கவனமாக பேசுங்க.

அதிர்ஷ்ட நிறம் : லாவண்டர்

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நேரம் : காலை 11 : 00மணி முதல் முற்பகல் 1 :00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு சொந்தக்காரங்களால சுபச் செய்திங்க உங்களை தேடி வரும். வேலை தேடுறவங்களுக்கு புது உத்தியோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு. இந்த மாசம் சம்பளம் வருமா வராதான்னு சந்தேகம் மனசுக்குள்ளாற ஓடும். இருந்தாலும் இன்னிக்கு நீங்க ரொம்ப தெம்பாவும் உற்சாகமாவும் இருப்பீங்க. பேங்க் பேலன்ஸ் கூடும். காதலில் கமிட் ஆகி போன் மூலமாக காதலை வளர்ப்பீங்க. கொரோனா பீதி இருக்குறதால, வீட்டை விட்டு வெளிய போகாதீங்க. வெளியூர் ட்ராவல் பண்ற ஐடியாவையும் தள்ளிப்போடுங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 10

அதிர்ஷ்ட நேரம் : காலை 10 : 00மணி முதல் நண்பகல் 12 :30 மணிவரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க ஒத்தாசையால பிரச்சனைங்க குறையலாம். நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு இடைஞ்சல் வரலாம். நினைச்ச காரியத்தை நல்லவிதமா முடிக்க சொந்தக்காரங்களோட தயவு தேவைப்படும். குடும்பத்துலயும் சுபகாரிய செலவுகளும், வீண் விரய செலவுங்களும் வந்து உங்க கையை கடிக்கும். அதனால ஃபைனான்ஸ பிரச்சனையும் தலை தூக்கும். வீட்ல கணவன் மனைவி பிரச்சினை வரலாம் நிதானமாக பேசுங்க. ரொமான்ஸ் முயற்சிகள் இன்னைக்கு வேண்டாமே.

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அதிர்ஷ்ட எண் : 14

அதிர்ஷ்ட நேரம் : மாலை 3 : 20 மணி முதல் இரவு 7 :00 மணிவரை

துலாம்

துலாம்

துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல வர்த்தகம் கூடி லாபம் பெருகும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். ரொம்ப நாளா வராம இருந்து கடன் பாக்கியும் இன்னிக்கு வந்துடும். உத்தியோகத்துல ட்ரான்ஸ்ஃபர் பத்தின தகவல் தேடி வரும். இருந்தாலும் இந்த சமயத்துல யோசனை பண்ணி முடிவெடுக்குறது நல்லது. செய்யுற வேலையில வெற்றி கிடைக்கும். அதனால மனசளவுல ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க. வீட்டுலயும் சந்தோஷம் பெருகிடும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 8 :00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க முயற்சிங்களுக்கு குடும்பத்துல எல்லோரும் சப்போர்ட் பண்ணுவாங்க. பிசினஸ்லயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் கூட, லாபமும் பெருகும். பிள்ளைங்க படிக்குறதுல ரொம்பவே ஆர்வம் காட்டுவாங்க. உத்தியோகத்துல திறமைக்கு ஏத்தமாதிரி ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு. குடும்பத்துலயும் ஒத்துமையும் குதூகலமும் அதிகமாகும். சின்னச் சின்ன சம்பவங்களினால் வீட்டில் மகிழ்ச்சி பூக்கள் பூக்கத் தொடங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : காலை 09 : 00மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு கல்யாணம் சம்பந்தமான சுபகாரிய பேச்சுவார்த்தையில தடங்கள், இடைஞ்சல் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. உஷாரா இருங்க. பிரச்சனை வராம இருக்க உங்க குலதெய்வத்தை மனசுக்குள்ளாற கும்பிடுங்க, மலை போல வந்த தடங்கல், தூசி மாதிரி பறந்துடும். அப்பாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க. சிக்கனமா செலவு பண்ணினா சேமிக்க வழி பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நேரம் : காலை 06 : 00மணி முதல் காலை 11 :00 மணிவரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால வாயை திறக்காதீங்க. சுபகாரியம் சம்பந்தப்பட்ட வேலையை ஒத்திப்போடுறது நல்லது. கொரோனா பீதி இருக்குறதால வீட்டுலயே இருக்க பாருங்க. இன்னிக்கு தேவையில்லாத மனக்குழப்பம் வரலாம். அதனால மத்தவங்க கிட்ட தேவையில்லாம பேச்சுவார்த்தையை வச்சிக்காதீங்க. இல்லேன்னா வீண் வம்பை விலைக்கு வாங்குவீங்க, அதனால கவனமா இருக்க பாருங்க. இன்னைக்கு காதலை சொல்லலாம்னு நினைச்சிருந்தா அந்த ஐடியாவை ஒத்திப்போடுங்க இல்லாட்டி வீணா போயிடும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 : 10 மணி முதல் இரவு 8 :00 மணிவரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு புதுசா அறிமுகமாறவங்களால நல்லது நடக்க வாய்ப்பிருக்கு. கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். பிள்ளைங்களால வீட்டுல சுபச் செலவுங்க வந்துடும். பிசினஸ்ல இருந்த போட்டி பொறாமை குறையும். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குவீங்க. இன்னிக்கு எல்லா வேலையையும் ரொம்பவே சுறுசுறுப்பா செஞ்சி முடிப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 : 30 மணி முதல் இரவு 7 :00 மணிவரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு காலையிலயே சுபச் செய்திங்க உங்களை தேடிவந்து உங்களை சந்தோஷத்துல திக்குமுக்காட வச்சிடும். அநாவசிய சாமான்களை வாங்குறதை அவாய்ட் பண்ணினா கடன் பிரச்சனை குறையும். கூடவே, சேமிப்பும் கூடும். இன்னிக்கு உங்க நோய் நொடிகள் காணாம போயி, ஹெல்த் கண்டிஷன்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். இந்த ராசிக்கார சிங்கிள்ஸ் இன்னைக்கு கமிட் ஆகலாம் சுப பேச்சுவார்த்தை நல்லதா முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : வயலட்

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 6:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, May 3, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion