இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படும் தெரியுமா?

அக்டோபர் 31 ஆம் தேதி கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களையும் ராசியான நேரத்தையும் பார்க்கலாம

தினசரி ராசி பலன் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களையும் ராசியான நேரத்தையும் பார்க்கலாம்.

Daily Horoscope For 31st October 2019 Thursday

இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகம் வரும் யாருக்கு திடீர் செலவு வரும். ரொமான்ஸ் உணர்வு யாருக்கு உற்சாகத்தை தரும் என்று பார்க்கலாம். நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்று ராசிபலனைப் பார்த்து தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும் கணவன் மனைவி இடையேயான பாசமும் நேசமும் மீண்டும் துளிர்க்கும். மழைக்காலத்தில் காதலை திகட்ட திகட்ட அனுபவிப்பீர்கள். உங்கள் அன்பானவர் உங்களுக்கு சர்ப்ரைஸ் பரிசை கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் சாதாரண நாளாகும். பண வருமானம் பொருளாதார நிலை அதி அற்புதமாக இருக்கும். அவசர முடிவுகளை எடுக்கும் முன்பாக ஆலோசனை அவசியம். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மிகப்பெரிய அளவில் பண வருமானம் கிடைக்கும். என்றாலும் நீங்க காத்திருக்க வேண்டியிருக்கும். மனம் அமைதியான நிலையில் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 3:30 - இரவு 10:00 மணி

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் செயல்பாடுகளால் பெற்றோர்கள் மன அமைதி இழந்து காணப்படுவார்கள். உங்களால் சில புகார்கள் வரலாம். உங்களின் கவனக்குறைவான செயல்பாடுகள் அணுகுமுறைகள் பெற்றோர்களின் கவலைக்கு காரணமாகிவிடும். எனவே பெற்றோர்கள் அன்பிற்கு உரியவர்களின் மகிழ்ச்சியை நீங்க விரும்பினால் உங்களுடைய தவறுகளை சரி செய்யவும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க. இன்றைக்கு கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகலாம். உங்க வேலையில திருப்தி இல்லை என்றால் வேறு வேலைக்கு முயற்சி செய்யுங்க. இந்த கால கட்டம் சரியான கால கட்டம். நீங்க கவனமாக முடிவெடுங்க. இன்றைய தினம் பொருளாதார நிலை சாதாரணமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படும். உங்க வாழ்க்கை துணையின் கோபத்தை உணர்வீர்கள்

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 - மாலை 6:00 மணி

மிதுனம்

மிதுனம்

வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். பிசினஸ் செய்பவர்கள் பழைய முதலீடுகளின் மூலம் நீங்க ஜெயிக்க முடியும். உங்க கனவு நனவாகும். சொத்து விசயம் காரணமாக டென்சன் அதிகமாகும். பொருளாதார ரீதியாக நீங்க தெம்பா இருப்பீங்க. உங்க வருமானம் இன்றைக்கு அதிகமாகும். உங்க சந்தோஷத்திற்காக இன்றைக்கு நீங்க நேரத்தை செலவு பண்ணுவீங்க. உங்க உடல் ஆரோக்கியம் இன்றைக்கு சுமாராக இருக்கும் அதுவே உங்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 - இரவு 8:00 மணி

கடகம்

கடகம்

இன்றைய தினம் மகிழ்ச்சிகரமான நாள். பணம் அபரிமிதமாக இருக்கும் ஷாப்பிங் செல்வீர்கள். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீங்க. அவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் கூடுதல் நேரத்தை செலவிடுவீர்கள். சந்தோஷ தருணங்களை நினைவுபடுத்திக் கொள்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் அழகான ஒரு இடத்தை பார்வையிடுவீர்கள். ஆரோக்கியமாக இருப்பீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாள். சந்தோஷமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:10 - மதியம் 12:20 மணி

சிம்மம்

சிம்மம்

உங்களுக்கு கோபம் அதிகமாக வரும். இந்த கோபத்தால் நீங்க நிறைய பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வாக்கு ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் கோபத்தை அதிகரிக்கும். உங்க பேச்சு குடும்ப உறுப்பினர்களின் மனதை புண்ணாக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் பொறுமையை சோதிக்கும். அலுவலகத்தில் அலட்சியமாக இருக்காதீங்க. எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறை எண்ணத்தை அதிகரியுங்கள் உங்களின் மன அமைதி அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 - மாலை 6:00 மணி

கன்னி

கன்னி

அலுவலகத்தில் இன்றைய தினம் பணிச்சுமை அதிகமாக இருக்கும் மன அழுத்தம் எற்படுவதால் உங்க வேலையில கவனம் செலுத்த முடியாமல் போகலாம். உடல்ரீதியாக சோர்வடைவீர்கள் இதனால் மன ரீதியாக பாதிப்பீர்கள் எனவே உங்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் கூடும். உங்களின் பெற்றோர்கள் மூலம் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் வாழ்க்கை துணையுடன் ரொமான்ஸ் அதிகரிக்கும். மறக்க முடியாத வகையில் பயணத்தை திட்டமிடுவீர்கள். உங்க காதல் துணைக்கு வாக்கு கொடுக்கும் முன்பு கவனமாக இருக்கவும். ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 - இரவு 10:45 மணி

துலாம்

துலாம்

வருமானத்தை மீறி செலவு செய்ய வேண்டாம். உங்க பொருளாதாரமும் பண நிலையும் உங்களுக்கு ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். பண விசயத்திலும் வேலை செய்யும் இடத்திலும் கவனமாக இருங்க. வாழ்க்கை துணையுடன் மனம் திறந்து பேசுங்கள். இல்லாவிட்டால் அது உங்கள் மன அமைதியை குலைக்கும். முதுகுவலியால் நீங்க பாதிக்கப்படுவீர்கள் என்பதால் உங்களின் ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 - இரவு 10:00 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அமைதியாக சந்தோஷமாக இருந்தாலே போதும் குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஒற்றுமையும் உங்க மன அமைதியை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் மன அழுத்தம் குறையும். அன்பான உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். உங்களின் பொருளாதார நிலைமை இன்று அற்புதமாக இருக்கும். கூடுதலாக வருமானம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்காது. கோபமும் முரட்டுத்தனமும் உங்களின் பதற்றத்தை அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து போங்க சந்தோஷம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 - மாலை 3:00 மணி

தனுசு

தனுசு

இன்று வேலை செய்யும் இடத்தில் நீங்க அமைதியாக இருங்க உங்க சந்தோஷம் கூடும். பிசினஸ் செய்பவர்கள் புதிய முதலீடு மூலம் வருமானத்தை அதிகரிப்பீர்கள். பயணம் உங்களுக்கு நன்மையை தரும். வேலைக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வீர்கள். மண வாழ்க்கையில் அன்பும் அமைதியும் அதிகரிக்கும். அன்பான தம்பதியினர் உற்சாகமாக பொழுதை கழிப்பீர்கள். கோபத்தை தவிர்த்து அமைதியாக இருங்கள். இந்த நாளை சந்தோஷமாக இருங்க உங்க ஆரோக்கியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:45 - இரவு 8:30 மணி

மகரம்

மகரம்

இன்றைய தினம் உங்களுக்கு சின்னச் சின்ன சிக்கல்கள் ஏற்படும். உங்க வேலையை சரியாக செய்ய முடியலையே என்று எரிச்சலைவீர்கள். மனதை அமைதியாக வைத்திருங்கள். அவசரமாக எதையும் செய்யாதீர்கள். உங்க குடும்பத்தினருடன் நேரத்தை செலவு பண்ணுங்க. உங்க தந்தை உடன் முக்கிய முடிவுகளை விவாதிப்பீர்கள். பண விசயம் இன்றைக்கு உங்களுக்கு மன திருப்தியாக இருக்காது எனவே சிந்தனையோடு நேரத்தையும் பணத்தையும் செலவு பண்ணுங்க இந்த நாளை சமாளிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 - இரவு 10:45 மணி

கும்பம்

கும்பம்

வேலை செய்யும் இடத்தில் வெற்றிகள் தேடி வரும் இந்த வெற்றி கடின உழைப்பிற்கு கிடைக்கும் சந்தோஷமான தருணம்தான். உங்கள் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். சந்தோஷமாக கொண்டாடுங்கள். உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். மண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். உங்கள் மனைவி உடனான உறவு சந்தோஷமாக இருக்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்களின் சந்தோஷத்திற்கு காரணமாக உள்ள மூத்தவர்கள் பெற்றோர்களுக்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:15 - மாலை 5:20 மணி

மீனம்

மீனம்

மீனம் ராசிக்கார மாணவர்களுக்கு இன்றைய தினம் சில தடைகள் ஏற்படும். தடைகளை உடைத்து வெற்றி பெறுவீர்கள். இன்றைக்கு உங்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படும் காரணம் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடையும். மருத்துவ ஆலோசனை அதிகம் தேவை. வேலை செய்யும் இடத்தில் கவனச்சிதறல் ஏற்படும். சலிப்பு ஏற்படும் பட்சத்தில் நீங்க ஓய்வெடுங்க. நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்க. உடற்பயிற்சி செய்யுங்க அது உங்களை உற்சாகப்படுத்தும். பயணம் செய்ய இன்றைய தினம் ஏற்ற நாள் இல்லை. பயணத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 44

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 - மாலை 3:00 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, October 31, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion