இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணமும் அதிர்ஷ்டமும் வரும்...

தினசரி ராசி பலன்கள் சந்திரனை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது. இன்று மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம்,எண்களை காண்போம்

Recommended Video

30-10-2019 இன்றைய ராசி பலன் | Astrology | Rasipalan | Oneindia Tamil

தினசரி ராசி பலன்கள் சந்திரனை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது. இன்று மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம். இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகம் வரும் யாருக்கு திடீர் செலவு வரும். ரொமான்ஸ் உணர்வு யாருக்கு உற்சாகத்தை தரும் என்று பார்க்கலாம்.

Daily Horoscope For 30th October 2019 Wednesday

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும். வேலை, தொழில், சந்தோஷம் என அக்டோபர் 30ஆம் தேதியான இன்றைய தினம் உங்க ராசிபலன் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. சந்திரன் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் மனதளவிலும் உடல் ரீதியாவும் பிரச்சினை ஏற்படும். உடல் நிலை பாதிப்பால் சில சிக்கல்கள் ஏற்படும். கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை. எதையாவது நினைத்து கவலைப்படுவீர்கள். உங்களின் மனரீதியான பிரச்சினையை நெருக்கமான ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மனது இலேசாகும். மன அமைதியை ஏற்படுத்தும். பேச்சில் கவனமாக இருங்கள். பெரியவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். பண விசயத்தில் இன்று சாதாரண நாள் வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடன உறவு நன்றாக இருக்கும். இது உங்களுக்கு கூடுதல் பலனை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: இரவு 9:50 - பிற்பகல் 2:25

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே. உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் உற்சாகத்தை ஏற்படுத்தும். வீட்டில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும், ஆனால் நீங்கள் நேர்மையுடன் நிறைவேற்றுவீர்கள். இது உங்கள் பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். இது மட்டுமல்லாமல், இன்று உங்கள் தம்பி அல்லது சகோதரி சாதனைகளை செய்வீர்கள். சொந்த பந்தங்களுடன் உற்சாகமாக இணைந்திருப்பீர்கள் பண்டிகை கால சந்தோஷத்தை ஏற்படுத்தும். திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்தால் உங்கள் மனைவியுடன் உணர்ச்சி ரீதியான தொடர்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இன்று கசக்கும். உங்கள் சோம்பேறித்தானம் காதல் துணையின் கோபத்தை கிளறும். உங்கள் இருவருக்கும் இடையே ஒரு சிறிய தகராறு ஏற்படும் என்றாலும் எப்படியாவது சமாதானம் செய்து விடுவீர்கள். பொருளாதார சூழ்நிலை நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணியிடத்தில், உங்கள் வேலையில் பிரச்சினைகள் ஏற்படலாம். அதே நேரம் மேலதிகாரிகளின் உதவியுடன் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 - இரவு 8:00 மணி

மிதுனம்

மிதுனம்

புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே. இன்று உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மனரீதியாக நீங்கள் மிகவும் வலிமையாக உணர்வீர்கள். இன்று, நீங்கள் ஒரு வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள், மேலும் நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிட விரும்புகிறீர்கள். பணத்தைப் பொறுத்தவரை நாள் நல்லது. எதிர்பார்த்தபடி பணம் கிடைக்கும். குடும்பத்துடனான உறவுகள் நன்றாக இருக்கும். எல்லோருடைய பாசத்துடனும் அக்கறையுடனும் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலையைப் பற்றி பேசினால், இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வருமானமும் லாபமும் கிடைக்கும். வேலை செய்பவர்கள் நீங்கள் செய்ய விரும்பிய சில வேலைகளைப் பெறலாம். நீங்கள் இந்த வேலையை வெற்றிகரமாக முடித்தால், வரும் நாட்களில் உங்கள் முன்னேற்றம் நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - இரவு 9:45 மணி

கடகம்

கடகம்

சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே. நீங்க ரொம்ப பிஸியாக இருக்கீங்க. உங்க குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது. அதை சரிசெய்ய ஒரு உல்லாச பயணத்தை ஏற்பாடு செய்வீர்கள். இது நல்ல நாள். வாழ்க்கை துணையுடனான புரிதல் மேம்படும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்றைய தினம் புதிய வேலைகள் எதையும் தொடங்க வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உங்களின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 - இரவு 9:00 மணி

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே. வேலை செய்யும் இடத்தில் நிலைமை சாதகமாக இருக்கும். வேலையில் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். நிதி விஷயங்கள் சாதாரணமாகவே இருக்கும். இன்று நீங்கள் பொருளாதார ரீதியாக சிக்கலை சந்திப்பீர்கள். அதுவே உங்களை ஏமாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு அத்தியாவசிய பணியை முடிக்க, நீங்கள் ஏதாவது கடன் வாங்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினருக்கு இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் மன அழுத்த சூழ்நிலைகள் ஏற்படலாம். எனவே, அவர்களுடன் தேவையற்ற விவாதத்தைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நாள் சாதாரண நாளாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 - இரவு 8:45 மணி

கன்னி

கன்னி

இன்று குடும்பத்தில் பதற்றம் ஏற்படலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் கருத்து வேறுபாடு உங்கள் இருவருக்கும் இடையே சில விவாதங்களை ஏற்படுத்தக்கூடும். இன்று நீங்கள் உங்கள் தந்தையின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது விஷயங்களை மோசமாக்கும் மற்றும் உறவில் கசப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கோபப்படுவதைத் தவிர்க்கவும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதும், உங்கள் வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்துவதும் நல்லது. நீங்கள் இன்று அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதிக பணிச்சுமை காரணமாக, இன்று நீங்கள் வீட்டிலேயே சில வேலைகளைக் கொண்டு வரலாம் அல்லது கூடுதல் நேரத்தையும் செய்யலாம். இது உங்கள் மனைவியின் மனநிலையை கெடுக்கக்கூடும். நிதி விஷயங்கள் நன்றாக இருக்கும், ஆனால் நீங்கள் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் உங்கள் பணம் நீண்ட காலமாக சிக்கிக்கொள்ளக்கூடும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் மனரீதியாக பலவீனமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 - மாலை 6:30 மணி

துலாம்

துலாம்

காதல் விஷயங்களில் உங்களுக்கு ஒரு சிறந்த நாள். உங்கள் கூட்டாளிகளுடன் போட்ட சண்டைகள் முடிவுக்கு வரும். உங்கள் இருவருக்கும் இடையில் எல்லாம் சாதாரணமாக இருக்கும். உங்கள் உறவை நீங்கள் காப்பாற்ற விரும்பினால், உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். உங்கள் மனைவியுடன் அன்பும் பரஸ்பர பிணைப்பும் அதிகரிக்கும். இன்று நீங்கள் இருவரும் சேர்ந்து உற்சாகமாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சம் கவலைப்படுவீர்கள். உங்களின் கவனிப்பினால் அவனது ஆரோக்கியம் விரைவில் முன்னேறும். பண விசயத்தில் இன்று சுமாரான நாள்தான். உங்கள் செலவுகள் அதிகரிக்கும், உடல்நலம் நன்றாக இருக்கும், வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:00 - இரவு 7:15 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே. இந்த நாளில் உங்க ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உணவு விசயத்தில் அக்கறை காட்டுங்க. உடன் பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். நம்ம சொந்தக்காரங்களே நம்மளை புரிஞ்சுக்கலையே என்ற ஏக்கம் உங்க மனதை பாதிக்கும். அமைதியாக இருங்கள் உங்களைப் பற்றி புரிந்து கொள்ள சரியான நேரம் வரும். உங்க வாழ்க்கை துணைக்கு அன்பும் ஆதரவும் தேவைப்படும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் நிதி நிலைமை சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 - இரவு 10:00 மணி

தனுசு

தனுசு

உங்க வேலை உற்சாகமாக இருக்கும். பெண்டிங் வேலைகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக உற்சாகமாக முடிப்பீர்கள். வம்பு வழக்குகள் நிலத்தகராறுகள் நீதிமன்றத்தில் உங்களுக்கு சாதகமாக முடியும். பண விசயத்தில் நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்க பொருளாதார நிலைமை சாதகமாக இருக்கும். புதிய வருமானம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். உங்க தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதே நேரம் கவனமாக இருங்க இல்லாவிட்டால் அது உங்க குடும்பத்தையே பாதிக்கும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 - மதியம் 2:45 மணி

மகரம்

மகரம்

சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. நீங்க பண விசயத்தில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் சர்ச்சை ஏற்படும். கடன் கொடுத்திருந்தால் பணத்தை திரும்ப வாங்கி விடுங்கள். வீட்டு வேலைகளில் பிஸியாக இருப்பீர்கள். உங்க மனைவியுடன் கூடுதல் நேரத்தை செலவு செய்வீர்கள். அலுவலகத்தில் தொடர்வேலைகள் உங்களை சோர்வடைய வைக்கும். உங்க உடல் நிலைமீது அக்கறை கொள்ளுங்கள். ஓய்வெடுக்க பொழுது போக்கு விசயங்களில் ஈடுபடுங்கள். நண்பர்களுடன் சிறு உல்லாச பயணங்கள் செல்லுங்கள். அப்பா உடனான மோதல் போக்கு முடிவுக்கு வரும். அதிருப்திகள் நீங்கும். படிப்படியாக அப்பா உடன் நெருக்கம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:00 - இரவு 8:15 மணி

கும்பம்

கும்பம்

சனியை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே. உங்கள் வாழ்க்கை துணையுடனான தொடர்ச்சியான மோதல்கள் உங்கள் உறவை பலவீனப்படுத்துகின்றன. நீங்கள் சரியான நேரத்தில் நிலைமையைக் கையாளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் கணவன் மனைவி இடையே பிரச்சினையை ஏற்படுத்தி விடும். காதல் விஷயங்களில் வாழ்க்கை துணையுடன் சரியாக இருக்காவிட்டால் பிரிவினையை சந்திக்க வேண்டும். சூடான பேச்சுக்கள் சிக்கலை ஏற்படுத்தும். சந்தேகத்தை கைவிடுங்க. உங்க வாழ்க்கை துணையை நம்புங்கள். பணியிடத்தில், மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதை விட உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. இல்லையெனில் மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள், இன்று உங்கள் உயரதிகாரி உங்களை கடிந்து கொள்ளலாம். உங்கள் முடிக்கப்படாத பணிகளைப் பற்றி மிகவும் கடினமான நிலைப்பாட்டை எடுக்க முடியும். அந்த பணிகளை விரைவில் முடிப்பது நல்லது. பண சமாச்சாரங்கள் சாதாரணமாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - 11:05 மணி

மீனம்

மீனம்

இன்றைய தினம் சாதாரண நாளாகவே இருக்கும். நிதி பிரச்சினையை சமாளித்து விடுவீர்கள். பழைய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள். திருமண வாழ்க்கை சந்தோஷ தருணங்களை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையேயான புரிதல் உற்சாகத்தை தரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடின உழைப்புக்கு மதிப்பு மரியாதை கூடும். குடும்ப பொறுப்புகள் கூடும். உங்கள் வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமநிலைப்படுத்த நீங்க முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. பணி அழுத்தம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:30 - மாலை 3:00 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, October 30, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion