Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...!
இந்த ராசிக்காரங்க பணம் விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
இன்று மார்ச் 2 ஆம் நாள் சந்திரன் ரிஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம்.
இன்று மார்ச் 2 ஆம் நாள் சந்திரன் ரிஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் உங்களு பணவரவு வரும். முகத்தில் அழகும் பொலிவும் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். காதல் துணையிடம் கவனமாக பேசவும். வேலையில் பதற்றமாக இருப்பீர்கள் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து விடுங்கள். இன்று உங்களின் திருமண வாழ்க்கை காதல் வாழ்க்கை கலகலப்பாக இருக்கும். வாழ்க்கை துணையின் மூலம் வசந்தகாலத்தை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.
ராசியான நிறம் : பச்சை
ராசியான எண் : 7
ராசியான நேரம் : காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை

ரிஷபம்
சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். மாலை நேரத்தில் எதிர்பாராத இனிய நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை அளிக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரவு சுமாராக இருக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும்.
ராசியான நிறம் : சிவப்பு
ராசியான எண் : 5
ராசியான நேரம் : காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை

மிதுனம்
சந்திரன் உங்க ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். உணவு விசயத்தில் கவனமாக இருங்கள் ஹெவியான உணவுகளை சாப்பிட வேண்டாம். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். காதல் வாழ்க்கை கலகலப்பாக இருக்கும். வாழ்க்கை துணையோடு செல்லும் பயணம் நன்மையை தரும். இன்று உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.
ராசியான நிறம் : மஞ்சள்
ராசியான எண் : 9
ராசியான நேரம் : காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

கடகம்
சந்திரன் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். கஷ்டமான வேலையை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து வரும் ஒரு நல்ல தகவல் இன்றைய நாளின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும் அவசரமாக முடிவு எடுப்பது புத்திசாலித்தனமல்ல. உடல் நலம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள்.
ராசியான நிறம் : ரோஸ்
ராசியான எண் : 6
ராசியான நேரம் : காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை

சிம்மம்
சந்திரன் 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் நடைபெறும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களுக்கு இன்று சந்தோஷமான நாள் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், பூர்வீக சொத்துக்கள் விற்கும் வழியில் லாபம் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பயணங்கள் நன்மை செய்யும். உடல் நலம் அற்புதமாக இருக்கும்.
ராசியான நிறம் : சிவப்பு
ராசியான எண் : 8
ராசியான நேரம் : காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

கன்னி
சந்திரன் இன்றைய தினம் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கும். கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும். பண வரவு அதிகமாக இருந்தாலும் வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது.
இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். காதல் விசயத்தில் கவனமாக இருங்கள்.
ராசியான நிறம் : நீலம்
ராசியான எண் : 10
ராசியான நேரம் : பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்
சந்திரன் இன்றைய தினம் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கோபப்பட வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை குதூகலமாக காணப்படும்.
ராசியான நிறம் : பச்சை
ராசியான எண் : 7
ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்
சந்திரன் களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். காதல் வயப்பட வாய்ப்பு உள்ளது. உங்க பிரியமானவருடன் கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்கப் போகிறது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். இன்று பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பணவரவு பாக்கெட்டை நிரப்பும். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். செல்வம் செல்வாக்கு அதிகமாகும். மண வாழ்க்கை மகிழ்ச்சியை தரும்.
ராசியான நிறம் : மஞ்சள்
ராசியான எண் : 5
ராசியான நேரம் : காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை

தனுசு
சந்திரன் உங்க ராசிக்கு ஆறாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சந்தோஷம் அதிகமாகும்.
ராசியான நிறம் : சிவப்பு
ராசியான எண் : 7
ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்
சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணவரவு சுமாராக இருக்கும் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். செலவுகள் கழுத்தை பிடிக்கும். உடல் நிலையில் ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும்.
ராசியான நிறம் : நீலம்
ராசியான எண் : 8
ராசியான நேரம் : இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை

கும்பம்
சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சாப்பாட்டு விசயத்தில் கவனமாக இருங்கள். பணபரிவர்த்தையில் எச்சரிக்கை தேவை. மன்மதன் விடும் காதல் கணை உங்கள் மீது இன்று பாயும் காதல் சுகமானது என்று பாடுவீர்கள். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் கூட்டாளிகளால் மனசங்கடங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வாழ்க்கை துணையோடு ஷாப்பிங் செல்வீர்கள் ஆடம்பர பொருட்களை வாங்க வேண்டாம். இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும் சிக்கனம் தேவை.
ராசியான நிறம் : சிவப்பு
ராசியான எண் : 9
ராசியான நேரம் : பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

மீனம்
சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவும். நினைத்த காரியம் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை விசயத்தில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். காதல் துணையோடு பேசி மகிழ்வீர்கள்.
ராசியான நிறம் : பிங்க்
ராசியான எண் : 5
ராசியான நேரம் : இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை



Click it and Unblock the Notifications











