Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
சந்திரனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா?
திங்கட்கிழமை சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாள். சிவபெருமானுக்கு விரதம் இருக்க உகந்த நாளான சோமவார தினத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும் யாருக்கு திடீர் செலவுகள் வரும் சுப விரைய செலவுகள் யாருக்கு
திங்கட்கிழமை சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாள். சிவபெருமானுக்கு விரதம் இருக்க உகந்த நாளான சோமவார தினத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும் யாருக்கு திடீர் செலவுகள் வரும் சுப விரைய செலவுகள் யாருக்கு வரும் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்று யோசிக்கிறீர்களா? இன்றைய தினம் உங்க கேள்விகளுக்கு ராசி பலன்கள் மூலம் விடை கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு செய்யுற முயற்சிகள் வெற்றி கிடைக்கும். பிசினஸ் விஷயமா வெளியூர் பிரயாணம் போறதுனால அநேக நன்மைகள் நடந்துடும். வீட்டுலயும் சுபச் செலவுகள் வந்துடும். உங்களோட வருமானமும் கூடும். சிலர் புது பொருட்களை வாங்குறதுக்கு யோகம் உண்டு. உங்க ஃபைனான்ஸ் பொசிஷனம் உயர்ந்துடும். இன்னிக்கு நீங்க செய்யுற எந்த வேலையையும் ரொம்பவே உற்சாகமா செய்வீங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல சீனியர் அதிகாரியோட கெடுபிடி இருந்தாலும், கூட வேலை பாக்குறவங்க உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க. கடன் சுமையும் இன்னிக்கு குறையும். இன்னிக்கு ரொம்ப சுலபமா செய்யவேண்டிய வேலையைக் கூட ரொம்பவே இழுத்தடிச்சி செய்வீங்க. இன்னிக்கு பண வரத்து இருந்தாலும், வரவுக்கும் செலவுக்கும் சரியா போகும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:00 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற மாதிரியான இனிய சம்பவங்கள் நடக்கும். குடும்ப உறுப்பினர்களும் நீங்க எடுக்குற எல்லா முயற்சிகளுக்கும் சப்போர்ட்டா இருப்பாங்க. உத்தியோகத்துலயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். புது நபரோட அறிமுகம் இன்னிக்கு கிடைக்கலாம். பிள்ளைங்களால உங்களோட மதிப்பும் மரியாதையும் கூடும். இன்னிக்கு விடியக்காலையிலேயே நல்ல செய்தி உங்களை தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
அதிர்ஷ்ட எண் : 41
சாதகமான நேரம் : இரவு 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

கடகம்
கடக ராசி நேயர்களே, இன்னிக்கு கல்யாண சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமா முடியும். இதுவரைக்கும் வருமா வராதான்னு இருந்த கடன் பாக்கியும் இன்னிக்கு வசூலாகும். பிசினஸ்ல ஃப்ரண்ட்ஸுங்க கொடுக்குற ஐடியாவுனால லாபம் பெருகும். குடும்பத்துலயும் மகிழ்ச்சி பொங்கும். இன்னிக்கு நீங்க நினைச்ச காரியத்தை நல்லபடியா முடிச்சி காட்டுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:25 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க மூலமா சுபச் செய்திகள் உங்களை தேடி வரும். பிசினஸ்ல இருந்து வந்த போட்டி பொறாமையும் இன்னிக்கு குறையும். வேலை தேடுறவங்களுக்கு புது உத்தியோகம் இன்னிக்கு கிடைக்க சந்தர்ப்பம் உண்டாகும். இன்னிக்கு உங்களோட ஹெல்த் கண்டிஷன்ல புதுப் பொலிவும் தெம்பும் உண்டாகும். அதனால மனசலவுள ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 34
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 4:25 மணிவரை

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகம், பிசினஸ்ல சம்பந்தமா புது முயற்சிகளை செய்யலாம். புதுசா செய்யுற இன்வெஸ்ட்மென்ட் நல்ல லாபத்தை கொடுக்கும். பிள்ளைங்க மூலமா குடும்பத்துலு சுபச் செய்திகள் உங்க காதுக்கு வரும். பண வரத்தும் தேவைக்கு தகுந்த மாதிரி வரும். இன்னிக்கு நீங்க செய்ய நினைச்ச காரியத்தை நல்லபடியா செஞ்சி முடிப்பீங்க. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 34
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 5:55 மணிவரை

துலாம்
துலா ராசி நேயர்களே, இன்னிக்கு பிள்ளைங்களோட படிப்புக்காக செலவு செய்வீங்க. பிசினஸ்லயும் லாபம் எதிர்பாத்த அளவுக்கு இருக்காது. கவர்மெண்ட் மூலமா எதிர்பாத்த உதவியும் இன்னிக்க கிடைக்கும். குடும்பத்துல இதுவரைக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் குறையும். கல்யாணம், சுபகாரிய முயற்சிகள்ல தடங்கல், இடைஞ்சல் ஏற்படலாம். இன்னிக்கு சேமிப்பும் குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : காலை 9:40 முதல் மாலை 5:30 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, வண்டி வாகனத்துல வெளிய போகும்போது கூடுதல் எச்சரிக்கை மற்றும் கவனத்தோட போறது நல்லது. சுப காரிய நிகழ்ச்சிகளை ஒத்திப்போடுறது நல்லது. தேவையில்லாத மனக்குழப்பம் இருக்கும்கிறதுனால, கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வீட்டுலயே இருக்குறது நல்லது. பண விசயத்துல கவனமா இருக்குறது நல்லது. யாருக்கும் பணம் கொடுத்து சிக்கல் மாட்டிக்காதீங்க. பிசினஸ்ல பெரிய அளவுல பணத்தை போட்டு முடக்காதீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல புதுசா கூட்டாளிகள் ஜாய்ன் பண்ணுவாங்க. சொந்தக்காரங்க மூலமா அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளும் இன்னிக்கு கைகூடும். உத்தியோகத்துல நீங்க நினைச்ச இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். குடும்பத்துலயும் ஒத்துமை நிலவும். கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடிடும். இன்னிக்கு நீங்க செய்ய நினைச்ச எல்லா காரியமும் வெற்றிகரமா நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 9:00 மணிவரை

மகரம்
மகர ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல உங்க திறமைக்கு ஏத்த மாதிரி ப்ரமோஷன் கிடைக்கும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமான வழக்குல உங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கும். உங்களுக்கும், குடும்பத்துலயும் மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற மாதிரி தரமான சம்பவங்கள் நடந்துடும். பிள்ளைங்களும் படிப்புல ஆர்வம் காட்டுவாங்க. கடன் பிரச்சனையும் இன்னிக்கு தீரும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : மாலை 5:55 முதல் இரவு 8:15 மணிவரை

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு பிள்ளைங்களால தண்டச் செலவுங்க வந்து கையை கடிக்கும். செய்யுற வேலையும் இன்னிக்கு மந்தமா தான் நடக்கும். பிசினஸ்ல சின்னச் சின்ன மாற்றம் செய்யுறதனால கொழுத்த லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஃபைனான்ஸ் பிரச்சனையை சமாளிக்க கொஞ்சம் சிக்கனமா செலவழிச்சா நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

மீனம்
மீன ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. பெத்தவங்களோட சப்போர்ட் மனசுக்கு இதமாவும், புது நம்பிக்கையையும் கொடுக்கும். பிசினஸ்ல ஃப்ரண்ட்ஸுங்களோட சப்போர்ட் கிடைக்கும். அதனால ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க. இன்வெஸ்ட்மெண்ட்டும் இன்னிக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். வீடடுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால திடீர் செலவுகளும் வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் இரவு 7:00 மணிவரை



Click it and Unblock the Notifications