இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடி வருது...

வெள்ளிக்கிழமை சுக்கிர வாரமாகிய இன்று பிப்ரவரி 21ஆம் நாள் சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

வெள்ளிக்கிழமை சுக்கிர வாரமாகிய இன்று பிப்ரவரி 21ஆம் நாள் சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் கவனமாக இருப்பது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சந்திரன் இன்று ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலை செய்யும் இடத்தில் வேலை அதிகமாக இருக்கும். வேலையையும் குடும்பத்தையும் நன்றாக பேலன்ஸ் செய்வீர்கள். வீட்டில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். நினைத்த காரியம் நிறைவேறும். இன்று குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். இன்று காதலான நாள். மனதிற்கு பிடித்தவருடன் ஆலய தரிசனம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வயலட்

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் இன்று ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் மன ஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செலவு செய்யவும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். பண வரவு அதிகமாகும் கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : காலை 7: 00மணி முதல் பிற்பகல் 1:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தேவையற்ற மனக்குழப்பம் ஏற்படும். இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் பணம் கடன் வாங்கி கொடுக்காதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12: 00மணி முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கடகம்

கடகம்

சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஏற்கனவே சனி உங்க ராசியின் மீது விழுகிறது இப்போது சந்திரன் பார்வையும் உங்க ராசியின் மீது விழுகிறது. இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : காலை 09 : 00மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்று உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும். சுபசெலவுகள் உண்டாகும். காதல் துணையுடன் சந்தோஷ பயணம் செல்வீர்கள். நிம்மதியும் சந்தோஷமும் அதிகமாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நேரம் : காலை 06 : 00மணி முதல் காலை 11 :00 மணிவரை

கன்னி

கன்னி

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகள் மூலம் சந்தோஷ சம்பவங்கள் அதிகமாகும். சண்டைகள் நடந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன்கள் ஓரளவு குறையும்.

அதிர்ஷ்ட நிறம் : லாவண்டர்

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : காலை 11 : 00மணி முதல் முற்பகல் 1 :00 மணிவரை

துலாம்

துலாம்

சந்திரன் இன்று உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். குல தெய்வ வழிபாடு குடும்பத்தை காக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : காலை 10 : 00மணி முதல் நண்பகல் 12 :30 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்று உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வெளிவட்டார நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். இன்று தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் உங்க தைரியம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நேரம் : காலை 7 : 50 மணி முதல் காலை 11 :30 மணிவரை

தனுசு

தனுசு

சந்திரன் இன்று உங்க ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். பண வரவு அதிகமாகும் கூடவே செலவும் வரும். இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : இரவு 7 : 50 மணி முதல் இரவு 11 :00 மணிவரை

மகரம்

மகரம்

சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். மனதில் தேவையில்லாத சஞ்சலம் ஏற்பட்டு மறையும். இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். எந்த செயலிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் யாவும் அனுகூலப் பலனை அளிக்கும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். பணத்தை பத்திரமாக செலவு செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 : 10 மணி முதல் இரவு 8 :00 மணிவரை

 கும்பம்

கும்பம்

சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணவரவு அதிகமானலும் கூடவே செலவும் வரும். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை உண்டாகும். வீட்டில் பெற்றோருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும். வேலையில் புதிய நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நேரம் : மாலை 3 : 20 மணி முதல் இரவு 7 :00 மணிவரை

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். செய்யும் தொழிலில் லாபம் வரும். இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. அனைத்து தேவைகளும் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 4 : 20 மணி முதல் காலை 8 :00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, February 21, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion