Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
இஷ்ட தெய்வ அருளை தன்வசம் வைத்திருக்கும் ராசி எது தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்சினைகள் நமக்கு நீங்கும். அதேபோல் நீங்கள் எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உருவாகும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உங்களுடைய வாதத்திறமையினால் புகழ் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதையும் அமைதியுடன் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். புதிய நபர்களால் தேவையில்லாத சிறு சிறு பிரச்னைகள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட வீண் அலைச்சல்கள் உண்டாகும். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மிதுனம்
நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இழுபறியாக இருநு்து வந்த வேலைகள் முடியும். வியாபாரங்களில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உங்களுடைய திருமண முயற்சிகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் திறமையை வெள்ப்படுத்துவதற்கு சாதகமான சூழல்கள் அமையும். சொந்த பந்தங்களுடைய வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

சிம்மம்
வீட்டில் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களுடைய உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களுடைய நட்பினால் புத்துணர்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத செலவுகளினால் நெருகு்கடியான சூழல் அமையும். மனைவியின் வழியிலாக சுப செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
மற்றவர்களுடைய பிச்சினைகளில் தலையிடுகிற போது, பொறுப்புணர்ந்து செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்லுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட போகாதீர்கள். கூட்டுத் தொழிலில் விருத்தி ஏற்படும். நெருங்கிய நபர்களால் மன வருத்தங்கள் நேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

துலாம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பொருள் சேர்க்கைகள் உண்டாகும். பரம்பரை சொத்துக்களுக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய மதிப்புகள் கூடிக்கொண்டே போகும். உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உத்தியோகத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகிக்கும். வெளியூா் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். இருப்பினும் அந்த அலைச்சல்கள் ஆதாயத்தைக் கொடுக்கும். தொழிலில் உங்களுக் லாபம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளினால் அனுகூலங்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளால் பண நெருக்கடி குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய எண்ணஙற்களை அறிந்து நடந்த கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களுடைய மதிப்புகள் கூடும். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பல புதிய யுக்திகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
மனதில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பணிபுரியுட் இடத்தில் சக ஊழியர்களால் அலைச்சல்கள் உண்டாகும். நினைத்த பணிகளில் கொஞ்சம் கால தாமதங்கள் ஏற்படும். கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
விலையுயர்ந்த பொருள்களை வீட்டுக்காக வாங்குவீர்கள். வியாபாரத்தில் நிலுவையில் இருந்து வந்த பாக்கிகள் முழுவதும் வசூலாகும். முக்கியப் பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
இதுவரை இருந்து வந்த சிறுசிறு நெருக்கடியான சூழல்கள் அகலும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிர்ப்பாகளால் இதுவரை இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தடைபட்ட காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications