Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
செவ்வாயின் ஆற்றலைப் பெற்று அமோகமாக இருக்கும் அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
Recommended Video
12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். 12 ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் அது இருக்கும் இடத்தின் தாக்கத்தைப் பொறுத்தும் பலன்களைத் தரும்.

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நம்மை விட்டு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து நடந்து கொள்ள முடியும்.

மேஷம்
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். புதிய ஈடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்கான செயல்திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக மனதுக்குள் நினைத்து வைத்திருந்த காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த உறவுகள் மேம்படும். புதுவித ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் இருக்கும்.

ரிஷபம்
நிர்வாகத்தில் உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்கள் மூலமாக புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு அதன்மூலம் லாபமும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கொஞ்சம் காலதாமதமாகக் கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்களினால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்
தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களைக் கணடு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களிடம் உங்களுடைய மதிப்புகள் கூடும். வாகனங்களில் உண்டாகும் பழுதுகளைச் சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பண வரவு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் சில அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள். சுய தொழில் சம்பந்தமாக முயற்சிகள் மேலோங்கிக் காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் குறைந்து மகிழ்ச்சியாகக் காணப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்
உத்தியோகம் தொடர்புடைய சில முக்கிய முவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களைச் செய்ய முற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். வாகனப் பயணங்கள் மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

கன்னி
உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுடைய செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்த்தல் நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளினால் கால தாமதங்கள் உண்டாகும். உணவு விஷயங்களில் கொஞ்சம் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்
வீட்டில் பிள்ளைகளுடைய எண்ணங்களை அறிந்து செயல்படுங்கள். செய்கின்ற தொழிலில் பல தடைகளைத் தாண்டி, நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் சாதகமான சூழல்கள் உண்டாகும். விரும்பிய பொருள்களை வாங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
புதிய நபர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவுடன் பழகுங்கள். உறவினர்களின் மூலமாக உங்களுக்கு சாதகமான பலன்கள் உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்புகள் கூடும். உடன்பிறந்த சகோதரர்களிடம் இருந்து வந்த மன வருத்தங்கள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு
குடும்பத்தில் உள்ளவர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகமாகும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணி நிமித்தமான பயணங்களில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பண வரவுகளினால் திருப்தியான சூழ்நிலை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

மகரம்
நினைத்த செயல்களைச் செய்து முடிப்பதில் கொஞ்சம் இழுபறியான சூழல் இருக்கும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். வாகனங்களில் பயணம் செய்யும்போதும் கொஞ்சம் நிதானம் வேண்டும். எதிர் பாலினத்தவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பழைய பிரச்சினைகளால் மன வருத்தங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய குண நலன்களில் மாற்றங்கள் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்னைகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். வெளியூா் வேலை முயற்சிகளினால் நல்ல செய்திகள் உண்டாகும். இதுவரையில் இழுபறியில் இருந்து வந்த பணிகளைச் சிறப்பாக செய்து முடிக்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
நண்பர்களின் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொது சபைகளில் ஆதரவான சூழல்கள் உண்டாகும். மனதில் புதிய தெம்புடன் புத்துணர்ச்சியுடன் புதிய செயல்களைச் செய்யத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த செயல்களினால் மகிழ்ச்சியான தருணங்கள் அமைய வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியான சூழல் இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
