Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப எச்சரிக்கையாக இருங்க...
மே மாதத்தின் முதல் நாள், இந்த நாளில் யாருக்கெல்லாம் பிரச்சினை வரும், யாருக்கு பணவரவு அதிகரிக்கும், யாருக்கு செலவு வரும் யாருக்கு மருத்துவ செலவு வரும், யாருடைய ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று யோசிக்க
மே மாதத்தின் முதல் நாள், இந்த நாளில் யாருக்கெல்லாம் பிரச்சினை வரும், யாருக்கு பணவரவு அதிகரிக்கும், யாருக்கு செலவு வரும் யாருக்கு மருத்துவ செலவு வரும், யாருடைய ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் இன்றைய ராசிபலன் மூலம் விடை கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு எதிர்பார்த்த இடத்துல இருந்து ஹெல்ப் கிடைக்குறதுல தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்திலும் சீனியர் அதிகாரிங்க கிட்ட கொஞ்சம் தன்மையா பேசினா பிரச்சனை வராம அவாய்ட் பண்ணிடலாம். நினைச்ச காரியத்தை முடிக்குறதுல இடைஞ்சல் தடங்கல் வரலாம். இன்னிக்கு உங்க அம்மா உடைய ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு பிள்ளைங்க மூலமா இனிப்பான செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு எதிர்பாத்த மாதிரி ட்ரான்ஸ்ஃபர் கிடைக்க சான்ஸ் இருக்கு. இருந்தாலும், நிதானமா யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. எடுக்குற முயற்சிங்கள்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்துலயும் எல்லோரும் ஒத்துமையா இருப்பாங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை

மிதுனம்
மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த போட்டி, பொறாமை எல்லாம் விலகி ஓடிடும். சுபகாரிய முயற்சிங்களும் நல்ல பலனை கொடுக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்குறதுல ரொம்பவே ஆர்வமா இருப்பாங்க. இன்னிக்கு பண வரத்து அற்புதமா இருக்கும்கிறதுனால, ஃபைனான்ஸ பொசிஷனும் ரொம்ப சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:20 மணிவரை

கடகம்
கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்களோட வருமானம் கூடுறதுக்கு பிரகாசமான வாய்ப்பிருக்கு. உத்தியோகத்துலயும் உழைப்புக்கு ஏத்தமாதிரி நல்ல பலன் கிடைச்சிடும். பிள்ளைங்களும் இன்னிக்கு உங்க கிட்ட ரொம்பவே பாசமா இருப்பாங்க. நெனைச்ச காரியம் நீங்க நெனச்ச மாதிரியே நிறைவேறிடும். அதனால மனசளவுல ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து போறது நல்லது. உத்தியோகத்துலயும் கூட வேலை பாக்குறவங்களோட ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்துல தேவையில்லாத பிரச்சனைங்க முளைச்சி உங்க டென்ஷனை கூட்டிடும். இன்னிக்கு உங்க பண வரத்து மந்தமா இருந்தாலும், அதுக்கு நேர் மாறா செலவுங்க வரிசை கட்டி நிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ கலர்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

கன்னி
கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க மத்தியில நெருக்கம் கூடிடும். அதனால வீட்டுலயும் ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க. கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். குடும்பத்துல சுபகாரிய செலவுங்க வந்துடும். பேங்க் பேலன்ஸும் கூடிடும். மொத்தத்துல இன்னிக்கு உங்க திறமையை நிருபிச்சி காட்டுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

துலாம்
துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு வீட்டுல சந்தோஷமான சூழ்நிலை நிலவிடும். புதுசா சாமான்களையும் வாங்குவீங்க. சுபகாரியம் சம்பந்தப்பட்ட நல்ல தகவல் உங்களை தேடி வரும். பெரிய மனுஷங்களோட அறிமுகம் கிடைச்சிடும். பிசினஸ்ல எதிர்பாத்ததை விட லாபம் அமோகமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்களால உங்களுக்கு நல்லது நடந்துடும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யமும் சந்தோஷமும் கூடிடும். சொந்தக்காரங்க கிட்ட எதிர்பாக்காம மனஸ்தாபம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால தேவையில்லாம பிரச்சனை உண்டாகலாம், எச்சரிக்கையா இருக்க பாருங்க. ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

தனுசு
தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, வீட்டுலயும் சொந்தக்காரங்க கிட்டயும் அநாவசிய வாக்குவாதத்தை அவாய்ட் பண்றது நல்லது. அதோட கொரோனா பீதி இருக்குற இந்த சந்தர்ப்பத்துல வீட்டை விட்டு வெளிய போகாதீங்க. செய்யுற வேலையில இடைஞ்சல் தடங்கல் வரலாம். புதுசா பிசினஸ் முயற்சி எதையும் பண்ணாதீங்க. ஹெல்த் கண்டிஷன்ல இன்னிக்கு பாதிப்புங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : இரவு 8:00 முதல் இரவு 12:30 மணிவரை

மகரம்
மகர ராசிக்காரங்களே, இன்னிககு உத்தியோகத்துல வேலைப்பளு கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கு. மனசுல நிம்மதியும் சந்தோஷமும் கூடிடும். கல்யாணம், சுபகாரியம் சம்பந்தமா பேச்சு வார்த்தை நடத்த இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. குடும்பத்துலயும சந்தோஷமான சம்பவங்கள் நடந்துடும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

கும்பம்
கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்களால வீட்டுல சந்தோஷம் கூடிடும். சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில நல்ல பலன் கிடைக்கும். பிசினஸ்ல கூட்டாளிங்களால புது ஆர்டர் கிடைக்கும். பிள்ளைங்களுக்கு படிப்புல ஆர்வம் கூடிடும். அதனால மனசுல நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

மீனம்
மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ளாற சின்னச்சின்ன பிரச்சனைங்க வரலாம். நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து தன்மையா பேசுனீங்கன்னா பிரச்சனை பெருசாகாம தப்பிச்சிடலாம். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால தண்டச்செலவுங்க வந்துடும். பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைச்சிடும். பிள்ளைங்க மூலமா சில எதிர்பாக்காத பிரச்சனைங்க முளைக்கலாம். உத்தியோகத்துல திடீர்னு வீண் பிரச்சனைங்க முளைக்கலாம். எச்சரிக்கையா இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை



Click it and Unblock the Notifications