இன்னைக்கு ஆபிஸ்ல யாருக்கெல்லாம் பிரச்சினை வரும் தெரியுமா?

இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்களுக்கு பணம் வருமா? ஏதாவது சேமிக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்கிறீங்களா? உங்க எல்லா கேள்விகளுக்கும் ராசி பலன

இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்களுக்கு பணம் வருமா? ஏதாவது சேமிக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்கிறீங்களா? உங்க எல்லா கேள்விகளுக்கும் ராசி பலன்கள் மூலம் ஈஸியான விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னைக்கு ஆஃபீஸ் வேலை பாக்குறவங்களுக்கு எதிர்பாத்துக்கிட்டு இருக்குற ட்ரான்ஸ்பர் கிடைக்க வாய்ப்பிருக்கு. சேவிங்ஸும் அதிகரிக்கலாம். பிசினஸ் பண்றவங்களுக்கு பார்ட்னரோட உதவியால லாபம் கொட்ட போகுது. ஃபேமிலிக்கு உள்ளாற இருந்துவந்த மனக்கசப்பு சரியாகிடும். பசங்களும் ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாங்க. வீட்டுல சுப நிகழ்ச்சிங்க நடத்துறதுக்கான பேச்சு பிரயோஜனமா இருக்க கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் அவ்வளவு நல்லா இல்லை. கூட வேலை பாக்குறவங்களால பிரச்சனை வர்றதுக்கு சான்ஸ் இருக்கு, அதனால கவனமா நடந்துக்கோங்க. செய்ய நெனைச்ச வேலையிலும் முட்டுக்கட்டை வரலாம். பிசினஸ் பண்றவங்களுக்கு பார்ட்னர் ஒத்தாசையால புதுசா ஆர்டர் கிடைக்க வாய்ப்பிருக்குது. சொந்தக்காரங்களால பிரயோஜனம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, ஆஃபீஸ் வேலையில ஒரே டென்ஷனோட இருப்பீங்க. அநாவசிய செலவுங்க வந்து கையை கடிக்கலாம். அதனால கொஞ்சம் நிதானமா யோசிச்சி நடக்குறதுக்கு பாருங்க. பொது இடத்துல வாய் வார்த்தையை விட்டு மாட்டிக்காதீங்க. வெளியூர் போறதா இருந்தா எச்சரிக்கையா இருந்துக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை

கடகம்

கடகம்

ஆஃபீஸ் வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு ப்ரேமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு. அந்த சந்தோஷத்துல செய்யுற வேலையை சந்தோஷத்தோடயும், முழு மன திருப்தியோடயும் செஞ்சி முடிப்பீங்க. நீங்க செய்யுற முயற்சிங்களுக்கு சொந்தக்காரங்களும் சப்போர்ட்டா இருப்பாங்க. எக்ஸ்ட்ராவா பணத்தை சேத்து வைக்குறதுக்கு வருமானம் கூடிடும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களோட சப்போர்ட் கிடைக்கும். சொந்த பிசினஸ் பண்றவங்களுக்கு புதுசா பிசினஸ் ஆர்டர் கிடைக்க வாய்ப்பிருக்குது. ஃபேமிலியிலயும் இதுவரைக்கும் தொல்லையா இருந்து பிரச்சனை காணாம போயி மனசு ரிலாக்ஸ் ஆகிடும். பணப்பிரச்சனையும் சரியாகி முன்னேறுறதுக்கு வழி பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : பிற்பகல் 4:00 முதல் இரவு 8:20 மணிவரை

கன்னி

கன்னி

ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களால டென்ஷனும் எக்ஸ்ட்ராவா வேலை செய்யுற நிலைமையும் உண்டாகலாம். கைமாத்து கொடுக்கல் வாங்கல் இருந்தா கொஞ்சம் சூதானமா நடந்துக்கோங்க. யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்டிருந்தீங்கன்னா இன்னிக்கு கண்டிப்பா கிடைக்கும். ஃபேமிலியில யாருக்காவது மருந்து மாத்திரைன்னு திடீர் செலவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. வெளியூர் பிரயாணம் அலைச்சலையும் டென்ஷனையும் கொடுக்கும். சொந்தக்காரங்களால இடைஞ்சல் உண்டாகலாம், கவனமா நடந்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை

துலாம்

துலாம்

பிசினஸ் பண்றவங்க கஷ்டப்பட்டு உழைச்சத்தான் அதோட பலன் கிடைக்கும்கிறதை மனசுல வச்சிக்கிட்டு நடக்க பாருங்க. வெளிய போறப்ப சாமிய கும்பிட்டிட்டு போறது நல்லது. வண்டி வாகனத்துனால அநாவசிய செலவுங்க வந்து வாய்க்கலாம். ஃபேமிலியிலயும் அநாவசிய மனஸ்தாபத்தை அவாய்ட் பண்றதுக்காக அட்ஜஸ் பண்ணிட்டு போறது நல்லது. உங்க ஹெல்த் மேலயும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் பிச்சிக்கிட்டு போகும். ஃபேமிலியில சுபகாரிய பேச்சுங்க நடக்கும். இன்னிக்கு நீங்க எந்த வேலையை செஞ்சாலும் ஆத்ம திருப்தியோட சந்தோஷமா செஞ்சி முடிப்பீங்க. பெத்தவங்க மேல இருந்த மனஸ்தாபம் கரைஞ்சி போயிடும். பூர்விக சொத்து சம்பந்தமா எதிர்பார்க்காம பணம் வர்றதுக்கு சந்தர்ப்பம் வாய்க்கும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு நீங்க வீட்டு பெரியவங்களோட மனஸ்தாபத்துக்கு உள்ளாகலாம், கவனமா நடந்துக்குறது நல்லது. அத்தோட உங்க ஹெல்த் கண்டிஷன்லயும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்குறது நல்லது. பசங்களால அநாவசிய செலவுங்க உண்டாகலாம். பிசினஸ்ல கொஞ்சம் ஜாக்கிரரையா நடந்துக்கிட்டா அநாவசியமா நஷ்டம் வராம அவாய்ட் பண்ணிடலாம். ஆஃபிஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு கொஞ்சம் வேலைப்பளு ஜாஸ்தியா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

மகரம்

மகரம்

ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க ட்ராவல் பண்றதுனால எக்ஸ்ட்ரா வருமானம் கிடைக்க சந்தர்ப்பம் கிடைக்கும். வீட்டுலயும் சந்தோசமும் ஒத்துமையும் தாண்டவமாடும். ஃபிரண்ட்ஸுங்களோட இருந்த மனஸ்தாபம் காணாம போயிடும். ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு பார்ட்னரோட ஹெல்ப் கிடைக்கும். வீட்டுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் பிற்பகல் 1:30 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு உங்களோட பாக்கெட் கொஞ்சம் கணம் கம்மியா இருக்கு. அதனால சிக்கனமா செலவு பண்றது நல்லது. வீட்டுல இருக்குறவங்களோட சின்னதா மனஸ்தாபம் உண்டாகலாம். கவனமா நடந்துக்கோங்க. நீங்க நெனைக்குறது நடக்கணும்னா கூட இருக்குறவங்க கிட்ட கொஞ்சம் அனுசரிச்சி போயிடறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சாஃப்ரூன்

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிங்க எல்லாமே ஜெயமா முடியும். ஃபேமிலியோட எங்கயாச்சும் வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அதனால வெளி வட்டாரத்துலயும் புதுசா ஃப்ரண்ட்ஸுங்க கிடைப்பாங்க. பிசினஸ்ல இதுவரைக்கும் இருந்த தொந்தரவும் போட்டி பொறாமையும் கொஞ்சம் குறையுறதுக்கு வாய்ப்பிருக்கு. கூடப்பொறந்தவங்களால பிரயோஜனம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 29

சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion