இன்றைக்கு எந்த ராசிக்காரங்க வெளியூர் போகக்கூடாது தெரியுமா?

இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்களுக்கு பணம் வருமா? ஏதாவது சேமிக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்கிறீங்களா?

இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்களுக்கு பணம் வருமா? ஏதாவது சேமிக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்கிறீங்களா? உங்க எல்லா கேள்விகளுக்கும் ராசி பலன்கள் மூலம் ஈஸியான விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

நீங்க உங்க வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீங்க. விஐபிக்களுடன் சந்திப்பு நடக்கும். தேர்வு நேரம் என்பதால் உங்க பிள்ளைகள் ரொம்ப அக்கறையாக படிப்பாங்க. நீங்க வெளியூர் பயணம் செய்யலாம் உங்க தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் நல்ல பலன் கிடைக்கும். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உங்களோட உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க, ஹெல்தி ஃபுட்ஸ் சாப்பிடுங்க. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து போங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 10:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

நீங்க இன்னைக்கு ரொம்ப மனக்குழப்பத்தோட இருப்பீங்க. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால நீங்க செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும் யாரை நம்பியும் எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனமா இருங்க. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வெளியூர் பயணங்கள் போகாதீங்க. கூடுமானவரைக்கும் வீட்டுக்குள்ளேயே இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையா இருங்க. தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படாதீங்க. எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் இரவு 7:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

உங்க வீட்ல நீங்க ரொம்ப உற்சாகமாகவும் குதூகலமாகவும் இருப்பீங்க. சுபசெய்திகள் வந்து சேரும். உங்க வீட்ல சகோதரர்கள் கிட்ட இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளியூர் பயணம் போகலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் எல்லாம் சுமூகமாக முடியும். இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : விடிகாலை 4:10 முதல் பிற்பகல் 3:50 மணிவரை

கடகம்

கடகம்

இன்றைக்கு உங்க வீட்டில் சுப காரியம் நடக்க வாய்ப்பு இருக்கு. உங்க வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணம் போக வாய்ப்பு வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுக்கு இன்றைக்கு திருமண முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வரும். உங்க வருமானம் பெருகும். இன்று காதலான நாள் ரொமான்ஸ் நினைவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : மாலை 6:15 முதல் இரவு 11:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னைக்கு நீங்க உங்க பேச்சில் நிதானமாக பேசுங்க. வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மனஉளைச்சல் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் கொஞ்சம் ஆர்வம் குறையும். அதுவே உங்களுக்கு டென்சனை கொடுக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனமாக இருங்க இல்லாட்டி கீழே விழுந்து உடைஞ்சு போக வாய்ப்பு இருக்கு. பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. காதல் வாழ்க்கையில் கவனமாக இருங்க. கணவன் மனைவி பிரச்சினை தீரும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கன்னி

கன்னி

இன்று உங்க அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம் கவனமாக இருங்க. குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்க பேச்சில் நிதானம் தேவை. இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீட்டில் அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். பழைக கடன்களை அடைக்கும் அளவிற்கு பணம் வருமானம் வரும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : விடிகாலை 5:20 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்

துலாம்

உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்களால் சேர்க்கை உண்டாகும்.இன்று நீங்க எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி சேமிப்பு உயரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக அமையப்போகிறது.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 38

சாதகமான நேரம் : காலை 8:25 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

நீங்க இன்றைக்கு நிதானமாக இருக்கவும். உங்களுக்கு பணவரவு அதிகமாகும். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். ரொம்ப சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். இன்று நீங்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணம் உள்ளிட்ட சுப காரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். கவனமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 6:05 முதல் இரவு 9:30 மணிவரை

தனுசு

தனுசு

இன்று உங்க குடும்பத்தில ஒற்றுமையாக இருப்பீங்க. நீங்க இன்னைக்கு எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீங்க. பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் போக வாய்ப்பு வரும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்க எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் நடக்கும். உங்க தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொறுமையும் நிதானமும் தேவை. தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். ஆலய வழிபாடு மன அமைதியை தரும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 31

சாதகமான நேரம் : மாலை 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

மகரம்

மகரம்

நீங்கள் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிடைக்கும். பணவரவுகள் நன்றாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. பொறுமையோடு இருந்தால் வெற்றிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். நோய்கள் நீங்கும் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் இரவு 8:05 மணிவரை

கும்பம்

கும்பம்

உங்களின் சந்தோஷ தருணங்கள் அதிகமாகும். இன்று உங்களின் குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கல்வி விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் நண்பகல் 12:00 மணிவரை

மீனம்

மீனம்

உங்களுக்கு இன்றைக்கு புதிய வேலை கிடைக்கும். உங்க வேலையில் வெற்றி கிடைக்கும். இன்றைக்கு நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். இன்று உறவினர்களால் சந்தோஷ விசயங்கள் அதிகம் நடைபெறும். ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்க நிதி நிலைமை ரொம்ப திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : விடிகாலை 5:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, March 17, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion