Latest Updates
-
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும்
வீட்ல மனைவி அடிச்சா கூட இன்னைக்கு நீங்க திருப்பி அடிக்காதீங்க...
இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்களுக்கு பணம் வருமா? ஏதாவது சேமிக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்கிறீங்களா? உங்க எல்லா கேள்விகளுக்கும் ராசி பலன
இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்களுக்கு பணம் வருமா? ஏதாவது சேமிக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்கிறீங்களா? உங்க எல்லா கேள்விகளுக்கும் ராசி பலன்கள் மூலம் ஈஸியான விடை கிடைக்கும்.

மேஷம்
சந்திராஷ்டமத்தால் கடந்த இரண்டு நாட்களாக உங்களுக்கு இருந்த மனக்குழப்பம் இன்றைக்கு நீங்கும், இனி நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக ஃபீல் பண்ணுவீங்க. இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று உயரும். வியாபாரத்தில் லாபம் வரும். அரசு ஊழியர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நல்லகாரியங்கள் இன்றைக்கு நடக்கும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது. யாரிடமும் கோபமாக பேசாதீங்க. பணம் விசயத்தில் கவனமாக இருங்க. வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் லேட்டாகும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வீண் வம்பு வழக்குகள் வேண்டாம். வீட்லயே கம்முன்னு ரெஸ்ட் எடுங்க.

மிதுனம்
இன்றைக்கு ரொமான்ஸ் ஆன நாள். வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகமாகும். இன்றைக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். சொந்த பந்தங்களுடன் சேர்ந்து உற்சாகமாக பயணம் செல்வீர்கள்.

கடகம்
இன்றைக்கு உங்க வீட்டில் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களை நீங்கள் அழகுபடுத்திக்கொள்வீர்கள். உங்க உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று கடன்கள் தீரும் அளவிற்கு பணவரவு வரும்.

சிம்மம்
நீங்கள் எதிர்பார்த்த காரியம் நிறைவேற அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைபளுவால் உடல் சோர்வு, மனஉளைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் நன்மைகள் நடைபெறும். ஐந்தாம் வீட்டில் நான்கு கிரகங்கள் கூடியிருப்பதால் பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கன்னி
உங்க அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரலாம் உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமண சுப முயற்சிகள் பற்றி இன்றைக்கு பேச வேண்டாம். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். ஆலய வழிபாடு மன அமைதியை தரும்.

துலாம்
இன்றைக்கு நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து மன அமைதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம்
குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். பணவரவு அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் கவனமாக இருங்க கோபமாக பேசாதீங்க. ஆலய வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

தனுசு
இன்றைக்கு நீங்க கொஞ்சம் குழப்பத்தோட இருப்பீங்க. இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவீங்க. உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். அலுவலகத்திற்கு உற்சாகத்தோடு பேய் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்
இன்றைக்கு உங்களுக்கு பணவரவு அதிகமாக வந்தாலும் செலவுகளும் கூடவே வரும் அதனை சுப செலவுகளாக மாற்றுங்கள். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார ரீதியாக எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

கும்பம்
இன்றைக்கு உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மூத்த உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மைகள் நடைபெறும். செய்யும் தொழிலில் லாபம் வரும்.

மீனம்
உங்களுக்கு இன்றைக்கு பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். வேலையில் பணிச்சுமை குறையும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். வீட்டில் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
