Latest Updates
-
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - இப்படி செய்யுங்க.. நாக்குல அரிப்பே ஏற்படாது! -
இரத்த சர்க்கரை குறையணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 10 காய்கறிகளை சாப்பிடுங்க.. -
டிசம்பர் மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 26, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க குடும்பத்தில் புயலடிக்கப் போகுதாம் -
18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது: 2028 வரை இந்த 3 ராசிக்காரங்கள யாராலும் அசைக்க முடியாது! -
திரிகிரக யோகம் சிம்ம ராசியில் உருவாவதால் வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உடல் எடையை குறைப்போருக்கான ஓட்ஸ் உப்புமா - இந்த பக்குவத்துல ஒருடைம் செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
ஃபெங் சூயி படி மூங்கில் செடியை வீட்டின் இந்த இடத்தில் வாங்கி வையுங்க.. வீட்டில் செல்வம் பெருகும்! -
கமகமக்கும் முள்ளங்கி சுண்டல் கார குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் அஷ்டலட்சுமிகள் எந்த ராசிப்பக்கம் இருக்குனு தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
Recommended Video
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
வழக்கத்தை விடவும் கொஞ்சம் கூடுதல் தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் அனுகூலமான செய்திகள் உண்டாகும். பொது சேவைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். கால்நடைகளிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வாகனப் பயண்ஙகளில் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். வணிகம் சம்பந்தமான தொழில் செய்கின்றவர்களுக்கு கொஞ்சம் மந்தமான சூழ்நிலை உண்டாகும். உங்களுக்கு இன்று பிரபலமானவர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் கொஞ்சம் அனுகூலமான சூழ்நிலை உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் பிள்ளைகளிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். புதிய நபர்களின் உதவியினால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உறவுகளுடைய ஆதரவு உங்களுக்குப் பெருகும். மனதுக்கு நெருக்கமானவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்
பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வெளியூரில் இருந்து சுப செய்திகள் வந்து சேரும். எதிர்பாலின மக்களிடம் கொஞ்சம் கவனம் வேண்டும். நுணுக்கமான புதிய தொழில் நுட்பங்களைப் பயில்வீர்கள். தொழில் வகையில் எதிர்பார்த்த கடனுதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். தண்ணீர் சம்பந்தப்பட்ட பணியில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் லாபகரமான நாளாக இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
தாய்வழியிலான உறவினர்களின் மூலம் உங்களுக்கு பெரும் ஆதரவு உண்டாகும். முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் நிர்வாகத்தில் பல புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். பொது சேவைகளில் ஈடுபடுபவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சுயதொழில் சம்பந்தமான புதிய முடிவுகள் உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியோர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு இருக்கும் போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உங்களுடன் பிறந்த சகோதரர்களால் உங்களுக்குச் சாதகமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். பணியில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை நிலுவையில் இருந்து வந்த பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்
நீங்கள் எதிர்பார்க்காத தன வரவினால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறைய ஆரம்பிக்கும். பணியிடத்தில் தலைமை அதிகாரியினுடைய பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய சிந்தனைகள் மேலோங்கி இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
கலைத்துறையில் இருப்பவர்கள் உங்களுடைய முழுத் திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய வெளிப்படையான பேச்சுக்கள் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். மிக நுட்பமான சிந்தனைகள் உங்களுடைய மனதுக்குள் மேம்பட்டு நிற்கும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவமும் லாபமும் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
புதிய தொழில் முயற்சினளால் உங்களுக்கு மேன்மை உண்டாகும். பொது சபைகளில் உங்களுக்கு மேன்மை உண்டாகும். உங்களுடைய உடைமைகளில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேள்விகளில் கலந்து கொண்டு, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் குழந்தைகளின் வழியில் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உங்களுடைய பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுவீர்கள். வாகனங்களால் உங்களுக்கு வீண் விரயங்களும் செலவுகளும் உண்டாகும். புதிய வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகள் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய பிள்ளைகளின் மூலம் தொழிலுக்கு கொஞ்சம் கூடுதல் ஆதரவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் கூடுதல் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறுகிய தூர பயணங்களினால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் தொழிலில் கொஞ்சம் முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். புதிய பொருள்களை வாங்குவதற்கான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளினால் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைத்த காரியங்களில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். உங்களுடைய தொழில் கூட்டாளிகளால் லாபங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
