Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த 5 ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு சந்தோஷமான நாளாக மாறப்போகுது...
வெள்ளிக்கிழமை சுக்கிரபகவான் அருள் நிறைந்த நாள். இந்த நாள் சுகமான நாள், சந்தோஷங்கள் அதிகம் நிறைந்த நாள். இந்த நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு பணம் வரும் யாருக்கு செலவு வரும்?
வெள்ளிக்கிழமை சுக்கிரபகவான் அருள் நிறைந்த நாள். இந்த நாள் சுகமான நாள், சந்தோஷங்கள் அதிகம் நிறைந்த நாள். இந்த நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு பணம் வரும் யாருக்கு செலவு வரும் உடல் ஆரோக்கியம் யாருக்கு பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா? இன்றைய ராசி பலனை படிங்க உங்களுடைய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இன்னிக்கு காலையிலேயே உங்களுக்கு நல்ல சேதி வீட்டை தேடி வரும். புது உத்தியோகம் தேடுறவங்களுக்கு புது வேலை கிடைக்கும். கடன் சுமையும் ஓரளவுக்கு குறையும். புது சொத்துக்கள் வாங்குற விஷயத்துல இருந்து வந்த இடைஞ்சல் விலகி நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பிசினஸ்ல கூட்டாளிங்களால புது வாய்ப்புகள் உருவாகும். பண வரத்தும் தாராளமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 35
சாதகமான நேரம் : விடிகாலை 5:05 முதல் பிற்பகல் 3:40 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, ரொம்ப நாளா தொல்லை கொடுத்து வந்த பிரச்சனைக்கு இன்னிக்கு முடிவு கிடைக்கும். அதனால மனசுல உற்சாகம் பொங்கும். கல்யாணம், சுபகாரிய முயற்சிகள்ல சாதகமான பலன் கிடைக்கும். பிசினஸ்ல பணியாட்கள் ரொம்ப பொறுப்போட நடந்துக்குவாங்க. வீட்டுல மனசுக்கு சந்தோஷம் கொடுக்கற மாதிரியான சம்பவம் நடக்கும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் ஹெல்த் கண்டிஷனும் சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 9:30 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்துல வேலைச்சுமை கூடினாலும், கூட வேலை பாக்குறவங்களால பாதி சுமை குறையும். ஃப்ரண்ட்ஸுங்களோட சப்போர்ட் மனசுக்கு புது உற்சாகத்தை கொடுக்கும். குடும்ப உறுப்பினர்கள் கூட பேசம்போது வார்த்தையை விடாம நிதானமா பேசி விட்டுக்கொடுத்து போனா பிரச்சனை வராம பாத்துக்கலாம். வண்டி வாகனத்துனால திடீர் செலவு வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 1
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் மாலை 6:00 மணிவரை

கடகம்
கடக ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, சாப்பாட்டு விஷயத்துல கொஞ்சம் கட்டுப்பாடோட நடந்துக்குறது அவசியம். வண்டி வாகனத்துல வெளிய போகும்போது கூடுதல் எச்சரிக்கையோட இருக்குறது அவசியம். பிசினஸ் சம்பந்தமா வெளியூர் போறதுனால, ரொம்ப அலைச்சலுக்கு பின்னாடி தான் ஆதாயம் கிடைக்கும். கூடப்பொறந்தவங்க கூட ஒத்துமை குறையும். ஹெல்த் கண்டிஷன்லயும் இன்னிக்கு பாதிப்பு உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 3
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 11:05 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க கிட்ட எதிர்பாத்த உதவி கிடைக்கும். சொந்தக்காரங்க மூலமா சுபச் செய்திகள் வந்து சேரும். பிள்ளைங்களோட மேல் படிப்புக்காக பேங்க் லோனுக்கு முயற்சி பண்ணினா இன்னிக்கு கிடைக்கும். குடும்பத்தோட வெளியூர் பிரயாணம் போறதுக்கு சந்தர்ப்பம் அமையும். பிசினஸ்ல கூட்டாளிங்க கூட ஏற்பட்ட மனஸ்தாபம் மறையும். வெளியில கொடுத்து வச்ச கடன் பாக்கியும் இன்னிக்கு வசூலாகும். எதிர்பாத்த உதவியும் இன்னிக்கு கிடைக்கும். எந்த காரியத்தையும் ரொம்பவே உற்சாகமா செஞ்சி முடிப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 10:00 மணிவரை

கன்னி
கன்னி ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல லாபம் அமோகமா வரும். வீட்டுத் தேவைகளும் பூர்த்தியாகிடும். சொந்தக்காரங்க வர்றதுனால மனசுக்குள்ள மகிழ்ச்சி கூடும். இன்னிக்கு தாராள பண வரத்தும் உண்டுங்கிறதால விலை கூடுன பொருட்களை வாஙகுவீங்க. உத்தியோகத்துல உழைப்புக்கு ஏத்த சம்பள உயர்வு கிடைக்கும். கல்யாணம், சுபகாரிய முயற்சியில இருந்து வந்த முட்டுக்கட்டை முடிவுக்கு வரும். கூடப்பொறந்தவங்களும் இன்னிக்கு ஒத்தாசையா இருப்பாங்க.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : காலை 10:10 முதல் நண்பகல் 3:15 மணிவரை

துலாம்
துலா ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல சில பேருக்கு ப்ரமோஷனோட ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். பிசினஸ்ல பணியாட்களை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துகிட்ட லாபம் கிடைக்கும். எதிர்பாத்த இடத்துல இருந்து உதவியும் கிடைக்கும். சுப காரிய முயற்சியில சின்னதா தடங்கல் வந்து முட்டுக்கட்டை போடும். ஃப்ரண்ட்ஸுங்க கூட மனஸ்தாபம் ஏற்படும். குடும்பத்துலயும் நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 7:45 முதல் மாலை 4:30 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா புதுசா போடுற திட்டங்கள் நிறைவேற கூட்டாளிங்களோட சப்போர்ட் கிடைக்கும். இருந்தாலும் எதிர்பாக்காம திடீர் விரயச் செலவுங்களும் வந்துடும். எதிர்பாத்த உதவியும் கிடைக்கும். திடீர் வெளியூர் பிரயாணம் போறதுக்கும் சந்தர்ப்பம் உண்டாகும். குடும்பத்துல பெரியவங்களோட அநாவசியத்துக்கு மனஸ்தாபம் உண்டாகும். இன்னிக்க ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறை காட்டுறது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : விடிகாலை 4:50 முதல் நண்பகல் 12:05 மணிவரை

தனுசு
தனுசு ராசி அன்பர்களே, ரொம்ப நாள வராத கடன் பாக்கி வசூலாகும். உங்க பேங்க் பேலன்ஸும் கூடும். குடும்பத்துலயும் சந்தோஷமான சூழ்நிலையே நிலவும். புது பொருட்களை வாங்குறதுல ஆர்வம் உண்டாகும். இன்னிக்கு எந்த வேலையையும் ரொம்பவே மன மகிழ்ச்சியோட செய்வீங்க. ஃப்ரண்ட்ஸுங்களை மீட் பண்ணி பேசுறதுனால அனுகூலம் கிடைக்கும். இன்னிக்கு மனசளவுலயும், ஹெல்த் ரீதியாவும் ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : காலை 7:30 முதல் நண்பகல் 2:00 மணிவரை

மகரம்
மகர ராசி அன்பர்களே, இன்னிக்கு பூர்வீக சொத்து பத்துனால நன்மைகள் உண்டாகும். குடும்பத்துல எதிர்பாக்காத செலவுகள் வந்துடும். செய்யுற வேலையில ஆர்வம் குறையும். சுலபமா முடிக்க வேண்டிய வேலையை கூட இழுத்து பிடிச்சி முடிக்க வேண்டியிருக்கும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷனம் சுமாராவே இருக்கும். நீங்க கொஞ்சம் பொறுப்போட நடந்துகிட்டா, கடன் சுமையும் ஓரளவு குறையும். பிள்ளைங்களால மனஸ்தாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல லாபம் அமோகமா இருக்கும். குடும்பத்துலயும் மகிழ்ச்சி தவழும். பெண்களுக்கு புது பொருட்களை வாங்குறதுல ஆர்வம் கூடும். பிசினஸ்ல புது கூட்டாளிங்க வந்து சேருவாங்க. அதோட இதுவரைக்கும் தொல்லை கொடுத்து வந்த எதிரிகளும் ஓடிப்போவாங்க. எதிர்பாக்காத தன வரத்தும் இருக்கும். கூடப்பொறந்தவங்க மூலமா அனுகூலம் கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்களை மீட் பண்ணி பேசுறது ஆறுதலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

மீனம்
மீன ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோக ரீதியான வெளியூர் பிரயாணத்துனால தண்டச் செலவுதன் ஏற்படும். பிசினஸ்ல லாபம் சுமாராவே இருக்கும். குடும்பத்துல சொந்தக்காரங்க ஒத்தாசையால சந்தோஷம் பிறக்கும். குடும்பத்துல இருக்குறவங்களும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. பழைய கடன் பாக்கியும் வசூலாகிடும். பிள்ளைங்களால மன வருத்தம் உண்டாகலாம். எதிர்பாக்காத பண வரத்துனால கடன் சுமையும் குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை



Click it and Unblock the Notifications
