Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா?
இன்று எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
இன்றைய தினம் ராசி பலன்களை பார்க்கும் போது உங்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும். யார் எந்த விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் நல்ல நாள் யாருக்கு என்று எழுதியிருக்கிறோம் படிங்க.
இன்றைய தினம் ராசி பலன்களை பார்க்கும் போது, கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும், யார் எந்த விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், நல்ல நாள் யாருக்கு, இன்றைக்கு ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா என்று எழுதியிருக்கிறோம் படிங்க.

மேஷம்
உங்க நிதி நிலைமை இன்றைக்கு அற்புதமாக இருக்கும். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருப்பீர்கள். உங்க சாதனைகள் சந்தோஷங்கள் குழந்தைகளையும் தொற்றிக்கொள்ளும். உங்க அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உங்க திருமண வாழ்க்கை இன்றைக்கு சந்தோஷமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். உங்களுக்கு சம்பள உயர்வினால் வருமானம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 4 மணி இரவு 9 மணி

ரிஷபம்
இன்றைய தினம் நீங்க ரொம்ப அமைதியாக இருப்பீங்க உங்க குடும்பத்துடன் நீங்க நிறைய நேரம் செலவு பண்ணுவீங்க. பொருளாதார ரீதியாக உங்களுக்கு இன்று ரொம்ப நல்ல நாள். செலவும் அதிகமாக இருக்கும். பணத்தை எதிர்காலத்திற்காக சேமியுங்கள். வேலை செய்வதற்கும் இன்றைக்கு நேரம் ஒதுக்குங்க. சமுதாயத்திற்காகவும் நேரம் செலவு செய்வீர்கள். பழைய நண்பர்களுடன் சந்திப்பு நிகழும். பழைய நினைவுகளில் மூழ்கிப் போவீர்கள் சந்தோஷ தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6.45 மணி இரவு 10.30 மணி

மிதுனம்
இன்றைய தினம் குடும்ப வாழ்க்கை காதலும் சந்தோஷமும் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கை துணை உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவார். உங்க வாழ்க்கை துணையுடனான காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். உங்க காதல் துணையின் ரொமான்ஸ் நினைவுகளால் உங்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படும். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். பண விவகாரங்கள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்க உடல் ஆரோக்கியம் இன்றைக்கு சுமாராகவே இருக்கும். வயிறு பிரச்சினைகள் உங்களை வாட்டி எடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12 மணி இரவு 7 மணி

கடகம்
இன்றைய தினம் உங்க நிதி நிலைமை சுமாராகவே இருக்கும். உங்க செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உறவுகளுக்கு இடையை சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் கடினமான வேலைகள் இருக்கும். காதல் வாழ்க்கையில் சில கருத்து மோதல்கள் ஏற்படலாம். உங்க உடல் ஆரோக்கியம் இன்று சுமாராகவே இருக்கும். ஓய்வு இல்லாத நிலையை உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12.45 மாலை 6 மணி

சிம்மம்
ஆன்மீக நிலையில் அற்புதமாக இன்று உணர்வீர்கள். பிசினஸ் நிலையில் இன்று உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். கணவன் மனைவி சந்தோஷம் அற்புதமாக இருக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உற்சாகமாகவும் எனர்ஜியாகவும் இருப்பீர்கள். வேலைக்காக பயணம் செய்வீர்கள் காதல் வாழ்க்கையில் உணர்வு பூர்வமாக இருப்பீர்கள். குடும்ப உறவினர்களுடன் சந்தோஷமாக புரிந்து கொண்டு இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு இன்று உங்க வாசல் கதவை தட்டும். பொருளாதாரத்தில் வளர்ச்சி கிடைக்கும். நிறைய பணவரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 16
அதிர்ஷ்ட நேரம் பிற்பகல் 1.30 மணி மாலை 6.30 மணி

கன்னி
இன்றைய தினம் உங்க காதல் வாழ்க்கை உற்சாகத்தை தரும். மூன்றாவது நபரின் மூலம் உங்க உறவு உற்சாகத்தை தரும். உங்க காதல் உறவு உற்சாகத்தை தரும். சந்தேகப்பட வேண்டாம் பிரச்சினையில் சென்று முடியும். சந்தோஷமாக உறவுகளை கொண்டாடுங்கள். வேலை செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல நாள் இன்றைய தினம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு பணம் வேண்டுமா இன்றைக்கு அதிகமாக உழையுங்கள். இன்றைக்கு உங்க உடல் நலம் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 45
அதிர்ஷ்ட நேரம் : காலை 9 மணி இரவு

துலாம்
உங்க நிதி நிலைமைக்காக நீங்க கடினமாக வேலை செய்வீர்கள். வேலையை புத்திசாலித்தனமாக செய்வர்கள். பழையதை எண்ணி நேரத்தை வேஸ் செய்ய வேண்டாம். சில பிரச்சினைகள் உருவாகும். அதை தைரியமாக எதிர்கொண்டு உங்க வாழ்க்கைத் துணை உடனான உறவு சந்தோஷத்தை தரும். இன்றைக்கு நீங்க உங்க காதலை புரபோஸ் பண்ணலாம் வெற்றியை பெற்றுத்தரும். உடல் ஆரோக்கியத்தின் மீது கவனமாக இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.30 மணி இரவு 8 மணி

விருச்சிகம்
நீங்க உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடினமாக உழைப்பீர்கள். உங்க சுற்றுப்புற சூழல் உங்களை டென்சனாக்கும். கோபத்தையும் மனஅழுத்தத்தையும் தவிர்த்து விடுங்கள். உங்க உடல்நிலை இன்றைக்கு சுமாராகவே இருக்கும். உணவு விசயத்திலும் உடல் நல விசயத்திலும் அக்கறை காட்டுங்கள். காரணமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். உங்க நிதி நிலைமை இன்றைக்கு சந்தோஷமாக இருக்காது செலவுகள் அதிகமாக வரும். எதிர்பார்ப்புகளை தவிர்த்து விடுங்கள். உங்க வாழ்க்கைத்துணையோடு நீங்க சந்தோஷமாக இருப்பீங்க. வேலை மாற வேண்டும் என்று நினைத்தால் மாறலாம்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் : மாலை 3.30 மணி - இரவு 8 மணி

தனுசு
பொருளாதார நிலை இன்றைக்கு அற்புதமாக இருக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும் வழி பிறக்கும். உங்க உடம்புல கவனம் செலுத்துங்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்க உடற்பயிற்சி பண்ணுங்க. காதல் விசயத்தில கவனமாக இருங்க. சின்னச் சின்ன மாற்றங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுடைய நடத்தை கூட வேலை செய்பவர்களை இம்ப்ரஸ் செய்யும். இது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். இன்றைக்கு சிறு பயணம் செல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம் : காலை 8 மணி - பிற்பகல் 2.15 மணி

மகரம்
இன்றைய தினம் நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க உங்க வேலைகளை முடித்து விடுவீர்கள். உங்க வேலைகளை நீங்க இன்றைக்கு மகிழ்ச்சியோடும் டெடிகேசனோடும் முடித்து விடுவீர்கள். உங்க வாழ்க்கைத்துணையோடு இன்றைக்கு நீங்க வாக்கு வாதம் செய்ய வேண்டாம். உங்க குடும்ப வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். நேர்மையோடு பேசுவீர்கள். குடும்ப உறுப்பினர்களோடு நீங்க பேசும் நேரம் குறையும். நண்பர்களோடு நீங்க அதிக நேரம் செலவு செய்வீர்கள். உங்க பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் அதிக லாபத்தைக் கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 மணி - இரவு 7 மணி

கும்பம்
இன்றைய தினம் உங்களுக்கு ரொம்ப நல்ல நாள் குடும்பத்தோடு மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் கவனமாக இருங்க. அலட்சியமாக இருக்காதீங்க மருத்துவ செலவு அதிகமாகிவிடும். உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் கவனமாக இருங்க. உங்க மனசும் உடம்பும் மகிழ்ச்சியோடும் ஆரோக்கியமாகவும் இருக்கும். உங்க நேர்மை உணர்வு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். மாலை நேரத்தில் ஆன்மீக இடங்களுக்கு பயணம் செல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : காவி
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.15 மணி இரவு 7.20 மணி

மீனம்
உங்க சுற்றுப்புற சூழ்நிலை உங்களுடைய மன அழுத்தத்தை போக்குவதாக இருக்கும். நீங்க உங்க குடும்பத்தினருடன் நிறைய நேரம் செலவு செய்வீர்கள். உங்க திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்க சூழ்நிலை அற்புதமாக இருக்கும். உங்க வாழ்க்கை துணையுடனான உறவு சந்தோஷமாக இருக்கும். பொருளாதார சூழ்நிலை அற்புதமாக இருக்கும்.புதிய முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும். பழைய பிசினஸ் மூலம் வருமானம் அதிகமாகும். உங்களுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம் : காலை 6.30 மணி - மாலை 4 மணி



Click it and Unblock the Notifications











