இந்த 3 ராசிக்காரங்களோட பேங்க் பேலன்ஸ் எகிறப்போகுது...

குரு பகவான் பார்வையாலும் சந்திரனின் சஞ்சாரத்தினாலும் சில ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வருமானம் வரப்போகிறது. சிலருக்கு நல்ல செய்திகள் தேடி வரும் சிலரது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.

குரு பகவான் பார்வையாலும் சந்திரனின் சஞ்சாரத்தினாலும் சில ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வருமானம் வரப்போகிறது. சிலருக்கு நல்ல செய்திகள் தேடி வரும் சிலரது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று இன்றைய ராசி பலனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, ரொம்ப நாளைக்கு பின்னாடி சந்தோஷம் கொடுக்குற இனிப்பான சேதி உங்களை நாடி வரும். சுப காரிய பேச்சவார்த்தைகளும் நல்ல விதமா முடியும். உத்தியோகம் சம்பந்தமா வெளியூர் போறதுனால அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிசினஸ்ல எதிரிங்களால இருந்து வந்த தொல்லைகள் விலகிடும். எதிர்பாக்காத திடீர் தனவரத்தும் இன்னிக்கு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:00 - இரவு 8:15 மணி

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, பிசினஸ்ல இன்னிக்கு எதிர்பாக்காத அளவுக்கு லாபம் கிடைக்கும். உங்க வருமானமும் அதிகரிச்சி, பேங்க் பேலன்ஸும் கூடிடும். சொந்தக்காரங்க மூலமா நல்லது நடக்கும். பிள்ளைங்க வழியில சந்தோஷமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு ரொம்ப சிறப்பா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:30 - மாலை 3:00 மணி

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, பிசினஸ் வளர்ச்சியில ரொம்பவே கவனம் செலுத்துவீங்க. எதிர்பாத்த இடத்துல இருந்து உதவியும் கிடைக்கும். உத்தியோகத்துல வேலைச்சுமை இன்னிக்கு கம்மியா இருக்கும். குடும்பத்தோட ஃபைனான்ஸ் பொசிஷன் சிறப்பா இருக்கும். திடீர் சுபச் செலவுங்களும் வந்துடும். கடந்த ரெண்டு மூணு நாளா இருந்து வந்த மன உளைச்சல் இன்னிக்கு மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 - இரவு 10:00 மணி

கடகம்

கடகம்

கடக ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, பணம் கொடுக்கல் வாங்கல்ல ரொம்பவே எச்சரிக்கையா இருக்குறது அவசியம். வேத்து மனுஷங்களை நம்பி ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுத்து சிக்கல்ல மாட்டிக்காதீங்க. அதே மாதிரி மத்தவங்க கிட்ட அநாவசியமா பேச்சுவார்த்தை வச்சிக்காதீங்க. பிசினஸ்லயும் பெரிய அளவுல இண்வெஸ்ட் பண்ணாம அவாய்ட் பண்றது நல்லது. இன்னிக்கு மன உளைச்சல் இருக்குறதுனால மத்தவங்க கிட்ட கோவப்படுற நிலை ஏற்படும். உஷாரா இருங்க.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:00 - இரவு 7:15 மணி

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, இன்னிக்கு பூர்வீக சொத்து பத்து சம்பந்தமான வழக்குல உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பேங்க் பேலன்ஸும் கூடும். பிசினஸ் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காக எதிர்பாத்த பேங்க் லோனும் ஈசியா கிடைக்கும். பண வரத்தும் இன்னிக்கு தாராளமா வரும். மத்தவங்களுக்கும் தாராளமா கொடுத்து உதவுவீங்க. குடும்பத்துலயும் பிள்ளைங்க பொறுப்போட நடந்துக்குவாங்க.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 - இரவு 8:45 மணி

கன்னி

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்கும். வருமானம் அதிகமாகி பேங்க் பேலன்ஸ்சும் எகிறும். வேலையில்லாத சிலருக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். கல்யாணம், சுபகாரிய முயற்சிகள்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனை விலகிடும். அதனால உங்க மன அமைதியும் கூடும். இன்னிக்கு எல்லா வேலையையும் ரொம்பவே உற்சாகமா செஞ்சி முடிப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: இரவு 9:50 - பிற்பகல் 2:25

துலாம்

துலாம்

துலா ராசி அன்பர்களே, இன்னிக்கு கடன் பிரச்சனைகள் குறையும், சுப காரிய முயற்சிகள்ல சின்னதா தடங்கல் வந்து பின்னாடி நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். ஃப்ரண்ட்ஸுங்களை மீட் பண்ணி பேசுறதுனால மனசுக்குள்ள புது நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் ஏற்படும். பிசினஸ்ல எதிர்பாராத செலவுகள் வந்துடும். குடும்பத்துல சின்னச் சின்ன மன வருத்தங்கள் வந்துடும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நல்ல சத்தான ஆகாரமா எடுத்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - இரவு 9:45 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல ரொம்ப எச்சரிக்கையா நடந்துக்கிட்டா வெற்றி உங்களுக்கு தான். கூடவே அக்கம் பக்கத்துல இருக்குறவங்களை அனுசரிச்சி நடந்துக்கோங்க. பேசும் வார்த்தையில கூடுதல் கவனம் அவசியம். பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் வரும். பிள்ளைங்களுக்கு படிப்புல ஆர்வம் குறையும். ஹெல்த் கண்டிஷன் இன்னிக்கு ரொம்பவே அசமந்தமா தான் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - இரவு 8:00 மணி

தனுசு

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, உத்தியோகத்துல சீனியர் அதிகாரியோட சப்போர்ட் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்துல சொந்தக்காரங்களால சுபச் செலவுகள் வந்துடும். பண வரத்து சுமாரா இருக்கும். வீட்டுக்கு தேவையான புது பொருட்களை வாங்குவீங்க. சுப காரிய முயற்சியில வெற்றி கிடைக்கும். உங்க தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். ஹெல்த் கண்டிஷன்ல் அக்கறை காட்டுறது நல்லது. கொரோனா பீதி இருக்குற இந்த சந்தர்ப்பத்துல நல்ல சத்தான ஆகாரமா எடுத்துக்குறது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - இரவு 8:00 மணி

மகரம்

மகரம்

மகர ராசி அன்பர்களே, இன்னிக்கு எதிர்பாக்காத வகையில் திடீர் உதவி, ஒத்தாசை கிடைக்கும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க ஒத்துமையா இருப்பாங்க. வீட்டுக்கு தேவையா அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்துல எல்லோரையும் அனுசரிச்சி நடந்துகிட்டா தேவையில்லாத பிரச்சனை வராம தவிர்த்துடலாம். இன்னிக்கு எடுத்த வேலையை ஒரு வழியா தட்டுத்தடுமாறி செஞ்சி முடிப்பீங்க. ஹெல்த் கண்டிஷன் அற்புதமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:30 - மாலை 3:00 மணி

கும்பம்

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல சில பேத்துக்கு வேலைக்கேத்த ப்ரமோஷன் கிடைக்கும். வருமானமும் அதிகமாகும். பிசினஸ் பண்றவங்க தன்னோட பொறுப்பை உணர்ந்துகிட்டு வியாபாரம் பண்ணினா லாபம் கிடைக்கும். நீங்க எடுக்குற முயற்சிக்கு குடும்பத்தோட சப்போர்ட் கிடைக்கும். சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துலயும் மகிழ்ச்சி கூடும். வீட்டுல சுப காரியங்களும் நடந்துடும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 - மதியம் 2:45 மணி

மீனம்

மீனம்

மீன ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி போனீங்கன்னா அநாவசிய பிரச்சனைங்க வராம தவிர்த்துடலாம். இல்லேன்னா சின்னச் சின்ன வேலையை செஞ்சி முடிக்குறதுக்கு படாத பாடு படவேண்டியிருக்கும். இன்னிக்கு பண வரத்து சுமாரா இருந்தாலும், செலவுங்க அதைவிட கூடுதலா இருக்கும். இன்னிக்கு மனசுலயும், ஹெல்த் கண்டிஷன்லயும் சின்னதா பிரச்சனை எழ வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - 11:05 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, June 11, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion