For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுபாஷ் சந்திர போஸின் மரணம் முதல் இந்தியாவின் ஏலியன்கள் விமானத்தளம் வரையான உறையவைக்கும் ரகசியங்கள்...

|

உலகத்தில் மனித மூளைக்கும் எட்டாத பல விஷயங்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதர்களின் காலடியும், வானத்தில் இருக்கும் செயற்கை கோளும் இன்னும் ஊடுருவதா பல விசித்திரமான இடங்கள் இன்றும் பூமியில் பல இருக்கிறது. பூமியில் இருக்கும் பல இடங்களின் தனித்துவத்திற்கு விஞ்ஞானத்தால் பதில் கூற முடியவில்லை.

Creepy Mysteries From India

விஞ்ஞானத்தால் விவரிக்க முடியாத பல ஆச்சரியங்கள் நிறைந்த இடங்கள் இந்தியாவிலும் நிறைய இருக்கிறது. இந்த இடங்களின் மர்மமும், ரகசியமும் இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் இந்தியாவில் இருக்கும் சில மர்மமான இடங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரட்டையர்களின் கிராமம்

இரட்டையர்களின் கிராமம்

கேரளாவின் கொடின்ஹி கிராமத்தில் ஒரு ரகசியம் உள்ளது. இது மறைக்கப்பட்ட ரகசியம் இல்லை, ஆனால் இது இந்தியாவின் மிகவும் முக்கியமான ஒரு மர்மமாகும். இந்த கிராமத்தில் 2,000 குடும்பங்கள் மட்டுமே உள்ளது, ஆனால் அதில் கிட்டதட்ட 300 இரட்டையர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது கிட்டதட்ட 450 இரட்டையர்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

என்ன ரகசியம்?

என்ன ரகசியம்?

இந்த கிராமத்தின் இந்த மர்மத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்பது இன்றும் கண்டறியப்படவில்லை. இதில் என்ன மர்மம் என்றால் இந்தியாவில் இரட்டையர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும், ஏனெனில் 1000 இந்தியர்களில் 4 பேர் மட்டுமே இரட்டையர்களாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் 1000 பேருக்கு 45 இரட்டையர்கள் இருக்கிறார்கள். இந்த விசித்திரமான நிகழ்வுக்கு என்ன காரணம் என்று மருத்துவர்களுக்கும் தெரியாது.

ஜோத்பூர் வெடிச்சத்தம்

ஜோத்பூர் வெடிச்சத்தம்

டிசம்பர் 18, 2012 அன்று ஜோத்பூரில் திடீரென ஒரு சத்தம் அனைவரின் காதையும் கிழிக்கும்படி தோன்றியது. ஒலியின் வேகத்தை கிழித்தெறிந்த விமானத்தின் சத்தம் போல இது இருந்ததாக மக்கள் தெரிவித்தார்கள். மிகவும் ஆக்ரோஷமாக இருந்த இந்த சத்தம் வெடிவிபத்து போல இருந்தது. ஆனால் உண்மையில் அந்த நேரத்தில் எந்த விமானமும் பறக்கவில்லை, வெடிவிபத்தும் நிகழவில்லை. இன்றுவரை அந்த சத்தத்திற்கான காரணம் என்னவென்று கண்டறிய முடியவில்லை.

MOST READ: இந்த ராசிக்காரங்க மனசுக்குள்ள வஞ்சம் வைச்சு உங்கள பழிவாங்குவாங்களாம்... உஷாரா இருங்க...!

மிகப்பெரிய மர்மம்

மிகப்பெரிய மர்மம்

இந்த மர்மத்தின் மிகப்பெரிய மர்மம் என்னவென்றால் இந்த சத்தம் அந்த மாதத்தில் உலகம் முழுவதும் பல இடங்களில் தோன்றியது. லண்டன் முதல் டெக்சாஸ் வரை உலகம் முழுவதும் விசித்திரமான, விவரிக்கப்படாத இந்த சத்தம் தோன்றியது. சில சமயங்களில் இந்த சத்தம் பச்சை நிற ஒளியுடன் தோன்றியது. சிலஇடங்களில் நிலநடுக்கம் கூட ஏற்பட்டது, ஆனால் இதனை விமானப்படையின் புதிய விமானத்தின் சோதனை ஓட்டம் என்று சமாளித்தார்கள். ஆனால் இதனை யாரும் இன்றுவரை நம்பவில்லை.

இரகசியம் சமூகம்

இரகசியம் சமூகம்

இந்தியாவின் முதல் இரகசிய சமூகமான ஒன்பது மறைமுக ஆண்களைப் பற்றிய மர்மம் இன்றுவரை நீடிக்கிறது. புராணத்தின் படி, இந்த சக்திவாய்ந்த ரகசிய சமூகம் கிமு 273 இல் அசோகா பேரரசரால் 100,000 ஆண்களின் உயிரைப் பறித்த ஒரு இரத்தக்களரிப் போருக்குப் பிறகு நிறுவப்பட்டது. இந்த ஒன்பது ஆண்களும் உலக அழிவிற்கு வழிவகுக்கும் உயரிய ஞானத்தை தீயவர்களின் கையில் கிடைக்காமல் பாதுகாத்து வந்தனர்.

உறுப்பினர்கள்

உறுப்பினர்கள்

ஒன்பது ரகசிய உறுப்பினர்களில் 10 ஆம் நூற்றாண்டின் போப் சில்வெஸ்டர் II மற்றும் இந்தியாவின் வளரும் விண்வெளி திட்டத்தை உருவாக்கிய விஞ்ஞானி விக்ரம் சரபாய் ஆகியோர் இருந்ததாக பலரும் சந்தேகத்தை எழுப்பினர்.

MOST READ: ஆண்கள் குள்ளமான பெண்களை விரும்புவதற்கான அதிர்ச்சியளிக்கும் காரணங்கள் என்ன தெரியுமா?

தாஜ்மகால் பற்றிய மர்மம்

தாஜ்மகால் பற்றிய மர்மம்

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகானால் அவரது இறந்த மனைவி மும்தாஜ்க்காக கல்லறையாக உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மையில் தாஜ்மஹால் ஒருபோதும் நித்திய காதல் வரலாற்றின் கட்டடக்கலை உருவகமாக இருந்ததில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சில சான்றுகளின் படி தாஜ்மகால் அதன் வயதை விட 300 வருடங்கள் 300 வருடம் பழமையானது என்று கூறுகிறது. பேராசிரியர் பி.என். ஓகே கருத்துப்படி தாஜ்மகால் முதலில் கல்லறையாக உருவாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்து கோவிலா?

இந்து கோவிலா?

பேராசிரியர் ஓகே கருத்துப்படி தாஜ்மஹால் உண்மையில் சிவபெருமானை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தேஜோ மஹாலயா என்று அழைக்கப்படும் ஒரு பண்டைய இந்து கோவில் என்று கூறப்படுகிறது. இந்த மர்மம் தாஜ்மகாலின் வரலாற்றையே மாற்றக்கூடியது, தாஜ்மஹாலுக்குள் சீல் வைக்கப்பட்ட அறைகளைத் திறந்தால் மட்டுமே இந்த மர்மம் விலகும். அதுவரை தாஜ்மஹாலை சுற்றி பல மர்மங்கள் சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.

லடாக்கின் காந்த மலை

லடாக்கின் காந்த மலை

இமயமலைக்கு அருகிலுள்ள லடாக் பகுதியில் காந்தமாலை என்று அழைக்கப்படும் ஒரு விசித்திர மழை உள்ளது. உங்கள் காரை மலையின் உச்சிக்கு செல்லும் சாலையில் நிறுத்தினால் உங்கள் கார் தானாக 20 கிலோமீட்டர் வேகத்திற்கு நகர்த்தும். இந்த அற்புதமான நிகழ்வு " இமயமலை ரகசியம் " என்று அழைக்கப்படுகிறது. இதுவே இந்த பகுதிக்கு அதிக பயணிகளை ஈர்க்கிறது.

MOST READ: இந்த வடிவ பற்களை உடையவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் இருக்குமாம் தெரியுமா?

கொங்கா லா பாஸ்

கொங்கா லா பாஸ்

லடாக் பகுதியில் உள்ள கொங்கா லா பாஸ் உலகில் மனிதர்கள் அனுமதிக்கப்படாத மிகமுக்கியமான இடங்களில் ஒன்றாகும். இது இமயமலையில் அமைந்துள்ளது மட்டுமல்லாமல், இது இந்தியா மற்றும் சீனாவின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியாகும். இரு நாடுகளும் இந்த இடத்தை கண்காணிக்கிறது, ஆனால் படைகள் மூலம் அல்ல. ஏனெனில் இது அறியப்படாத விமானங்களின் தளமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனை வேற்றுகிரகவாசிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று இரு நாடுகளும் நம்புகிறது.

இரகசிய நிலத்தடி கட்டுமானங்கள்

இரகசிய நிலத்தடி கட்டுமானங்கள்

இந்த பகுதிகளின் நிலத்தடியில் ரகசியவிமானங்கள் குறிப்பாக பறக்கும் தட்டு வகை விமானங்கள் தரை இறங்குவதற்கான கட்டுமானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பயணிகளும், இந்த இடத்தை சுற்றி வசிப்பவர்களும் அடிக்கடி சில மர்மமான சத்தங்களை கேட்பதாக கூறியுள்ளார்கள்.

சுபாஷ் சந்திரபோஸ் மரணம்

சுபாஷ் சந்திரபோஸ் மரணம்

இரண்டாம் உலகப் போரின் இறுதி கட்டங்களில் ஜப்பானால் இந்திய தேசிய இராணுவத்தின் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரபோஸ் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 18, 1945 அன்று தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் போஸ் மூன்றாம் நிலை தீக்காயங்களால் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல் மீட்கப்படாததால், அவரைப் பின்தொடர்பவர்களில் பெரும்பாலோர் அவரது மரணத்தை ஒருபோதும் நம்பவில்லை. ஆனால் இன்றுவரை சுபாஷ் சந்திர போஸின் மரணம் மர்மமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சுபாஷ் சந்திர போஸை சுற்றியிருக்கும் மர்மம்

சுபாஷ் சந்திர போஸை சுற்றியிருக்கும் மர்மம்

சுபாஷா சந்திர போஸின் விமான விபத்து உண்மையில் அவர் பதுங்கு குழிக்குள் சென்று இறுதியாக சோவியத் ஒன்றியத்திற்கு தப்பிக்க செய்த ஒரு சூழ்ச்சி என்று சிலர் கூறுகிறார்கள். போஸ் ஒரு சாதுவாகிவிட்டார் என்று சிலர் கூறுகிறார்கள். 1946 ஆம் ஆண்டில், அவரது கூட்டாளிகள் பலர் அவர் சீனாவில் இருப்பதாக நம்பினர். ஒரு வியாழக்கிழமை பம்பாய் எக்ஸ்பிரஸின் மூன்றாம் வகுப்பு பெட்டியில் சுபாஷ் சந்திர போஸைப் பார்த்ததாக ஒரு இராணுவ வீரர் கூறினார். இவராக சுபாஷ் சந்திர போஸின் மறைவு குறித்து பல்வேறு மர்மங்கள் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

MOST READ: 70,000 பேரை பாலியல் அடிமையாக வைத்திருந்த அரசனுக்கு நேர்ந்த கொடூர முடிவு என்ன தெரியுமா?

சிவப்பு மழை

சிவப்பு மழை

கேரளாவின் தென்மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கியில் ஜூலை 25 முதல் செப்டம்பர் 23, 2001 வரை ஒரு அசாதாரண நிகழ்வு ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில் பெய்த மழையின் நிறம் சிவப்பு நிறமாக இருந்தது. இந்த அசாதாரண நிகழ்வு 1986 ஆம் ஆண்டு ஏற்கனவே ஒரு முறை ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Creepy Mysteries From India

These creepy mysteries from India that will keep you up at night.
Story first published: Monday, November 25, 2019, 12:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more