For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் இரவு பற்றி பலருக்கு தெரியாத வரலாற்று கதை!

கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் விழாவை இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாகக் கருதி மகிழ்ந்து கொண்டாடுவர். கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய தருணமாக கிறிஸ்துமஸ் இரவு (Christmas Eve) இருக்கிறது.

|

உலகமே கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடக் காத்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் விழாவை இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாகக் கருதி மகிழ்ந்து கொண்டாடுவர். ஆனால் மற்ற சமயங்களைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் விழாவைத் தங்களுடைய குடும்ப விழாவாகக் கருதி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய தருணமாக கிறிஸ்துமஸ் இரவு (Christmas Eve) இருக்கிறது. குடும்பங்கள் ஒன்றிணைந்து, தங்களின் அன்பை வெளிப்படுத்தி, மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் மற்றும் பரிசுப் பொருள்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் மகிழ்ச்சி நிறைந்த தருணமாக கிறிஸ்துமஸ் இரவு இருக்கிறது.

MOST READ: உண்மையில் சான்டா கிளாஸ் என்பவர் யார் என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிறிஸ்துமஸ் இரவு எப்போது கொண்டாடப்படுகிறது?

கிறிஸ்துமஸ் இரவு எப்போது கொண்டாடப்படுகிறது?

பொதுவாக கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய நாள் இரவு 'கிறிஸ்துமஸ் இரவு' என்று அழைக்கப்படுகிறது. ஆனால் சில சமயம் வார இறுதி விடுமுறை நாட்களில் கிறிஸ்துமஸ் வந்தால் வேறொரு நாளில் கிறிஸ்துமஸ் இரவு கொண்டாடப்படும். எனினும் இது ஒரு பொதுவான வழக்கம் அல்ல.

கிறிஸ்துமஸ் இரவு பற்றிய வரலாறு

கிறிஸ்துமஸ் இரவு பற்றிய வரலாறு

கிறிஸ்துமஸ் இரவு கொண்டாட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அதாவது கிறிஸ்தவ சமயம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பு, அன்றைய காலக்கட்டத்தில் ஐரோப்பாவில் இருந்த பிற மதங்களைச் சார்ந்த மக்கள் (Pagan) தங்களின் காலாச்சார விழாவாக குளிர்கால விழாவைக் கொண்டாடி வந்தனர்.

காலப்போக்கில் அவர்கள் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிய பின்பு கிறிஸ்தவ சமய நம்பிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டியிருந்ததால், அவர்களால் தங்களுடைய பழைய குளிர்கால கலாச்சார விழாவைக் கொண்டாட முடியவில்லை.

எனினும் அவர்களில் சிலர் தங்களின் குளிர்கால விழாவைக் கைவிட முடியாமல் தவித்தனர். ஆகவே கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபை பலமான எதிர்ப்பு தெரிவித்த போதும் அவர்கள் தங்களுடைய புதிய சமயமான கிறிஸ்தவ சமயத்திற்குள் இருந்து கொண்டே தங்களின் கலாச்சார குளிர்கால விழாவைக் கொண்டாடத் தொடங்கினர்.

குளிர்கால விழா

குளிர்கால விழா

ஆனால் அவர்கள் தங்களுடைய புதிய கிறிஸ்தவ சமயத்திற்குத் தகுந்தவாறு தங்களின் குளிர்கால விழாவில் சில மாற்றங்களைச் செய்து அதைக் கொண்டாடி வந்தனர். நாளடைவில் குளிர்கால விழாவிற்கான காரணம் மாறியது. அதாவது தொடக்கத்தில் குளிர்காலத்தை மையப்படுத்தி கொண்டாடப்பட்ட இந்த விழா நாளடைவில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையப்படுத்தி கொண்டாடும் விழாவாக மாறியது.

காரணங்கள்

காரணங்கள்

எனினும் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடினாலும், இப்போது கூட ஐரோப்பாவில் பிற சமயத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவைத் தங்களின் குளிர்கால விழாவாகத் தான் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஜெர்மனியில் முன்பு யூல் என்று அழைக்கப்பட்ட குளிர்கால விழா இப்போது கிறிஸ்துமஸ் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டாலும் கிறிஸ்து பிறப்பு மையப்படுத்தப்படுவதில்லை. ஆகவே கிறிஸ்தவ சமயம் மற்றும் பிற சமயங்களின் பாரம்பரியங்கள் கலந்து உருவான கிறிஸ்துமஸ் விழா தற்போது மிகவும் பிரபலமாக உலகம் முழுவதும் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

கிறிஸ்துமஸ் இரவு

கிறிஸ்துமஸ் இரவு

கிறிஸ்துமஸ் தினத்தை விட கிறிஸ்துமஸ் இரவு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. அதற்கான குறிப்புகளை கிறிஸ்தவ மற்றும் ஐரோப்பிய பிற சமயங்களின் பாரம்பரியங்களில் பார்க்கலாம்.

குறிப்பாக கிறஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் விழா இரவில் தான் தொடங்கும். அதற்கான காரணம் என்னவென்றால் விவிலியத்தில் வரும் படைப்புக் கதையில் குறிப்பிடப்படும் முதல் நாள் என்பதில் முதலில் இரவும் அடுத்தது பகலும் என்று வருகிறது. அது போல் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் யூதர்களின் ஓய்வு நாள் சடங்கு சூரியன் மறைந்த பின்பு தான தொடங்கும். ஆகவே கிறிஸ்துமஸ் இரவு, கிறிஸ்துமஸ் நாளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் இரவில் தான் இயேசு கிறிஸ்து பிறந்ததாக கிறிஸ்தவ பாரம்பரியமும் கூறுகிறது.

கிறிஸ்தவ சமயத்தைச் சாராத மக்களுக்கு கிறிஸ்துமஸ் இரவு என்பது குடும்பங்கள் இணைந்து விருந்து உண்டு, கொண்டாட்டங்களில் ஈடுபடும் தருணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Christmas Eve History In Tamil

Chirstmas 2020: Christmas Eve can be considered to be even more important than Christmas Day itself. This holds true for both Christian and Pagan traditions.
Desktop Bottom Promotion