Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
பெயர் ' V ' என்ற எழுத்தில் தொடங்குபவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?
உங்கள் பெயரின் முதல் எழுத்து என்பது உங்களின் அடிப்படை குணங்கள் மீதும், ஆளுமை மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒருவரின் பெயர் என்பது அவர்கள் பூமியில் வாழ்வதற்கான அடையாளங்களில் முக்கியமானதாகும். உங்கள் பெயர் உங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் உங்கள் பெயரோ அது எந்த எழுத்தில் தொடங்க வேண்டும் என்பதோ எதேர்சையாக நடப்பதில்லை. அனைத்திற்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.

உங்கள் பெயரின் முதல் எழுத்து என்பது உங்களின் அடிப்படை குணங்கள் மீதும், ஆளுமை மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் பெயரின் முதல் எழுத்து V என்று தொடங்குபவர்களின் பண்புகளும், ஆளுமையும் எப்படி இருக்குமென்று பார்க்கலாம்.

V எழுத்தின் அர்த்தம்
அன்பும், விசுவாசமும் கொண்ட V எழுத்து நபர்கள் உலகின் உண்மையான மனிதர்களில் ஒருவர் ஆவர். V என்றால் வெற்றி சுருக்கமாக சொல்லலாம். ஏனெனில் இவர்கள் தொட்டது துலங்கும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் சரியான பாதையில் தெளிவாக தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் நிறைகள் மற்றும் குறைகள் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

நேர்மை
இவர்களின் ஆகச்சிறந்த குணம் என்றால் அது நேர்மைதான். இவர்கள் எப்பொழுதும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பவர்கள் அது நம்புபவர்களுக்காக இருந்தாலும் சரி, நம்பாதவர்களுக்காக இருந்தாலும் சரி. அதுதான் இவர்களின் முக்கியமான பலவீனமும் கூட, தவறான நபர்களுக்கு இவர்கள் காட்டும் விசுவாசம் இவர்களை ஆபத்தில் தள்ளும் என்பதை இவர்கள் உணரமாட்டார்கள்.

தனிமையை விரும்புபவர்கள்
இவர்கள் அதிக நேரத்தை தனிமையில் இருப்பதை செலவழிப்பார்கள், அதற்கு இவர்கள் கூச்ச சுபாவமும் ஒரு காரணமாக இருக்கலாம். அதேசமயம் இவர்கள் வசீகரமானவர்கள் என்பதை மறுக்க முடியாது. இவர்கள் ஒதுங்கி போக நினைத்தாலும் இவர்களுடன் நேரம் செலவழிப்பதை அனைவரும் விரும்புவார்கள். இந்த அதீத ஈர்ப்பு சிலசமயம் இவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

அக்கறையானவர்கள்
மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துபவர்களில் இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். இவர்களுடன் பழகிப் பார்த்தால் அது உங்களுக்கே புரியும். ஆனால் அதனை உணர நீங்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த மாட்டார்கள். இவர்களுக்கு நெருக்கமானவர்களாக மாறுவது மிகவும் எளிதான செயல்தான்.

தைரியமானவர்கள்
இவர்கள் எப்பொழுதும் சவாலை ஏற்க தயாராக இருப்பார்கள். சவாலை ஏற்றுக்கொள்வதும், அதனை ஜெயிப்பதும் இவர்களுக்கு மிகவும் பிடித்ததாகும். எந்த சூழ்நிலையிலும் இவர்கள் தனது தைரியத்தையும், தன்னம்பிக்கையும் இழக்க மாட்டார்கள்.

உணர்வுகளை மறைப்பவர்கள்
இந்த எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களின் உணர்வுகளை மறைக்கும் வினோத பழக்கம் கொண்டவர்கள். இதனால் அவர்கள் அடிக்கடி மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். ஆனால் தங்களின் பிரச்சினைகளை தானே சரிசெய்து கொள்ளும் திறமை படைத்தவர்கள் இவர்கள்.

ஆழமாக சிந்திப்பவர்கள்
இவர்கள் எப்பொழுதும் ஆழமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னால் இவர்கள் ஆயிரம் முறை யோசிப்பவர்களாக இருப்பார்கள். ஏனெனில் இவர்களின் இவர்கள் எடுக்கும் முடிவு இவர்கள் மட்டுமின்றி இவர்களை சார்ந்தவர்களையும் பாதிப்பதாக இருக்கும்.

தொழில்
பேசிய மற்றவர்களை கவரும் இவர்களுக்கு ஏற்ற தொழில் அரசியலும், சினிமாவும்தான். இவர்கள் சிறந்த பேச்சாளராகவும், நடிகராகவும் வருவார்கள். இவற்றை தவிர்த்து இவர்களுக்கு சொந்தத் தொழில் சிறப்பாக வரும். முதலாளியாக இருக்க அனைத்து தகுதியும் இவர்களிடம் இருக்கும்.

மர்மமானவர்கள்
இவர்களின் தனிமையும், ஆழமான சிந்தனையும் இவர்களை பெரும்பாலும் ரகசியமானவர்களாக மாற்றும். இவர்கள் எப்பொழுது என்ன செய்வார்கள், யாரிடம் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. அதுவே இவர்களின் முக்கிய பலவீனமாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications











