For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புரட்டாசி மாதத்தில் எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன

சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. சில நேரங்களில் முடிக்க முடியாத வேலைகள் கூட சந்திராஷ்டம தினங்கள

|

இப்போதெல்லாம் காலையில் எழுந்தவுடன் எதை செய்கிறார்களோ இல்லையோ! இன்று யாருக்கு சந்திராஷ்டமம் என்பதை காலண்டரில் பார்த்துவிட்டு தான் அடுத்தது காபி சாப்பிடலாமா வேண்டாமா என்று முடிவு செய்கின்றனர். அந்த அளவிற்கு சந்திராஷ்டமம் என்றாலே பயப்பட ஆரம்பித்து விட்டனர். சந்திராஷ்டமம் நாளில் சிலர் மவுன விரதம் இருப்பார்கள். அன்றைய தினம் என்று தெரிந்தவுடன் யாரிடமும் சரியாக பேசமாட்டார்கள். சந்திராஷ்டமம் முடிந்துவிட்டது என்று தெரிந்தவுடன் தான் அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. சில நேரங்களில் முடிக்க முடியாத வேலைகள் கூட சந்திராஷ்டம தினங்களில் முடிவதை பார்க்கலாம். நம்முடைய ராசிக்கு சந்திரன் எட்டாவது வீட்டில் இருந்தால் அன்றைய தினம் நமக்கு சந்திராஷ்டமம் என்று தெரிந்து கொள்ளலாம்.

chandrashtama

ஒருவர் ராசிக்கு எட்டாமிடத்தில் புணர்பு தோஷத்தை தரும் சனீஸ்வரன், கிரஹன தோஷத்தை தரும் ஸர்ப கிரகங்களான ராகு கேது, சந்திரனுக்கு அஷ்டங்க தோஷத்தை ஏற்படுத்தி சந்திரபலம் இல்லாத அமாவாசை ஏற்படுத்தும் சூரியன் போன்ற கிரகங்களுடன் சேர்ந்து சந்திராஷ்டமம் ஏற்படும்போது மட்டுமே கெடுபலன்கள் ஏற்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை தரும் சந்திராஷ்டமம்

நன்மை தரும் சந்திராஷ்டமம்

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாம் வீடு குருவின் வீடாகவோ அல்லது எட்டாம் வீட்டிற்க்கு குருவின் பார்வையோஅல்லது சேர்க்கையோ ஏற்பட்டால் சந்திராஷ்டம கெடுபலன் ஏற்படாது. சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் நின்று சந்திராஷ்டமம் ஏற்பட்டால் அப்போது தீமையை காட்டிலும் நன்மையை ஏற்படும். அதிலும் சுக்கிரன் ஆட்சிபலம் பெற்றுவிட்டால் உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் அதிக நற்பலன்கள் ஏற்படும்.

MOST READ: இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?...இத படிங்க... தெரிஞ்சிக்கங்க...

குரு பார்வையால் நன்மை

குரு பார்வையால் நன்மை

ஒருவர் ஜாதகத்தில் ஜெனன சந்திரன் குரு பார்வை பெற்ற நிலையில் அவருக்கு சந்திராஷ்டமம் கெடுதல் செய்யாது. ஜெனன ஜாதகத்தில் சந்திரன் அதிக ஷட்பலம் பெற்று நின்றாலும், சந்திரன் பின்னாஷ்டகவர்க பரல்களாக 6 க்கு மேற்பட்ட பரல்கள் பெற்றுவிட்டாலும், சந்திரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நின்றாலும் சந்திராஷ்டம பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

குரு சுக்கிரன்

குரு சுக்கிரன்

ஒருவர் சந்திராஷ்டமம் அடையும் நக்ஷத்திரம் குருவின் நக்ஷத்திரமாகவோ சுக்கிரனின் நக்ஷத்திரமாகவோ அமைந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் கெடுபலன் அளிப்பதில்லை. மாறாக நன்மையே நடக்கும். சந்திராஷ்டம தினத்தில் குருவின் அம்சமான பிராமணர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இயன்ற அளவு தாம்பூலம் கொடுக்க வேண்டும். நட்சத்திர தேவதைகளை வணங்க நன்மைகள் நடக்கும்.

கடன் அடைக்கலாம்

கடன் அடைக்கலாம்

சந்திராஷ்டம நாளில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை செய்யாமல் தவிர்த்து விடுகின்றனர். சந்திராஷ்டம நாளில் கடன் அடைக்கலாம். கொடுத்த கடனை திரும்ப வாங்கலாம். கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம். புனித தலங்களுக்கு யாத்திரை போகலாம். புதிய ஆடைகள் வாங்கலாம்.

MOST READ: புண்ணியம் தரும் புரட்டாசி சனி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

புரட்டாசியில் சந்திராஷ்டமம்

புரட்டாசியில் சந்திராஷ்டமம்

புரட்டாசி மாதம் துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்கி அதே துலாம் ராசியில் முடிகிறது. புரட்டாசி 2 துலாம், புரட்டாசி 4 விருச்சிகம், புரட்டாசி 6 தனுசு, புரட்டாசி 9 மகரம், புரட்டாசி 11 கும்பம், புரட்டாசி 12 விடிகாலை மீனம், புரட்டாசி 15 மேஷம், புரட்டாசி 17 ரிஷபம், புரட்டாசி 19 மிதுனம், புரட்டாசி 22 கும்பம் கடகம், புரட்டாசி 24 சிம்மம், புரட்டாசி 27 கன்னி புரட்டாசி 29 துலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

purattasi month chandrashtama days and effects 2019

Chandrashtama days occurs for all Janmarashi or Moon Sign when Purattasi 2019.Chandrashtama days means when the moon is transiting through the eighth house of your own moon sign which is known as JanmaRasi.
Story first published: Thursday, September 19, 2019, 11:02 [IST]
Desktop Bottom Promotion