சந்திராஷ்டமம் : இந்த வாரம் மவுன விரதம் இருக்க வேண்டியவங்க இந்த 4 ராசிதான்

சந்திராஷ்டம சமயத்தில் சிலர் நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள். சந்திரன் இந்த வாரம் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு சந்திர

சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை நம்முடைய ராசிக்கு சந்திரன் எட்டாவது வீட்டில் இருந்தால் அன்றைய தினம் சந்திராஷ்டமம். இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை சந்திரன் சஞ்சாரத்தைப் பொருத்து பார்த்தால் வார முதலில் விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டம் தொடங்குகிறது. தனுசு, மகரம், கும்பம் ராசி என நான்கு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நான்கு ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வீரமான மேஷ ராசிக்காரர்களே. செவ்வாயை அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் சந்திரன் சாதகமான ராசிகளில் பயணிக்கிறார். நினைத்தது நிறைவேறும். கடன்கள் தீரும் நோய்கள் எட்டிப்பார்க்கும் கவனம் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம். தைரியமாக முடிவு எடுங்கள் வெற்றி குவியும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை தேவை. வயிறு பிரச்சினை வரும் சுகர் இருப்பவர்கள் உடனே கவனிங்க. மருத்துவர்களிடம் உடனே போங்க. சந்திரன் சஞ்சாரம் சகாயமாக உள்ளது. லாபம் வரும். வீடு விற்பனை லாபத்தில் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சோதனைகள் கருத்து மாறுபாடுகள் ஏற்படும். கண்களை கவனிங்க. பிறருக்கு எதையும் இரவல் தரவேண்டாம். பொருள் திரும்ப வராது. வெளிநாடு வாய்ப்புகள் கூடி வரும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் பணவரவு அதிகம் இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். செவ்வாய் பெயர்ச்சி இந்த வாரம் இருப்பதால் கவனம் தேவை. வார இறுதியில் நீசம் பெற்ற சுக்கிரனுடன் செவ்வாய் இணைவதால் யாரையும் நம்ப வேண்டாம். ஏமாற வாய்ப்பு உண்டு எச்சரிக்கை தேவை. குரு உங்க ராசியை பார்ப்பதால் பிரச்சினைகள் தீரும் பிள்ளைகளை அனுசரித்து போங்க. கணவன் மனைவி உறவில் பிரச்சினை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவு நீங்க சுக்கிரபகவானை வணங்குங்கள்.

மிதுனம்

மிதுனம்

புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே. இந்த வாரம் 24-09-2019 அதிகாலை 04.50 மணி வரை சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். இரண்டாம் இடம் மூன்றாம் இடம் என பயணிக்கிறார். பணவரவு கிடைக்கும் முயற்சிகள் வெற்றியாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். வார முற்பகுதியில் கவனமாக இருங்க. உங்க ராசி அதிபதி புதன் உச்சம் பெற்றிருக்கிறார். பின்னர் ஐந்தாம் வீட்டிற்கு நகர்வதால் தொழிலில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்து போங்க இல்லாட்டி சிலருக்கு வேலை போய்விடும். கடன் வாங்குவீர்கள். தடைகள் நீங்கும் அற்புதமான வாரம்

கடகம்

கடகம்

இந்த வாரம் உங்க ராசிநாதன் சந்திரன் இந்த வாரம் 24-09-2019 அதிகாலை 04.50 மணி முதல் 26-09-2019 காலை 06.40 மணி வரை உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் நீசமடைந்திருப்பதால் உங்களுக்கு பிரச்சினை நிவர்த்தியடையும். பெண்களால் ஏற்பட்டால் தொல்லைகள் நீங்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி கிடைக்கும். குருபகவான் ராசியை பார்ப்பதால் நன்மைகள் நடக்கும் லாபங்கள் கிடைக்கும் பணவரவு கிடைக்கும். கல்வி சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு தடைகள் விலகும். ஆறில் சனி கேது இருப்பதால் உடல் நலத்தில் அக்கறை தேவை. முருகப்பெருமானை வணங்க இந்தவாரம் வெற்றிகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

சந்திரன் இந்த வாரம் 26-09-2019 காலை 06.40 மணி முதல் 28-09-2019 காலை 06.20 மணி வரை உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். மகிழ்ச்சியான கால கட்டம் பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே கருத்த மாறுபாடு ஏற்படும். இந்த வாரம் புதிய இடத்தில் வேலைக்கு மாறுதல் நடக்கும். வெற்றிக்கான காலகட்டம். பார்ட்டிக்கு போகும் போது கவனம். நண்பர்களை தேர்வு செய்யும் போது கவனம். இரண்டாம் வீட்டில் கிரகங்கள் இருப்பதால் பணவரவு அதிகம் இருக்கும்.

இல்லறம் மகிழ்ச்சியானதாக மாறும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் சந்தோஷமான வாரம். காரணம் உங்க ராசியில் சஞ்சரிக்கும் கிரகங்கள்தான். முகத்தில் பொலிவு கூடும்.

சந்திரன் இந்த வாரம் 28-09-2019 காலை 06.20 மணி முதல் 30-09-2019 அதிகாலை 05.45 மணி வரை உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். முயற்சிகள் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தங்கள். திருமண தடைகள் நீங்கும். நல்ல செய்திகள் தேடி வரும். ஆலய தரிசனம் அமைதியை தரும். பணவருமானம் அபரிமிதாக இருக்கும்.

துலாம்

துலாம்

பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து வாரம் தொடங்குகிறது. விரைய ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் சில விரைய செலவுகள் ஏற்படும். இந்த வாரம் புதன் உங்க ராசிக்கு வருகிறார். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் கிடைக்கும். உயர்கல்வி விசயத்தில் நீங்க நினைத்தது நன்மையில் முடியும். வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். பிரிந்தவர்கள் இணைவார்கள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், பணவரவு கிடைக்கும் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்று பாடுவீர்கள். பிரம்மாண்ட வெற்றிகள் தேடி வரக்கூடிய பொன்னான வாரம் இது.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் சஞ்சாரத்தினால் இந்த வாரம் உங்களுக்கு வார தொடக்கமே சந்திராஷ்டமம் 24-09-2019 அதிகாலை 04.50 மணி வரை உள்ளதால் அமைதியாக இருப்பது நல்லது. வார மத்தியில் இருந்து நன்மைகள் நடைபெறும். வீடு கட்டுவதற்கு பொருளாதார நிலை உயரும். இரண்டாம் வீட்டில் சனி கேது அஷ்டமத்தில் ராகு இருப்பதால் யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. பணம் கொடுக்க வேண்டாம். எந்த வம்பு வழக்கிலும் மாட்டிக்கொள்ளாதீர்கள். பயணங்களில் நிதானம் தேவை இல்லாவிட்டால் கொட்டி கவிழ்த்து விடும். வெளியில் போகும் போது நாட்டுச் சர்க்கரையை வாயில் போட்டுக்கொண்டு போங்க. உடல் அசதி ஏற்படும் கவனம் தேவை.

தனுசு

தனுசு

இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தினால் சந்திராஷ்டமம் 24-09-2019 அதிகாலை 04.50 மணி முதல் 26-09-2019 காலை 06.40 மணி வரை உள்ளது. இந்த இரண்டு நாட்களும் மவுன விரதம் இருக்கவும் ஆலய தரிசனம் மன அமைதியை தரும். ராசி நாதன் குருவினால் வெளிநாடு யோகம் வரும். சனி கேது உடன் இருப்பதால் நன்மைகள் நடக்கும். கவலைப்பட வேண்டாம். குருவினால் புதிய வேலைகள் கிடைக்கும். 12ஆம் வீட்டில் உள்ள குருவினால் சில விரைய செலவுகள் ஏற்படும். குருவினால் பல வியாதிகள் விலகும். மாணவர்களுக்கு நன்மைகள் நடக்கும். கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. சந்திராஷ்டம பாதிப்புகள் குறைய நெய் சேர்த்த உணவுகளை சாப்பிடுங்கள்.

மகரம்

மகரம்

இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தினால் சந்திராஷ்டமம் 26-09-2019 காலை 06.40 மணி முதல் 28-09-2019 காலை 06.20 மணி வரை உள்ளதால் கவனமாக இருப்பது அவசியம் வம்பு சண்டைக்கு போகாதீங்க. பிரச்சினைகளை விட்டு ஒதுங்கிப் போங்க. சுக்கிரனால் நன்மைகள் நடக்கும். ராகுவை வணங்க நன்மைகள் நடக்கும். உங்க ராசிநாதன் சனி நன்மை செய்வார். கணவன் மனைவி உறவில் சிறு விரிசல் ஏற்படும் கவனம் தேவை. மனதளவில் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளலாம். விட்டுக்கொடுத்துப்போங்க கனிவா பேசுங்க. வம்பு வழக்குகளை தவிர்த்து விடுங்கள். சட்டச்சிக்கல்களை தவிர்த்து விடுங்கள். நாவை அடக்கினால் நன்மை நடக்கும். உடல் நலத்திலும் கவனமாக இருங்க. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள் சந்திராஷ்டம நாளில் வெள்ளை நிற ஆடைகளை உடுத்துங்கள் பாதிப்புகள் குறையும்.

கும்பம்

கும்பம்

இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தினால் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் 28-09-2019 காலை 06.20 மணி முதல் 30-09-2019 அதிகாலை 05.45 மணி வரை உள்ளதால் கவனமாக இருங்க. இந்த நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பிரச்சினை இல்லை. வார துவக்கத்தில் மகிழ்ச்சியா இருப்பீங்க. பயணங்கள் நன்மையை தரும். எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் கூட்டணியால் வண்டி வாகனத்தில் கவனம் தேவை. பாக்ய ஸ்தானத்திற்கு மாறும் புதனால் வியாபாரத்தில் நன்மைகள் நடக்கும். இந்தவாரம் சந்திராஷ்டமத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர மிளகு சேர்த்த உணவுகளை சாப்பிடுங்கள் பாதிப்புகள் குறையும். பயணங்களை திட்டமிடுங்கள்.

மீனம்

மீனம்

இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. பயணங்களினால் நன்மை நடக்கும் பணவரவு அதிகம் கிடைக்கும். கிரகங்களின் சஞ்சாரம் பாக்ய ஸ்தானத்திலும் தொழில் ஸ்தானத்திலும் உள்ளதால் தொழிலில் லாபம் அதிகம் கிடைக்கும் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உங்க ராசிக்கு சனி செவ்வாய் பார்வை கிடைப்பதால் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். செவ்வாய் வார மத்தியில் சுக்கிரனுடன் சேருவதால் இந்த கூட்டணியால் மீனம் ராசிக்கார பெண்கள் கவனமாக இருங்க இல்லாவிட்டால் ஏமாற்றங்கள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, September 23, 2019, 17:10 [IST]
Desktop Bottom Promotion