Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சாணக்கிய நீதியின் படி பெற்றோர்கள் இந்த தவறுகளை தெரியாமல் கூட குழந்தைகள் முன் செய்துவிடக்கூடாதாம்...!
அரசியல், பொருளாதாரம், இராஜதந்திரம் என அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்த ஒரு அறிஞர் சாணக்கியர்.
அரசியல், பொருளாதாரம், இராஜதந்திரம் என அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்த ஒரு அறிஞர் சாணக்கியர். சாணக்கியரின் ஒவ்வொரு செய்தியும் இன்றைய வாழ்க்கைக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. சாணக்கியரின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டால், உங்கள் வாழ்க்கை மேலும் சிறப்பாக இருக்கும். அவரது சாணக்கியநீதியில் அற்புதமான வாழ்க்கைப் பாடங்கள் உள்ளன.

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கை தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். திருமண வாழ்க்கையைப் போலவே குழந்தை வளர்ப்புக்காக பெற்றோருக்காக சில செய்திகளைக் கூறியுள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் சில விஷயங்களைச் செய்யக்கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார். பெற்றோர்கள் செய்வது, சொல்வது எல்லாம் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய இந்த 4 விஷயங்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

யோசிக்காமல் பேசக்கூடாது
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குழந்தைகள் முன் ஒவ்வொருவரும் மிகவும் சிந்தனையுடன் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில் குழந்தைகள் இளம் செடியைப் போல மென்மையானவர்கள். நீங்கள் அவர்களை வடிவமைக்கும்போது, அவைதான் அவர்களின் எதிர்காலத்தில் பிரதிபலிக்கும். குழந்தைகள் முன் இருக்கும்போது பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை சாணக்கிய நீதி விளக்கியுள்ளது.

தவறான வாரத்தைகளை பேசக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகள் முன் இழிவான வார்த்தைகளையோ அல்லது தவறான வார்த்தைகளையோ பயன்படுத்தக்கூடாது. இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குழந்தைகளை பண்பானவர்களாக வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பு, எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் மிகவும் கண்ணியமாக பேச வேண்டும். குழந்தைகள் முன் பேசும் போது பலர் தங்கள் மானம், கண்ணியம் பற்றி நினைப்பதே இல்லை. பெற்றோர்கள் இந்த தவறை ஒருபோதும் செய்யக்கூடாது. குழந்தைகள் முன் அவதூறாகப் பேசாதீர்கள். இது குழந்தைகளின் மனதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் பேசும்போது அவர்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

பொய் சொல்லாதீர்கள்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் பொய் சொல்லவோ, நடிக்கவோ கூடாது என்று சாணக்கைய கூறுகிறார். நீங்கள் அவர்களுக்கு முன்னால் பொய் சொன்னாலோ அல்லது உங்கள் பொய்களில் அவர்களை ஈடுபடுத்தினாலோ அவர்கள் உங்கள் மீதான மரியாதையை இழக்க நேரிடும். பின்னர் அவர்கள் உங்களிடம் பொய் சொல்ல ஆரம்பிக்கலாம். எனவே குழந்தைகளிடம் பொய் சொல்லாதீர்கள் அல்லது அவ்வாறு செய்ய ஊக்குவிக்காதீர்கள்.

யாரையும் அவமதிக்காதீர்கள்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன் சண்டையிடுகிறார்கள், மற்றவர்களின் குறைகளைப் பற்றி பேசுகிறார்கள். இது முற்றிலும் தவறு என்று சாணக்கியர் கூறுகிறார். இப்படிச் செய்வதால் குழந்தை பெற்றோரின் மீதான மரியாதையை இழக்கிறார்கள். இதன் காரணமாக, குழந்தைகள் உங்களை அவமானப்படுத்தவும், மோசமாக சித்தரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர்கள் இதுபோன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.

கதைகள் கூற வேண்டும்
சாணக்கியரின் அறிவுரையின்படி, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கதைகள் கற்பிக்க வேண்டும். சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக விளங்கும் மாமனிதர்களின்கதைகளை குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. இதனால் குழந்தைகள் அவர்களைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசையில் வளர்கிறார்கள். இந்த கதைகள் குழந்தைகளின் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முடிந்தவரை பல உத்வேகமான கதைகளை சொல்ல வேண்டும்.

அன்புடன் பேச வேண்டும்
குழந்தைகள் கடவுளுக்கு சமமானவர்கள். எனவே குழந்தைகளை மிகுந்த அன்புடன் வளர்க்க வேண்டும். ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு அனைத்தையும் அன்புடன் கற்பிக்க வேண்டும். குழந்தைகள் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை. மேலும், உங்கள் பிள்ளைகள் உங்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் கண்ணியமாகவும், பண்பட்டவர்களாகவும் இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அவர்களின் மொழியை மேம்படுத்துவதே முதல் படி. அதற்கு அவர்கள் முன் பேசும்போது நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications