Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
விருச்சிகத்தில் உருவாகியுள்ள புதன் ஆதித்ய யோகத்தால் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது...
விருச்சிக ராசியில் சூரியனும், புதனும் சேர்ந்துள்ள யோகம் தான் புதன் ஆதித்ய யோகம். இந்த யோகம் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2021 நவம்பர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் மிகவும் மங்களகரமான யோகம் உருவாகிறது. கடந்த நவம்பர் 21 ஆம் தேதி புதன் விருச்சிக ராசியில் நுழைந்தது. அதற்கு முன்னதாக நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்தது. இப்படி விருச்சிக ராசியில் சூரியனும், புதனும் சேர்ந்துள்ள யோகம் தான் புதன் ஆதித்ய யோகம். இந்த யோகம் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.

இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சில ராசிகளுக்கு மிகவும் அற்புதமான காலமாக இருக்கும். இப்போது விருச்சிகத்தில் உருவாகியுள்ள புதன் ஆதித்ய யோகத்தால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியனும், புதனும் இணைந்துள்ளனர். இது இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் அது நிறைவேறும். பெற்றோர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியனும் புதனும் ஒன்றாக இணைந்துள்ளனர். இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் பேசும் திறனில் முன்னேற்றம் தெரியும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இக்காலத்தில் வெற்றி கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் புதனும், சூரியனும் சேர்ந்திருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் நன்மை கிட்டும். சூரியனும், புதனும் இணைவதால், திடீர் பண வரவு உண்டாகும். மேலும் இந்த ராசிக்காரர்களின் ஆசை இக்காலத்தில் நிறைவேறும்.

கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் புதன்-சூரியன் சேர்க்கை நிகழ்ந்துள்ளத. இதனால் தொழில் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இந்த ராசியைச் சேர்ந்த சிலருக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
