For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Budget 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கீழே 2023 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்துள்ள நிர்மலா சீதாராமன் எந்த நிற புடவையை அணிந்து வந்துள்ளார் மற்றும் கடந்த 4 ஆண்டுகளில் அவரது தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

|

Budget 2023: இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும் போதும், அவர் அழகான கைத்தறி புடவைகளை அணிந்து வருவார். ஏனெனில் நிர்மலா சீதாராமனுக்கு கைத்தறி புடவைகள் என்றால் கொள்ளை பிரியம். எனவே அவர் கைத்தறி ஆடைகளை நெய்யும் கைவினைஞர்களின் படைப்புக்களை வெளிக்காட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போது, பல அழகான கைத்தறி புடவைகளை அணிந்து வருகிறார்.

Budget 2023: Nirmala Sitharaman Wears Bright Red Saree; Her Looks In Past Budget Sessions

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 ஆம் ஆண்டில் இருந்து பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டிலும் பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போதும், அவர் என்ன பட்ஜெட் தாக்கல் செய்யப் போகிறார் என்பது மட்டுமின்றி, அவர் அணிந்து வரும் புடவைகளும் அதிகம் பேசப்படுவதுண்டு. அந்த வகையில் கீழே 2023 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்துள்ள நிர்மலா சீதாராமன் எந்த நிற புடவையை அணிந்து வந்துள்ளார் மற்றும் கடந்த 4 ஆண்டுகளில் அவரது தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்ஜெட் 2019

பட்ஜெட் 2019

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 ஆம் ஆண்டில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் கோல்டர் பார்டர் கொண்ட அடர் பிங்க் நிற மங்கல்கிரி புடவையை அணிந்து வந்திருந்தார். அதுமட்டுமின்றி, அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் லெட்ஜர் பேப்பர்களை பிரீஃப்கேஸில் வைத்து கொண்டு வருவதற்கு பதிலாக அந்த பேப்பர்களை தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பாஹி கட்டாவில் கொண்டு வந்தார்.

பட்ஜெட் 2020

பட்ஜெட் 2020

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 202 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நீல பார்டர் கொண்ட மஞ்சள்-கோல்டன் நிறங்கள் கலந்த பட்டுப் புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த நிறமானது செழிப்பு மற்றும் மிகுதியைக் குறிக்கும் பிரகாசமான மற்றும் மங்களகரமான நிறமாகும். மேலும் இந்தியர்கள் பெரும்பாலும் நல்ல நாட்களில் இந்த நிற ஆடைகளை அதிகம் அணிவார்கள்.

பட்ஜெட் 2021

பட்ஜெட் 2021

2021 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பச்சை பார்டர் கொண்ட சிவப்பு மற்றும் வெள்ளை நிற போச்சம்பள்ளி புடவையை அணிந்து வந்திருந்தார்.

பட்ஜெட் 2022

பட்ஜெட் 2022

2022 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்டரில் வெள்ளி நூல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒருவித மெரூன் நிற கைத்தறி பொம்காய் புடவையை அணிந்திருந்தார். பொம்காய் ஒடிசாவில் தயாரிக்கப்படுகிறது. இந்த புடவையானது இவரது எளிமையை வலியுறுத்துவதாக பார்வையாளர்கள் கூறினர்.

பட்ஜெட் 2023

பட்ஜெட் 2023

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 5 ஆவது பட்ஜெட் தாக்கலின் போது கருப்பு மற்றும் கோல்டர் பார்டர் கொண்ட சிவப்பு நிற பட்டுப் புடவையை அணிந்து வந்துள்ளார். இந்த புடவையானது இவரை எளிமையாகவும், நேர்த்தியாகவும் வெளிக்காட்டியது. இந்த புடவைக்கு இவர் காதுகளில் சிறு தங்க காதணியை மட்டும் அணிந்து, சிம்பிளாக வந்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Budget 2023: Nirmala Sitharaman Wears Bright Red Saree; Her Looks In Past Budget Sessions

Budget 2023: Nirmala Sitharaman Wears Bright Red Saree; Her Looks In Past Budget Sessions, Take a look...
Desktop Bottom Promotion