For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வடஇந்தியாவில் தீபாவளியின் கடைசி நாளில் கொண்டாடப்படும் பாய் தூஜ்.. அது என்ன பண்டிகை தெரியுமா?

பாய் தூஜ் பண்டிகையானது ஐப்பசி அமாவாசை முடிந்த 2வது நாள் கொண்டாடப்படுகிறது. பாய் தூஜ் பண்டிகையானது சகோதர-சகோதரிகளின் பாச பிணைப்பை போற்றி கொண்டாடும் தினமாகும்.

|
Bhai Dooj 2022: Date, Shubh Muhurat, Rituals, History And Significance In Tamil

தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீபாவளியைத் தொடர்ந்து தந்தேராஸ் முதல் பாய் தூஜ் வரை 5 நாட்கள் கொண்டாட்டம் தான். அந்த வகையில், பாய் தூஜ் பண்டிகையானது ஐப்பசி அமாவாசை முடிந்த 2வது நாள் கொண்டாடப்படுகிறது. பாய் தூஜ் பண்டிகையானது சகோதர-சகோதரிகளின் பாச பிணைப்பை போற்றி கொண்டாடும் தினமாகும். ரக்ஷாபந்தனை போலவே இதுவும் உடன்பிறப்புகளின் முக்கியத்துவத்தைப் போற்றும் விழா. பாய் என்றால் சகோதரன் மற்றும் தூஜ் என்றால் அமாவாசைக்கு பிந்தைய 2வது நாள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாய் தூஜ்

பாய் தூஜ்

ரக்ஷாபந்தன் தவிர, சகோதரிகள் செழிப்புக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும், தங்கள் சகோதரர்களின் நல்வாழ்வுக்காகவும், கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் பாய் தூஜ் ஆகும். இது இந்தியா, நேபாளம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் வசிக்கும் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும். பாய் தூஜ் பண்டிகையானது பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் யம த்விதியா என்று கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் இது பாய் ஃபோண்டா என்றும், நேபாள மக்கள் அதை பாய் டிகா என்று கொண்டாடுகிறார்கள்.

பாய் தூஜ் வரலாறு

பாய் தூஜ் வரலாறு

பாய் தூஜ் பண்டிகையின் தோற்றத்திற்குப் பின்னால் சில இந்து புராணக் கதைகள் உள்ளன. அதன்படி, மரணத்தின் கடவுளான யமன், கார்த்திகை மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் த்விதிய திதியில் தனது சகோதரி யமுனா தேவியை தரிசித்து அவளிடமிருந்து உணவைப் பெற்றதாக நம்பப்படுகிறது. சகோதரி யமுனா தனது சகோதரனை திலகமிட்டு வரவேற்றார். அப்போதிருந்து, இந்த நாள், சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான அன்பு, அக்கறை மற்றும் பிணைப்பின் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் செழிப்பு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்து திலகம் வைத்து கொண்டாடுகிறார்கள்.

பாய் தூஜ் பண்டிகை தேதி

பாய் தூஜ் பண்டிகை தேதி

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு பாய் தூஜ் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின் படி, ஐப்பசி மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் 2 வது நாளில் திருவிழா நடைபெறுகிறது. அதுவே, கிரிகோரியன் நாட்காட்டியின்படி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வரும். இந்த ஆண்டு பாய் தூஜ் விழா அக்டோபர் 26ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

சுப முகூர்த்த நேரம்

சுப முகூர்த்த நேரம்

பஞ்சாங்கத்தின்படி, அக்டோபர் 26 ஆம் தேதி மதியம் 2.42 மணிக்கு தொடங்கி அக்டோபர் 27 ஆம் தேதி மதியம் 12.45 மணிக்கு முடிவடையும். சடங்குகளுக்கான சுப முகூர்த்தம் மதியம் 1.12 மணி முதல் 3.26 மணி வரை சுமார் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடிக்கும். இந்த மங்களகரமான கால நேரத்தில் சகோதரிகள் தனது சகோதரர்களுக்கு திலகமிடலாம்.

பாய் தூஜின் சடங்குகள்

பாய் தூஜின் சடங்குகள்

சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு அரிசி மாவு கோலத்துடன் அலங்கரித்த ஒரு இருக்கையை உருவாக்கி அமர செய்யவும். பின்னர், தங்கள் சகோதரர் நெற்றியில் குங்குமம், தயிர், அசிரி கலந்த கலவையால் திலகமிடவும். அதன் பிறகு, அவர்கள் தங்கள் சகோதரர்களின் உள்ளங்கையில் பூக்கள், வெற்றிலை பாக்கு மற்றும் நாணயங்களை வைத்து, தண்ணீர் ஊற்றி மெதுவாக மந்திரங்களை உச்சரிக்கவும். பின்னர் கயிறை கையில் கட்டி முடித்ததும், ஆரத்தி எடுக்கவும். இறுதியாக, இந்த சடங்கை முடிக்க சகோதரிகள் சகோததர்களுக்கு தண்ணீருடன் இனிப்புகளையும் கொடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bhai Dooj 2022: Date, Shubh Muhurat, Rituals, History And Significance In Tamil

Bhai Dooj 2022: Date, shubh muhurat, rituals, history and significance In Tamil, Read on to know more...
Story first published: Monday, October 24, 2022, 16:00 [IST]
Desktop Bottom Promotion