For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென்னிந்தியாவில் ஆயுத பூஜை கொண்டாடப்படுவதற்கு பின்னால் இருக்கும் மகாபாரதக் கதை என்ன தெரியுமா?

ஆயுத பூஜை என்பது நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும் கருவிகள் மற்றும் பொருட்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் நமது நன்றியைத் தெரிவிக்கும் நாளாகும்.

|

ஆயுத பூஜை என்பது நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும் கருவிகள் மற்றும் பொருட்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் நமது நன்றியைத் தெரிவிக்கும் நாளாகும். இது நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாகும். இந்த நாள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை, அஸ்திர பூஜை, சாஸ்திர பூஜை மற்றும் கந்தே நவமி என குறிப்பிடப்படுகிறது, இருப்பினும் அனைத்து சொற்களும் நாம் பயன்படுத்தும் கருவிகளுக்காக செய்யப்படும் பூஜையை குறிக்கிறது.

Ayudha Puja 2021: Date, Timings, History and Importance of Worshipping Weapons in Tamil

இந்து தமிழ் நாட்காட்டியில் ஐப்பசி மாதத்தில் வளர்பிறை நிலவு சுழற்சியின் 10 வது நாளில் கொண்டாடப்படுகிறது. இது தசரா அல்லது நவராத்திரி விழாவின் 10 வது நாளில் கொண்டாடப்படுகிறது. ஒன்பதாவது இரவில் துர்கா தேவி அசுர வேந்தன் மகிஷாசுரனை வென்ற பிறகு, அவர் தன்னுடைய ஆயுதங்களை கீழே வைத்து வணங்கினார், அந்த நாள் ஆயுத பூஜை என்று அழைக்கப்பட்டது. ஆனால் ஆயுத பூஜைக்கு பின்னால் வேறுசில புராணக்கதைகளும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகாபாரதமும், ஆயுதபூஜையும்

மகாபாரதமும், ஆயுதபூஜையும்

முதல் கதை மைசூர் அரச குடும்பம் மற்றும் அவர்களின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் புராணக்கதை. மகாபாரதத்தில் பாண்டவர்கள் கௌரவர்களால் நாடுகடத்தப்பட்டனர். காட்டுக்குச் செல்வதற்கு முன், அர்ஜுனன் தனது ஆயுதங்களை ஒரு ஷமி (ஜம்மி) மரத்தில் மறைத்து வைத்தார். 13 வருட வனவாசம் மற்றும் 1 வருட அஞ்ஞாத வாசத்திற்குப் பிறகு, விஜயதசமி நாளில் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பினர். அர்ஜுனன் அந்த நாளில் தனது ஆயுதங்களை . எனவே புதிய தொடக்கங்களுக்காக விஜயதசமி ஒரு மகத்தான நாளாக கருதப்படுகிறது. கர்நாடகாவில், விஜயதசமிக்கு முந்தைய நாள் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

களபலியும், ஆயுதபூஜையும்

களபலியும், ஆயுதபூஜையும்

இரண்டாவது புராணக்கதை களபலியின் நடைமுறையைப் பற்றியது, இது போர்க்களத்திற்கு தியாகம் என்று கூறப்படுகிறது.பண்டையக் காலங்களில், போர் தொடங்குவதற்கு முன், இரு தரப்பினரும் போர் கடவுளை திருப்திப்படுத்த மனித உயிரை தியாகம் செய்வார்கள். பின்னர் அது கால்நடைகள் அல்லது ஆடுகளின் பலிகளாக மாறியது. இந்த புராணக்கதை மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, அங்கு குருக்ஷேத்ரா போருக்கு முன்பு.கௌரவர்களின் தலைவரான துரியோதனனுக்கு ஜோதிடரால் போருக்கு முந்தைய நாள் அமாவாசை நாளில் பலி கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. அர்ஜுனனின் மகன் அரவான் தானாக முன்வந்து பலியாக தயாராக இருந்தார். கிருஷ்ணர் தலையிட்டு அரவானை கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் இருவருக்கும் சேர்த்து உயிர் தியாகம் செய்யும்படி அறிவுறுத்தினார். யுதிஷ்டிரன் அரவானை காளிதேவிக்கு பலியிட்டார். காளி போர்க்களத்தில் தோன்றி பாண்டவர்களுக்கு வெற்றியை அளித்தார். ஆயுதபூஜையாக கொண்டாடப்படும் தசராவிற்கு அடுத்த நாள் இந்த தியாகம் செய்யப்பட்டது.

ஆயுத பூஜை முகூர்த்தம்

ஆயுத பூஜை முகூர்த்தம்

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் நவமி திதியில் ஆயுத பூஜை அனுசரிக்கப்படுகிறது. த்ரிக்பஞ்சாங்கின் படி, நேரங்கள் முறையே,

அக்டோபர் 14, 2021 வியாழக்கிழமை ஆயுத பூஜை

ஆயுத பூஜை விஜய முகூர்த்தம் - 02:02 PM முதல் 02:48 PM வரை

காலம் - 00 மணி 46 நிமிடங்கள்

அக்டோபர் 15, 2021 வெள்ளிக்கிழமை மைசூர் தசரா

நவமி திதி தொடங்குகிறது - 08:07 PM, அக்டோபர் 13, 2021

நவமி திதி முடிவடைகிறது - அக்டோபர் 14, 2021 அன்று மாலை 06:52 மணி

ஆயுத பூஜைக்கு முன் செய்ய வேண்டியவை

ஆயுத பூஜைக்கு முன் செய்ய வேண்டியவை

நீங்கள் பூஜை செய்ய விரும்பும் பகுதியை குறிக்கவும். கருவிகள் மற்றும் பொருள்கள் தொந்தரவு செய்யாத பகுதியை தேர்வு செய்யவும். பூஜைக்காக நீங்கள் ஒதுக்கி வைக்க விரும்பும் கருவிகளை முடிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகள் உங்களுக்கு முக்கியமானவை மற்றும் உங்கள் அன்றாட வாழ்க்கையில் உங்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். பூஜையைத் தொடங்குவதற்கு முன் உங்களின் கருவிகள் சரியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா, அவற்றுக்கு திலகம் இடப்பட்டுள்ளதா என்று சோதனை செய்யுங்கள்.

பூஜைக்குத் தேவையான பொருட்கள்

பூஜைக்குத் தேவையான பொருட்கள்

பூஜைக்கு சில அத்தியாவசிய பொருட்கள் உள்ளன, மஞ்சள், குங்குமம், அரேகா நட்ஸ், வெற்றிலை, வெள்ளை பூசணி, எலுமிச்சை, வாழைப்பழம், பொடித்த வெல்லம், தேங்காய், வாழை இலை, ஊதுவத்தி, கற்பூரம் மற்றும் நைவேத்தியம் செய்ய வேண்டிய உணவுகள் போன்றவை அவசியமானவை.

ஆயுத பூஜையின் சடங்குகள்

ஆயுத பூஜையின் சடங்குகள்

நவராத்திரியின் எட்டாம் நாளில், அதாவது மகா அஷ்டமி, நவமி திதியில் துர்கா தேவியின் ஆயுதங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன, பின்னர் கருவிகள் தேவியின் முன் வைக்கப்பட்டு அவரது ஆசீர்வாதத்தைப் பெறுகின்றன. கருவிகளை ஒரு மேடையில் அமைத்து அவற்றை மலர்களால் அலங்கரிக்கவும். பிறகு மஞ்சள் மற்றும் சந்தன பேஸ்டை தயார் செய்யவும். இந்த பேஸ்டைப் பயன்படுத்தி, கருவிகளில் திலகம் தடவவும். உங்கள் புத்தகங்கள் மற்றும் ஆய்வுப் பொருட்களை தேவியின் முன் வைக்கவும். அவர்கள் மீதும் திலகம் தடவி மலர்களால் அலங்கரிக்கவும். உங்கள் கேஜெட்களிலும் நீங்கள் இதைச் செய்யலாம் அதே போல் அவையும் இந்த நாளில் வணங்கப்படுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayudha Puja 2021: Date, Timings, History and Importance of Worshipping Weapons in Tamil

Read to know about date, timings, history and importance of worshipping weapons on Ayudha Puja.
Desktop Bottom Promotion