Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
ஜோதிடத்தின் படி, இவங்களுக்கு இதய நோய் வர வாய்ப்பிருக்கு... உங்களுக்கும் வருமா-ன்னு பாருங்க...
சமீப காலமாக மாரடைப்பால் ஏற்படும் மரணம் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம். ஜோதிடமானது ஒருவருக்கு இதய நோய் வருவதற்கு ஒருசில கிரகங்களும் காரணமாக இருப்பதாக கூறுகிறது.
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலருக்கு தங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதுவும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள், தூக்க பழக்கவழக்கங்கள் போன்றவற்றால் உடல் ஆரோக்கியம் பாழாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நிறைய பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுவும் சமீப காலமாக மாரடைப்பால் ஏற்படும் மரணம் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம்.

ஆனால் ஜோதிடமானது ஒருவருக்கு இதய நோய் வருவதற்கு ஒருசில கிரகங்களும் காரணமாக இருப்பதாக கூறுகிறது. சரி, எந்த கிரகத்தில் பிரச்சனை இருந்தால், ஒருவருக்கு இதய நோய் வரும் மற்றும் இதய நோய் வராமல் இருப்பதற்கான சில ஜோதிட பரிகாரங்கள் என்னவென்பதையும் இப்போது காண்போம் வாருங்கள்.

சூரியனின் நிலை
ஜோதிடத்தில், தலைமைப்பண்புகள் மற்றும் ஆன்மாவின் காரணியாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒருவரது ஜாதகத்தில் மிகவும் மோசமான நிலை அல்லது அசுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபருக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

சந்திரனின் நிலை
நவகிரகங்களில் மனம் மற்றும் மூளையின் காரணியாக கருதப்படுபவர் தான் சந்திரன். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் மோசமான நிலையில் இருந்தால் அல்லது ஒருவருக்கு சந்திர தோஷம் இருந்தால், அந்நபருக்கு இதய நோய் வர வாய்ப்புள்ளது.

செவ்வாயின் நிலை
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் உடலின் தசைகளுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதயமும் தசையால் ஆனது. எனவே ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் அல்லது ஜாதகத்தில் செவ்வாய் அசுப நிலையில் இருந்தால், அந்நபருக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது.

ராகுவின் நிலை
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு திடீர் நிகழ்வு, விபத்து மற்றும் நோய்கள் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. எனவே ராகு ஒருவரது ஜாதகத்தில் ராகு அசுப ஸ்தானத்தில் இருந்தால், அவருக்கு இதய நோய்/மாரடைப்பு வருதற்கான வாய்ப்புள்ளது.

இதய நோய்க்கான பரிகாரங்கள்:
ஜோதிடத்தில் எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், இதய நோய் மிகவும் ஆபத்தானது. ஒருவளே உங்களுக்கு இதய நோய் இருப்பது போன்ற சந்தேகம் மனதில் தோன்றினால், சற்றும் தாமதிக்காமல் முதலில் மருத்துவரை அணுக வேண்டும். அதன் பின்னரே எந்த ஒரு ஜோதிட பரிகாரங்களிலும் கவனத்தை செலுத்த வேண்டும். இதய நோய் வராமல் தடுக்கும் ஜோதிட பரிகாரங்கள் பின்வருமாறு:
* ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சூரியன் உதயமாகும் போது காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இப்படி சொல்வதன் மூலம், இதயம் தொடர்பான எந்த பிரச்சனையும் வராது என்பது நம்பிக்கை.
* ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு தியான நிலையில் சந்திரனை நோக்கி அமர்ந்து 108 முறை "ஓம் சோம் சோமாய நமஹ்" என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
* இது மட்டுமின்றி, செவ்வாய்க்கிமை காலையில் கடவுளை வழிபடும் போது, "ஓம் அங்கர்காய நம" என்ற செவ்வாய் பகவானுக்கு உரிய மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











