Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
2022 அட்சய திருதியை அன்று இந்த 4 ராசிக்கு லட்சுமி தேவியின் அருளால் அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!
இந்த ஆண்டு அட்சய திருதியை நாளானது மே 3 ஆம் தேதி வருகிறது. இந்த அட்சய திருதியை நாளன்று எந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரக்கூடிய மூன்றாவது நாளான திருதியை நாளில் தான் அட்சய திருதியை என்னும் அற்புதமான நாள் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் அட்சய திருதியை தினம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. நம்பிக்கைகளின் படி, அட்சய திருதியை நாளில் தானம் போன்ற நற்செயல்களை செய்வது நற்பலனை அளிக்கும். அட்சய திருதியை நாளானது மகாலட்சுமியின் அருள் நிறைந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் நாம் என்ன செய்தாலும் அல்லது வாங்கினாலும், நமக்கு 100 மடங்கு பலன் கிடைக்கும்.

பொதுவாக இந்நாளில் மக்கள் தங்கத்தை வாங்குவது வழக்கம். அட்சய திருதியை தினத்தன்று தங்கத்தை வாங்கினால் வீட்டில் தங்கும் அதிகம் சேரும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திருதியை நாளானது மே 3 ஆம் தேதி வருகிறது. இந்த அட்சய திருதியை நாளன்று எந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் லட்சுதி தேவியின் முழு ஆசியைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியம் இந்த நாளில் வெற்றிகரமாக முடிக்கப்படும். எந்த புதிய வேலையையும் தொடங்குவதற்கு இந்த நாள் நல்ல நாளாகும். பணம் அதிகம் சேரும். அதோடு சிக்கிய பணமும் உங்கள் கைக்கு கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாள் மிகவும் நன்மை பயக்கும் நாளாகும். இந்நாளில் எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் நிறைந்த நாள். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பயணங்களால் பணத்தை சம்பாதிப்பீர்கள். நிதி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த அட்சய திருதியை உங்களுக்கு மிகவும் பொன்னான நாள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. லட்சுமி தேவியின் அருளால், நீங்கள் அதிக பணம் சம் பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். இந்நாளில் உங்கள் தொழிலில் அபரிமிதமான வெற்றியைப் பெறுவீர்கள். பழைய சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலைமை வலுவாகும். எதிரிகளை வெல்வீர்கள். குடும்ப சூழல் இனிமையாகவும், சந்தோஷம் நிறைந்தும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
