For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சபாஷ் கர்னாவதி... திருநங்கையை பேராசிரியர் ஆக்கிய முதல் பல்கலைக்கழகம்...

|

கடந்த ஆண்டு, உச்சநீதிமன்றம் ஐபிசியின் 377 வது பிரிவை மறுபரிசீலனை செய்வதன் மூலம் ஒரு வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு ஓரினச் சேர்க்கையாளர்கள், லெஸ்பியன் மற்றும் திருநங்கைகளுக்கு கொண்டாட்டமான தீர்ப்பு என்றே கூறலாம். இதைத் தொடர்ந்து நம்ம அகமதாபாத் பல்கலைக்கழகமும் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு காரியத்தில் இறங்கியுள்ளது.

LGBTQ

லெஸ்பியன், திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு என பேராசிரியருக்கான நாற்காலியை வழங்கி அவர்களை கவுரவப்படுத்தி உள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில் இதை செயல்படுத்திய முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையுடன் கூறிக் கொள்கிறோம் என்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேராசிரியர்

பேராசிரியர்

சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்த சமூகத்தை சேர்ந்த ஒரு நபருக்கு பேராசிரியர் நாற்காலியையும் வழங்கி உள்ளது. இதன் மூலம் அவர்கள் இந்த சமூதாயத்தில் ஒதுங்கி இல்லாமல் தங்கள் அறிவை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அவர்கள் சமூகத்தினர் பற்ற இன்னல்களையும் தடங்களையும் மாணவர்களுக்கு புரிய வைப்பார்கள் என்று கூறியுள்ளனர்.

MOST READ: 5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள் சாப்டாங்களாம்...

எல்.ஜி.பீ.டி.கியூ சமூகத்திற்கு

எல்.ஜி.பீ.டி.கியூ சமூகத்திற்கு

இந்த மாற்றங்கள் செப்டம்பர் 9 திங்கள் அன்று 'பாலினத்தின் முன்னேற்றம்: எல்.ஜி.பீ.டி.கியூ சமூகத்திற்கு சமூக-சட்ட அணுகுமுறை' என்ற பாடநெறியின் படி இரண்டாம் பதிப்பை வெளியிடுவது குறித்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

இதன்படி ஒழுங்கமைப்பு செயலாளரும், யுனைடெட் வேர்ல்ட் ஸ்கூல் ஆஃப் லா சட்டத்தின் உதவி பேராசிரியருமான ஸ்ருத் பிரம்பட் கூறுகையில், "ஒரு நாற்காலி என்பது எல்லோருக்கும் பொதுவான இடம். இதுவரை பேராசிரியர், இணை பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி கூட்டாளிகள் எனத் தான் இருந்தது. அப்படி என்றால் இந்த குறிப்பிட்ட சமூகத்திற்காக யார் பணியாற்றுவார்கள்? என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது" என்கிறார்.

புரிதல்

புரிதல்

பல்கலைக்கழகத்தின் புரோவோஸ்ட், தீபக் ஷிஷூ கூறுகையில்" இந்த சமூகத்திலிருந்து நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தன்னுடைய பணியை சிறப்பாக செயலாற்றுவார். அவருக்கு கொடுக்கப்பட்ட இந்த பேராசிரியர் நாற்காலி அவரை பெருமைபடுத்துகிறது. அவருடைய அறிவைக் கொண்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் மாற்றக் கூடியவர். தங்களுடைய சமூகத்தினர் பற்றிய விளக்கங்களை எடுத்துக் கூறும் திறமை பெற்றவர்" இது மாணவர்களும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய புரிதல் என்றார்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

மேலும் இந்த முயற்சி தொடர்பாக நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து கடிதங்களை பெற முடிவு செய்தோம். இந்த விழிப்புணர்வு மக்களிடையே போய் சேர வேண்டும் என்பதே முக்கியம். ஆனால் இன்று வரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு சுற்றறிக்கையும் வரவில்லை.

இந்நிகழ்ச்சியில் சட்ட மற்றும் நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பி.கே. மல்ஹோத்ராவும், அவர்களின் சிறப்பு விருந்தினராக ராஜ்பிப்லாவின் இளவரசரும், லட்சிய அறக்கட்டளையின் நிறுவனருமான மன்வேந்திர சிங் கோஹ்லி ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இளைஞர்கள் மத்தியில்

இளைஞர்கள் மத்தியில்

இந்த பாலின ரீதியான ஒதுக்களிப்பை இளைஞர்கள் மத்தியிலிருந்து தான் மாற்ற முடியும். எதிர்வரும் சமூகத்தினர் வரும் நாட்களில் எல்லா சமூகத்தினரையும் ஒரே மாதிரியாக அணுக வேண்டும். அதற்கு நமது மனநிலையில் முதலில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஆண், பெண் உறவு மாதிரி லெஸ்பியன், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளையும் மதிக்க வேண்டும். இந்த உலகத்தில் அவர்களும் வாழ்வதற்காக பிறந்த உயிர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

MOST READ: நாய் கடிச்சிடுச்சா?... உடனே இந்த 7 விஷயத்த மறந்திடாம செய்ங்க...

சபாஷ் சொல்லுங்க!

சபாஷ் சொல்லுங்க!

அவர்களுக்கு இங்கே எல்லாத் தகுதிகளும் உரிமையும் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். புலம்பெயர்ந்தவர்களுக்கு கூட நமது அரசாங்கம் ஆதார் அட்டை வழங்குகிறது. ஆனால் எல்.ஜி.பீ.டி.கியூ சமூகத்தினர் தான் நம் சமூகத்தில் ஒதுக்கப்படுகிறார்கள் விரட்டப்படுகிறார்கள். எனவே முதல் மாற்றம் நாமாக இருந்தால் அரசாங்கமும் சட்டமும் செவி சாய்க்கும் என்று இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் உரையாற்றினர்.

இளைஞர்களே! மனிதனை ஒதுக்கி மனித நேயத்தை குழியில் தள்ளும் செயலை இனி ஒரு போதும் செய்ய வேண்டாம். எல்லா உயிர்களும் வளமுடன் வாழ வழி வகை செய்வோம் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

For The First Time, Ahmedabad’s Karnavati University To Have A Chair Professor From LGBTQ Community.

Last year, the Supreme Court made passed a historic judgement by decriminalising section 377 of the IPC. This year, people belonging to the LGBTQ community has one more reason to celebrate.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more