For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்த்திகையில் தானம் செய்தால் தலைமுறைக்கும் நன்மை கிடைக்கும் #ஆடிக்கிருத்திகை

கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்தது கார்த்திகை வி

|

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். பிள்ளை வரம் தருவது சஷ்டி விரதம் மட்டுமல்ல முருகனுக்கு உகந்த கார்த்திகை விரதம் இருந்தாலும் அந்த ஆறுமுகனைப்போல அழகான பிள்ளை பிறக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை விரதம் இருப்பதோடு முருகனைக் காண பாதை யாத்திரையாக செல்லும் பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா என்று ஆடி பாடிக்கொண்டு காவடியை சுமந்து செல்கின்றனர். காவடி சுமக்கும் பக்தர்களுக்கு தனது அருளாசியை அள்ளி வழங்குகின்றான் முருகன். கார்த்திகை விரதம் ஏன் எப்படி எதற்காக என்றும் அந்த விரதம் இருந்து யாருக்கு என்ன நன்மை கிடைத்தது என்றும் முருக பக்தர்கள் காவடி சுமப்பது ஏன் என்றும் இந்த ஆடிக்கிருத்திகை நாளில் பார்க்கலாம்.

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை அருளுவார் முருகப்பெருமான். கிருத்திகை நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைவார்கள் என்பது நம்பிக்கை

aadikarthigai

உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது. இது உயர்வாகவும் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடி கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்த்திகை விரத சிறப்பு

கார்த்திகை விரத சிறப்பு

கார்த்திகை விரத மகிமை

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபத்தில் உதித்தவர் ஆறுமுகப்பெருமான். சரவணபொய்கையில் தாமரை மலரில் விடப்பட்ட ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்தனர். இந்த கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் விதமாக சிவபெருமான் கார்த்திக்கேயன் என்று அழைக்கப்படுகிறார். சிவன் அளித்த வரத்தின் படி இந்த கார்த்திகை நட்சத்திரம் வரும் நன்னாளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால்

அறிவு, செல்வம், நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை, நிறைவான சொந்தங்கள், குணமுள்ள குழந்தைகள் கிடைப்பார்கள் என்பது நம்பிக்கை.

அன்னதானம் சிறப்பு

அன்னதானம் சிறப்பு

தானம் செய்வதன் பலன்

கார்த்திகை நாளில் அதிகாலையில் குளித்து கந்த சஷ்டி கவசம் படித்து விரதத்தை தொடங்க வேண்டும். உப்பு சேர்க்காத உணவு சாப்பிடலாம் அல்லது வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருக்கலாம். மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் குளித்து விட்டு கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து சாப்பிடலாம். கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்தது கார்த்திகை விரதம்

நட்சத்திர விரதம்

நட்சத்திர விரதம்

வேண்டிய வரம் கிடைக்கும்

மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். தை மாதம் வரும் தை கிருத்திகை, ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

ஆறு கார்த்திகை விரதம்

ஆறு கார்த்திகை விரதம்

ஆறு மாதங்கள் விரதம்

ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது. தை மாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

பேரரசர் ஆனவர்கள்

பேரரசர் ஆனவர்கள்

கார்த்திகை விரத பலன்கள்

இவ்விரத முறையினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையின் பெரும் வெற்றிகளைப் பெறலாம்.

கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி நாரதர் தேவரிஷி என்ற பட்டத்தை பெற்றாராம். திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள்.

காவடி சுமப்பது ஏன்

காவடி சுமப்பது ஏன்

கார்த்திகையும் காவடியும்

கார்த்திகை பெண்களுக்கு சிறப்பு சேர்ப்பது போல இடுப்பன் என்ற அசுரனுக்கு பெருமை சேர்ப்பது போல பக்தர்கள் காவடி சுமந்து வந்து வழிபடுகின்றனர். பால், பன்னீர், புஷ்பங்கள், தீர்த்தக்காவடி என காவடிகள் பலவகை உண்டு. இந்த காவடியை சுமந்து கொண்டு பாதையாத்திரையாக நடந்து சென்று முருகனை வழிபட்டால் அவரது அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதற்கும் ஒரு புராண கதை உள்ளது. ஒரு சமயம் அகஸ்திய முனிவர் சிவகிரி, சக்தி கிரி என்ற இரு மலைகளைத் தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல ஆசைப்பட்டு அதற்காக இடும்பன் என்ற அசுரனை நியமித்தார்.

மலைகளை காவடியாக சுமந்த இடும்பன்

மலைகளை காவடியாக சுமந்த இடும்பன்

இடும்பனுக்கும் முருகனுக்கும் சண்டை

இரண்டு மலைகளையும் இரு பக்கமும் ஒரு தராசு போல் கட்டிக்கொண்டு தன் தோளில் சுமந்து ஸ்ரீ முருகனையே நினத்துக்கொண்டு பழனி வந்தான்.

சற்று இளைப்பாறலாம் என்று தன் சுமையை இறக்கி வைத்தான். பின் கொஞ்ச நேரம் கழித்து அதைத் தூக்க முயன்றான், முடியவில்லை.

சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால் அந்த சிறுவன் இந்த மலை தனக்கே சொந்தம் என்றும் தான் இறங்க மாட்டேன் என்றும் கூறினான்.

இடும்பனுக்கு வாக்கு

இடும்பனுக்கு வாக்கு

முருகனின் அருள் கிடைக்கும்

வந்தது கந்தன் என்று தெரியாமல் இடும்பன் கோபம் கொண்டான். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் இடும்பனை அழித்தார் முருகன். இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பனின் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அதோடு காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு தனது அருள் நிச்சயம் கிடைக்கும் என்று இடும்பனிடம் கூறினார்.

காவடி சுமக்கும் பக்தர்கள்

காவடி சுமக்கும் பக்தர்கள்

துன்பம் தீர்க்கும் வேண்டுதல்

முருகனின் அருள் கிடைக்கவேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளை சுமந்து கொண்டு அறுபடை வீடுகளுக்கும் பாதையாத்திரையாக வருகின்றனர். காவடி சுமப்பது தமிழ் நாட்டில் மட்டுமல்ல தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ் கடவுள் முருகனுக்கு கோவில் எழுப்பி காவடிகளை சுமந்தும் அலகு குத்தியும் வழிபடுகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியாவிலும் முருக பக்தர்கள் அதிகம் இருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: முருகன்
English summary

Karthigai viratham benefits #aadikarthigai

This article is about Benefits of Fasting for Lord Murugan in Karthigai natchathram.Observing fasting on this day is said to confer the blessings of progeny in families. Dedicated to worshipping Lord Subramanya, Karthigai vrat is one of the most fervently observed vrats in Hinduism especially in South India by married ladies who seek children.
Story first published: Friday, July 26, 2019, 14:57 [IST]
Desktop Bottom Promotion