Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்!
2020 ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பலருக்கும் அறிந்து கொள்ள ஆர்வமாகவே இருக்கும். வாழ்க்கையில் ஏதாவது புதிய மாற்றத்தை தருமா?
2020 ஆங்கில புத்தாண்டு ரிஷபம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழையை பொழியச் செய்யப் போகிறது. வரப்போகும் நல்ல வாய்ப்பை இறுக பற்றிக்கொள்ளுங்கள். புத்தாண்டு உங்கள் ஆண்டாக அமையப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் அதி அற்புதமாக உள்ளது. வேலை வாய்ப்பு, வருமானம், குடும்பத்தில் சந்தோஷம் கணவன் மனைவி இடையே நெருக்கம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
புது வருடத்தில் புதிதாக ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமா என்ற ஆர்வம் இயற்கையாகவே எழும். போன ஆண்டுதான் சுமாரான ஆண்டாக போய் விட்டது இந்த ஆண்டாவது நமக்கு நல்ல ஆண்டாக அமையுமா என்று நினைக்கத் தோன்றும். 2020ஆம் புத்தாண்டு உங்களுக்கு அற்புதமான வளங்களை வாரி வழங்கப்போகிறது. ரிஷபம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரங்களினால் அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் போகிறது.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே. 2020ஆம் ஆண்டு உங்களுக்கு திடீர் உற்சாகத்தை தரும் ஆண்டாக அமைந்துள்ளது. முன்னேற்றத்தை தரும் மாற்றங்களை தரப்போகிறது. குரு, சனி உங்களுக்கு நன்மைகளை தரப்போகிறது. விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார் குரு பகவான். 2020 ஜனவரி மாதம் அஷ்டமத்து சனி முடிந்து பாக்ய சனி தொடங்குகிறது. சிலருக்கு காதல் மலரும். காதலில் அடி ஆழம் வரை சில ருசிப்பீர்கள். உங்க நிதி நிலைமை அதிக அற்புதமாக அமையப் போகிறது. உங்களுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப் போகிறது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2020ஆம் புத்தாண்டு புகழின் உச்சிக்கு கொண்டு செல்லப்போகிறது. உங்களின் எண்ணங்கள் செயல்பாட்டிற்கு வரப்போகிறது. உங்களின் வலிமையை உணர்வீர்கள். வெற்றிகள் தேடி வரும். நீங்க அதிர்ஷ்டசாலிதான். காரணம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு பல நன்மைகளை செய்யப் போகிறது. கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் அற்புதமாக இருக்கப் போகிறது. அமைதியும் ஆனந்தமும் பிறக்கப் போகிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் ராசி அதிபதி. 2020ஆம் ஆண்டில் உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கப் போகிறது. தொழிலில் புதிதாக நீங்க செய்யும் முதலீடுகள் உங்களுக்கு இரட்டிப்பு லாபத்தை தரும். புதிய முடிவுகளை சந்தோஷமாக எடுங்கள். அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு நன்மைகளையும் பரிசுகளையும் தேடி தரப்போகிறது. மண வாழ்க்கை மகிழ்ச்சியை தரும். புதிய வேலை வாய்ப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை தரப்போகிறது. மொத்தத்தில் 2020ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையும்.

தனுசு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. சில ஆண்டுகளாகவே நீங்க தடுமாற்றங்களை சந்தித்து வருகிறீர்கள். பல சோதனைகளை சந்தித்த நீங்கள் 2020ஆம் ஆண்டில் நல்லது நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறீர்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு அற்புதங்களை தரப்போகிறது. உங்க இலக்குகளை அடையும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் குடும்பத்திலும் தொழிலிலும் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. நல்ல வாய்ப்புகள் வரிசையாக கதவை தட்டப்போகிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலைக்காக செல்லும் பயணம் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்பும் கிடைக்கும்.

மகரம்
ஏழரை சனியால் அவதிப்பட்டு வரும் மகரம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. இதுநாள் வரை நட்டு வைத்த அதிர்ஷ்ட மரம் பலன் கொடுக்கத் தொடங்கப்போகிறது. உங்க ராசிநாதன் சனி உங்க ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். குரு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். நல்ல வாய்ப்புகள் தேடி வரும் விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள் 2020ஆம் ஆண்டில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் நல்லதே நடக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடி சந்தோஷப்படுவீர்கள்.



Click it and Unblock the Notifications











