திட்டம் போட்டு சொல்லி அடிப்பதில் இந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் கில்லியாம் தெரியுமா?

முயற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அதற்கான சரியான திட்டமும் தீட்டுபவர்களே வாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள்.

எந்த வேலையா இருந்தாலும் அது வெற்றிகரமா முடிய முயற்சி எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு அதற்கான திட்டமிடுதலும் அவசியம். வடிவேலு சொல்லுவாரே " எதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும்னு " அது விளையாட்டு இல்ல வாழ்க்கையோட வெற்றிக்கான முக்கியமான மந்திரம் ஆகும். திட்டமிடல் இன்றி நீங்கள் செய்யும் அதனை முயற்சியும் " விழலுக்கு இழைத்த நீர்தான் ".

Zodiac Signs Who Are Good At Making Plans

முயற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அதற்கான சரியான திட்டமும் தீட்டுபவர்களே வாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள். இந்த திறமை அனைவருக்கும் வந்துவிடாது, அதேபோல சிலருக்கு இந்த திறமை பிறவியிலேயே இருக்கும். அதற்கு அவர்கள் பிறந்த ராசிகூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் திட்டமிடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் கில்லாடிகளாக இருப்பார்கள். எங்கு வேலை செய்தாலும், என்ன வேலை செய்தாலும் அவர்கள் தலைமை பொறுப்பில் இருப்பார்கள். இவர்களின் திறமைக்காகவே இவரை சுற்றியிருப்பவர்கள் எப்பொழுதும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவார்கள். எனவே திட்டமிடுதல் என்று வரும்போது தன்னிச்சையாக அந்த பொறுப்பு இவர்களிடம்தான் வரும். திட்டமிடுவதும் அது சரியாக வேலை செய்வதும் இவர்கள் மிகவும் நேசிக்கும் விஷயங்களாகும். இவர்களின் திட்டங்களுக்கான பாராட்டுகள் இவர்களை தேடிவரும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு திட்டமிடுவது என்பது மிகவும் பிடிக்கும், ஏனெனில் அவர்கள் வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இவர்களுக்கு அதிகம் இருக்கும். தனது இலாபத்திற்காக இவர்கள் திட்டமிடும் போது அது சொதப்புவதற்கு எந்த விதத்திலும் வாய்ப்பில்லை, ஏனெனில் அவர்கள் அனைத்து கோணங்களிலும் சிந்தித்து அதன் பிறகே திட்டமிடுவார்கள். எதிர்காலத்திற்கான சிறப்பு திட்டங்களை தீட்டுவது மந்திரம் போல தோன்றலாம் ஆனால் அது இவர்களுக்கு மிகவும் பிடித்ததாகும், ஏனெனில் சவால்களை எதிர்கொள்வது இவர்கள் மிகவும் ஒன்றாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

இவர்கள் பெரிய திட்டங்கள், முக்கியமான நிகழ்ச்சிக்கான திட்டங்கள் போன்றவற்றை தீட்டி அதனை வழிநடத்துவதில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். திட்டமிடுவதற்கான அவசியம் நேரடியாக அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும், இது தவறான காரியம் ஒன்றுமல்ல. தங்களின் சூழ்நிலையை தங்கள் திட்டமிடுதலின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள். உங்கள் காரியங்களை இவர்களிடம் ஒப்படைத்து விட்டால் நீங்கள் அவர்களை முழுமையாக நம்பலாம்.

கடகம்

கடகம்

கடக ராசிக்கார்கள் அனைத்து விதமான நிகழ்ச்சிகள், பார்ட்டிகளையும் திட்டமிடுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். எந்தவொரு நிகழ்ச்சிகள் நடந்தாலும் இவர்கள் அங்கு அதன் மையப்புள்ளிகளாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் செயல்திறன் கொண்ட ராசிகள் அதேசமயம் இவர்களின் திட்டமிடுதல் காரணமாக அனைவரின் நம்பிக்கையையும் பெற்றிருப்பார்கள். திட்டமிடும் போது இவர்களை விட மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் யாருமில்லை.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தான் மற்றவர்களை விட திட்டம் தீட்டுதல் வல்லவர் என்னும் நம்பிக்கை வரும்வரை அவர்களின் திட்டங்களை அவர்களே நம்பமாட்டார்கள். அவர்கள் அந்த முடிவுக்கு ஒருமுறை வந்துவிட்டால் அவர்களின் திட்டத்தின் வேகம் இருமடங்கு அதிகரிக்கும். இவர்கள் தனக்கு ஒன்று வேண்டுமென்றால் அதனை தான்தான் செய்ய வேண்டும் என்ற பழங்கால கருத்தை நம்புபவர்கள். எனவே எப்பொழுதும் தங்களுக்கான திட்டங்களை தாங்கள்தான் சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

கும்பம்

கும்பம்

இவர்களின் எண்ணம் எப்பொழதும் திட்டங்களை பற்றியகாகத்தான் இருக்கும். இவர்கள் எப்பொழுதும் சாகசத்தை விரும்புபவராக இருப்பார்கள், எனவே அதற்கான திட்டங்களையும் சவாலான செயல்களை செய்வதிலும் இவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் கும்ப ராசிக்காரருடன் சுற்றுலா செல்ல நேர்ந்தால் கவலையே படாதீர்கள் சுற்றுலாவிற்கு தேவையான அனைத்தையும் அவர்களே செய்து விடுவார்கள். இவர்கள் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுவதாக இருப்பதுடன் ரசனைமிக்கதாகவும் இருக்கும். இவர்களை நம்பி எந்த பொறுப்பை வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, April 9, 2019, 13:40 [IST]
Desktop Bottom Promotion