Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சிவராத்திரியில் எந்த பொருள்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் அதிக புண்ணியம் கிடைக்கும்?
சிவ ராத்திரியன்று சொல்ல வேண்டிய மந்திரங்களும் வழிபடும் முறைகளும் பற்றி இந்த பகுதியில் மிக விளக்கமாகப் பார்க்கலாம். அதுபற்றிய விரிவானதொரு தொகுப்பு தான் இது.
சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசைக்கு முந்தைய நாளில் வரும். வருடத்துக்கு 12 சிவராத்திரி வரும். அதில் குறிப்பாக மாசி மாதத்தில் வருகின்ற சிவராத்திரியைத் தான் மஹா சிவராத்திரி என்கிறோம். அது அதிக இருள் கொண்டதாக இருக்கும்.

சிவபெருமான்
சிவபெருமான் இருளின் அடையாளம் சூன்யத்தின் குறியீடு என்பதால் தான் சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கு விரதம் இருப்பதற்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அதிலும் வெறுமையில் இருந்து தான் எல்லா பொருள்களும் உருவாகவும் அடங்கவும் செய்கின்ற என்பதால் தான் இந்த வழிபாடு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

மாசி மாதம்
மாசி மாதத்தில் வருகின்ற கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் தான் மஹா சிவராத்திரி வரும். இது அமாவாசைக்கு முதல் நாளாகவே இருக்கும். இந்த குறிப்பிட்ட நாளில் விரதங்கள் இருந்து சிவன் கோவிலுக்குப் போய் சில சிவ ந்திரங்களைச் சொல்லி வழிபட்டாலும், இரவு முழுக்க கண் விழித்திருந்தாலும் வாழ்வில் பெரும் புண்ணியமும் உங்களுக்கு முக்தியும் கிடைக்கும் என்று சொல்வார்கள்.

சிவாலயம்
அப்படி இரவில் சிவன் கோவிலில் தங்க முடியாதவர்கள் வீட்டிலேயே சுத்தமாக இருந்து விரதத்தை அனுஷ்டிக்கலாம். ஆனால் அந்த நாளில் பகலிலாவது ஒருமுறையாவது சிவன் கோயிலுக்குச் சென்று பூஜைகளும் வழிபாடும் செய்வது கட்டாயம்.

எது சரியான முறை
என்ன தான் வீட்டிலிருந்து விரதமிருந்து வழிபட்டாலும் கூட, பகல் முழுவதும் வீட்டில் முறையான விரதமிருந்து, அடுத்து இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்திருந்து ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்று நான்கு யாம பூஜைகளிலும் கலந்து கொண்டு சிவாலயத்திலேயே இருந்து வழிபாடு நடத்துவது தான் சிறந்த முறை. அப்போது தான் சிவனின் அதிர்வுகளை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

வில்வ அர்ச்சனை
சிவபெருமானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்வது தான் நாம் அதிகமாகச் செய்கிறோம். குறிப்பாக சிவபெருமானுக்குப் பிடித்த மலர் என்றால் அது கொன்றை மலர் தான். அந்த கொன்றை மலரையும் அதேபோல் வில்வம் சிவனுக்கு உகந்த இலை. அதனால் கொன்றை மற்றும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்துவிட வேண்டும்.

மந்திரங்கள்
இரவு முழுக்க விழித்திருக்கின்ற வேளையில் சிவ புராணங்கள் பாராயணங்கள் செய்ய வேண்டும், சிவ மந்திரங்கள், நமச்சிவாய மந்திரம் என இரவு முழுக்க சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது அந்த இரவு முழுவதும் சிவனின் நினைவுகளிலேயே கழித்திருக்க வேண்டும்.

சிவராத்திரி வகைகள்
மாதா மாதம் வருகின்ற சிவராத்திரியை மொத்தமாக ஐநு்து வகைகளாகப் பிரிப்பார்கள். அவை, நித்திய சிவாராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி ஆகியனவாகும்.

மஹா சிவராத்திரி
மாசி மாதத்தில் கிருஷ்ண சதுர்த்தியில் நள்ளிரவு நேரத்தில் லிங்கத்திலிருந்து தோன்றினார். அந்த நாளைத் தான் நாம் மஹா சிவராத்திரி என்று சொல்கிறோம். இந்த நாளில் சிவனுக்குப் பூஜை செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.

என்ன அபிஷேகம் செய்யலாம்?
சிவபெருமானுக்கு பொதுவாகவே அபிஷேங்கள் என்றால் கொள்ளைப் பிரியம் என்பதால், தொடர்ந்து நான்கு யாம பூஜைகளிலும் கூட, நல்லெண்ணெய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் கரும்புச்சாறு போன்ற இனிமை பொருந்திய பொருட்களை வைத்து அபிஷேகங்கள் செய்யலாம்.

நான்கு யாம பூஜைகள்
மஹா சிவராத்தியன்று நான்கு யாம பூஜைகள் மற்றும் செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
முதல் யாம பூஜையில் பால், நெய்ஈ தயிர், பசு கோமயம் ஆகியவற்றைக் கலந்த பஞ்ச கௌவியம் கொண்டு அபிஷேகம் செய்யலாம். அதேபோல், வில்வ இலைகள் மற்றும் தாமரை ஆகியவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தல் வேண்டும். அதற்கு நைவேத்தியமாக பயத்தம் பருப்பும் யசூர் வேதமும் ஓத வேண்டும்.
இரண்டாம் யாமத்தில் சந்தனம் மற்றும் தாமரை மலர்களைச் சூடி பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பாயசம் நைவேத்தியமாகப் படைக்கலாம். இப்போதும் யசூர் வேதம் ஓதுவார்கள்.
மூன்றாம் யாமத்தின் போது தேன் அபிஷேகம் சிறந்தது. அதோடு கற்பூர முல்லை, ஜாதி முல்லை ஆகியவற்றை போடலாம். இப்போது எள் சாதம் கொண்டு நைவேத்தியம் செய்யலாம். இந்த சமயத்தில் சாம வேதம் ஓத வேண்டும்.
நான்காம் யாம பூஜையில் கரும்புச்சாறால் கழுவி அர்ச்சனை செய்து குங்குமப்பூ மற்றும் நந்தியாவட்டை பூக்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம். இப்போது அதர்வண வேதம் ஓதி, வெண் சாதம் நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.



Click it and Unblock the Notifications
