For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அம்மா நீ அழகா இல்லனு சொன்னதுக்காக இந்த பொண்ணு என்ன காரியம் பண்ணியிருக்கா தெரியுமா?

|

பதின்பருவத்தில் எடுத்த உங்கள் புகைப்படங்களை இப்போது பார்த்தால் எப்படியிருக்கும்? "நான் இப்படியா இருந்தேன்!" என்று வியந்து போவீர்கள்தானே! வயது கூடும்போது, தோற்றத்தில் கவனம் செலுத்தி, பொலிவான தோற்றத்தை அடைந்திருப்பீர்கள். ஆகவே, இளவயதில் அப்பாவியாய் தோன்றும் புகைப்படங்களை பார்க்கவே வேடிக்கையாகதான் இருக்கும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள்.

எந்த அம்மாவும் தன் பிள்ளையின் தோற்றம் அழகாயில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால், ஜப்பானில் ஒரு பெண்ணின் தாய், வித்தியாசமானவளாய் இருந்தாள். "நீ அழகாவே இல்ல..." என்று தன் பெண்ணைப் பார்த்து அந்த அன்னை கூறினாள். அதை கேட்ட மகள் என்ன செய்தார் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாடல் அழகி

மாடல் அழகி

ஜப்பானின் ஹொக்கெய்டோ என்ற நகரத்தில் கிளப் ஒன்றில் வேலைபார்த்தவர் ஸூபாகி. அவருக்குத் தற்போது 39 வயதாகிறது. அவர் மாடல் அழகியும்கூட. ஸூபாகி, சிறுமியாக இருந்தபோதே அவரது தாய், "என் மகள் இப்படி இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை," என்று கூறியுள்ளார். சிறுமி ஸூபாகியின் உள்ளத்தில் அச்சொற்கள் ஆழமாக தைத்துள்ளன. ஹொக்கெய்டோவில் ஹோஸ்டஸாக பிரபலமானார் ஸூபாகி. அதில் வந்த வருமானத்தை சேமித்து வைத்தார்.

MOST READ:வண்டி ஓட்டும்போது மூக்க சொறிஞ்சதுக்காக அபராதமா?... டேய் இதுக்குலாமா அபராதம் போடுவீங்க...

அறுவை சிகிச்சை மூலம் அழகு

அறுவை சிகிச்சை மூலம் அழகு

தாயே தன்னை அழகில்லை என்று கூறி விட்டமையால், ஒரு வைராக்கியத்துடன் தோற்றப் பொலிவுக்கான அறுவை சிகிச்சைகளை செய்ய ஆரம்பித்தார். தன் சேமிப்பிலிருந்து முதல் சிகிச்சைக்கான பணத்தை செலவிட்டார். தாடை, வாய் மற்றும் மூக்கு என்று உடலின் பல பாகங்களில் அழகுக்காக பிளாஸ்டிக் மற்றும் சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் ஸூபாகிக்கு செய்யப்பட்டன. கடந்த 21 ஆண்டுகளில் பல்வேறு சீரமைப்பு அறுவை சிகிச்சைகளுக்கு 2,80,000 டாலர் (ஏறக்குறைய 1 கோடியே 92 லட்சம் ரூபாய்) செலவிட்டுள்ளார்.

MOST READ:வந்த தும்மலை வேண்டுமென்று அடக்கியதால் தொண்டை வெடித்தது... எதுக்கு இந்த வேலை?

தொலைக்காட்சி பேட்டி

தொலைக்காட்சி பேட்டி

ஜப்பானின் தேசிய தொலைக்காட்சியில் தன் அனுபவங்களை ஸூபாகி பகிர்ந்து கொண்டுள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி என்பது ஜப்பானின் மரபு படி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் அறுவை சிகிச்சை செய்த பிறகு தன்னைப் பார்த்து பலர் முகஞ்சுளித்ததாக ஸூபாகி கூறியுள்ளார். தன் தோற்றத்தை அழகானதாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் மற்றவர்கள் கூறியதை ஸூபாகி காதில் போட்டுக்கொள்ளவில்லை.

கடைசியாக அவர் 1,500 டாலர் (ஏறக்குறைய 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்) செலவில் இன்டிமா லேசர் என்ற சிகிச்சை செய்துள்ளார். இத்தனை அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் மாடலாக தொடர்வதை தாம் விரும்புவதாக ஸூபாகி தெரிவித்துள்ளார்.

MOST READ:மேக்கப் போடுவது பற்றிய பொய்யான கட்டக்கதைகள் என்னென்ன... ஆண் - பெண் இருவருக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman Spents $280,000 on Surgeries After Being Called ‘dusky’ by Her Mum

what happens when you learn that your own mum hates your look while you are still young? It surely does impact your life to such an extent that you will either get depressed or do something that will change your life forever!