For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராமரின் வலிமையை பற்றி தெரிந்துகொள்ள சுக்ரீவன் வைத்த வித்தியாசமான சோதனைகள் என்ன தெரியுமா?

சுக்ரீவனுக்கு வாலியின் திறமைகள் பற்றி நன்கு தெரியும், எனவே இராமனால் சுக்ரீவனை வதைக்க முடியுமா என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.

|

மாபெரும் இதிகாசமான இராமாயணம் பற்றி நாம் நன்கு அறிவோம். மகாவிஷ்ணு இராவணனை அழிக்க இராமனாய் அவதாரமெடுத்து புரிந்த மாபெரும் யுத்தமே இராமாயணம் என்று கூறப்படுகிறது. இராமர் தன் மனைவி சீதையை மீட்க அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்தவர்கள் வானர வேந்தன் சுக்ரீவனும், ஆஞ்சநேயரும்தான்.

Why Sugriva tested Lord Ramas power?

சுக்ரீவனும், இராமரும் சந்தித்ததே தனி சுவாரிஸ்யம், அதற்கு பின் சுக்ரீவன் தன் சகோதரன் வாலியை இராமனின் உதவியுடன் கொன்று அரியணையை கைப்பற்றினார். வாலியை இராமன் பின்புறமிருந்து தாக்கினார் என்று நாம் அறிவோம் ஆனால் அதற்கு முன் சுக்ரீவன் இராமனுக்கு வைத்த சோதனைகளை பற்றி பலருக்கும் தெரியாது. இந்த பதிவில் சுக்ரீவன் ஏன் இராமருக்கு சோதனைகள் வைத்தான் அதனை இராமர் எப்படி வெற்றிகரமாக முடித்தார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராமனுக்கு அறிவுரை

இராமனுக்கு அறிவுரை

இராவணனால் கடத்தப்பட்ட தன் மனைவி சீதையை தேடிக்கொண்டு இராமர் தனது சகோதரன் இலட்சுமணனுடன் காட்டில் தேடி சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் வழியில் ராட்சசன் கபந்தனை சந்தித்து அவனை கொன்று அவனின் சாபத்தில் இருந்து அவனை விடுவித்தார். சாபத்தில் இருந்து விமோட்சனம் பெற்ற கபந்தன் சுக்ரீவனிடம் சென்று உதவி கேட்குமாறு இராமனிடம் கூறினான்.

அனுமன் மற்றும் சுக்ரீவனுடன் சந்திப்பு

அனுமன் மற்றும் சுக்ரீவனுடன் சந்திப்பு

பயணத்தை தொடர்ந்த இராமரும், இலட்சுமணனும் வழியில் ஆஞ்சநேயரை சந்தித்து அவரின் திறமைகளால் ஈர்க்கப்பட்டனர். இது சுக்ரீவன் மீதான இராமரின் நம்பிக்கையை அதிகரித்தது. சுக்ரீவன் எப்படி தான் தன்னுடைய சகோதரன் வாலிக்கு எதிரியாக மாறிய கதையை இராமனுக்கு கூறினார். சுக்ரீவனை பொறுத்தவரையில் அவன் மிகவும் நல்லவன் என்று கூறினான் இராமர் அவனை நம்பினார்.

சுக்கிரீவனின் சந்தேகம்

சுக்கிரீவனின் சந்தேகம்

சுக்ரீவனுக்கு வாலியின் திறமைகள் பற்றி நன்கு தெரியும், எனவே இராமனால் சுக்ரீவனை வதைக்க முடியுமா என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது. வாலியின் வீரத்தை பற்றி பல கதைகளை சுக்ரீவன் இராமனுக்கு கூறினான். ஒரு சால் மரத்தை காட்டி அதில் இருந்த துளையை வாலி ஒரே கணையால் ஏற்படுத்தினான் என்று கூறினான். இராமர் தன் திறமையை நிரூபிக்க ஒரே கணையால் 7 சால் மரங்களை துளையிட்டார், ஏழு மரங்களை கடந்து சென்ற கணை ஒரு பாறை மீது மோதி அதனை தூளாக நொறுக்கியது. இராமரின் வீரத்தை பார்த்த சுக்ரீவன் மிகுந்த மகிழ்ச்சியுற்றான்.

MOST READ: வீட்டில் இந்த பொருட்கள் உங்கள் வீட்டிற்கு தீயசக்திகளை அழைத்து வருவதோடு உங்கள் ஆயுளையும் குறைக்கும்..

மீண்டும் சோதனை

மீண்டும் சோதனை

சுக்ரீவன் இராமனை ராட்சசன் துண்டுபியின் உருவம் எருமை வடிவில் செதுக்கப்பட்ட பாறைக்கு இராமனை அழைத்து சென்றான். அந்த பாறை கிட்டதட்ட மலை அளவிற்கு இருந்தது. இராமன் அதனை தூக்கிவிட்டால் இராமனால் வாலியை வென்றுவிட முடியும் என்று நம்புவதாக சுக்ரீவன் கூறினான்.

இராமரின் புன்னகை

இராமரின் புன்னகை

உலகையே காக்கும் இராமருக்கு ஒரு சாதாரண மலையை தூக்குவது பெரிய காரியமா என்ன அவர் புன்னகையை மட்டுமே தன் பதிலாக தந்தார். தனது காலால் ஒரு உதையிலேயே அந்த மாபெரும் சிலையை உதைத்து வானுயர பறக்கும்படி செய்தார். இராமரின் பலத்தையும், ஆற்றலையும் பார்த்த சுக்ரீவன் வாலியை இராமரால் வெற்றிபெற முடியும் என்று நம்பினார்.

வாலியுடனான சவால்

வாலியுடனான சவால்

இராமர் சுக்ரீவனிடம் வாலியை போருக்கு அழைத்து கிஷ்கிந்தாவை விட்டு வெளியே அழைத்து வரும்படி கூறினார். அதற்கு காரணம் 14 ஆண்டுகள் தான் எந்த நகரத்திற்குள்ளும் நுழைய முடியாது என்று கூறினார். மேலும் தான் யாருடன் நட்புறவு வைத்துக்கொள்ள விரும்புகிறறோமோ அவர்களின் படைகளை அழிக்க அவர் விரும்பவில்லை.

MOST READ: கர்ணனோட கவசத்தை ஏமாத்தி வாங்குனது அர்ஜுனனை காப்பாத்த இல்ல.. அதுக்கு பின்னாடி வேற தேவரகசியம் இருக்கு.

ராட்சஷ வதம்

ராட்சஷ வதம்

அதைத்தவிர இராமருக்கு வாலியை கொல்ல வேறு வலி தெரியவில்லை. ஏனெனில் சில நாட்களுக்கு முன்னர்தான் இராமர் கர் மற்றும் துஷன் என்னும் ராட்சஷர்களையும் அவர்களின் படையில் இருந்த 14,000 ராட்சஷர்களையும் வதம் செய்திருந்தார். அதன்பின் வாலியை இராமர் எப்படி வதம் செய்தார் என்று நாம் நன்கு அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Sugriva tested Lord Rama's power?

Sugriva is very scared of Vali and he is full of doubts that Rama could kill him. So he kept two tests for Rama.
Desktop Bottom Promotion