For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஹாசிவராத்திரி அன்று ஏன் இரவு தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்ற அற்புதம் பற்றி தெரியுமா?

மஹாசிவராத்திரி அன்று நாம் ஏன் கண் விழித்திருக்க வேண்டும் என்பது பற்றி மிக விரிவாக இந்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பயன்பெறுங்கள். அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

By Mahibala
|

மஹாசிவராத்திரி நாளில் தான் உங்களால் சிவபெருமானின் அற்புதங்களை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும் என்பார்கள். அதாவது இந்த மஹா சிவராத்திரி என்பது உங்களுக்கு நீங்கள் கேட்ட வரத்தைக் கொடுக்கின்ற ராத்திரியாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கையை ஆழ்ந்து அனுபவித்து வாழ்வதற்கான வரமும் மனப் பக்குவமும் அன்று இரவு உங்களுக்கு சிவன் வழங்குவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தன்னை உணர்தல்

தன்னை உணர்தல்

நாம் யார், என்ன செய்து கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்வு தற்போது எத்தகையதாக இருக்கிறது, எப்படி எதிர்காலத்தில் மாற வேண்டும் என்கிற சிந்தனைக்ள அத்தனையும் நம் மனதுக்குள் எப்போதும் ஓடிக் கொண்டுதான் இருக்கும். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் நம்முடைய உடல் மற்றும் ஆன்ம பலத்துக்குத் தான் முழு பங்கும் உண்டு.

MOST READ: விருச்சிக ராசிக்காரங்ககிட்ட கட்டாயம் இந்த பத்து கொடூரமான குணமும் இருக்குமாம்... ஜாக்கிரதை

வழிபடுதல்

வழிபடுதல்

பொதுவாக மஹாசிவராத்திரி அன்று மாலையில் கோவிலுக்குச் சென்று பூஜைகள் செய்துவிட்டு, அதன்பின் இரவு முழுக்க தூங்காமல் விழித்திருநது சிவனை நினைத்துக் கொண்டே சிவ மந்திரங்களையும் சிவபுராணத்தையும் உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். இரவு முழுக்க சிவனுக்குப் பூஜைகள் நடந்து கொண்டிருக்கும். கண்விழித்து சிவனை வழிபட்டால் நாம் நிளைத்தது நடக்கும் என்று சொல்வார்கள். அப்படி இரவு முழுக்க கண் விழித்து வழிபடுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

ஏன் விழிக்க வேண்டும்?

ஏன் விழிக்க வேண்டும்?

நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்ததை சாதிக்க நம்முடைய உடலில் சக்தியும் ஆன்ம பலமும் மன உறுதியும் தான் மிக அவசியம். அதை உந்துவிப்பதே இறைவனின் அருள் என்று ஆன்மீகப் பெரியோர்கள் குறிப்பிடுவார்கள். அப்படி சிவனின் உந்துதலை பெறுவதற்கான சரியான நாள் தான் இந்த சிவராத்திரி.

மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து அமர்ந்து நம்முடைய முதுகுத்தண்டுப் பகுதியை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி நேராக வைத்திருப்பதால் நம்முடைய உடல் மற்றும் மனதின் சக்தி நிலைகளானது உயர ஆரம்பிக்கும். இந்த சக்திப் பெருக்கத்தின் வழியாக உங்களால் ஈனந்தமான வாழ்க்கையையும் முக்தியையும் அடைய முடியும். நம்முடைய உடலின் சக்தி ஆற்றலை பலமடங்கு பெருக்குவதற்காகத் தான் முதுகுத்தண்டை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து இரவு விழித்திருக்க வேண்டும் எ்னறு சொல்லப்பட்டது.

கோள்கள்

கோள்கள்

மஹாசிவராத்திரியின் பொழுது ஒன்பது கோள்களின் அமைப்பும் மாறுபடும். அந்த கோள்களின் அமைப்பானது நாம் நேராக முதுகுத்தண்டை வைத்து அமர்ந்திருக்கும் போது, குண்டலினி சக்தியை போல் நம்முடைய உயிர்சக்தியை மேலேப்புகிறது.

MOST READ: இதய அடைப்பைகூட சரிசெய்துவிடும் மாங்காய் டீ... இந்த சீசன்ல தினமும் இத குடிக்கலாமே

முக்திக்குரிய சக்தி

முக்திக்குரிய சக்தி

இல்லற வாழ்க்கையில் உள்ளவர்கள் அன்பமாக வாழ்வும் துறவறம் மேற்கொள்பவர்கள் நினைத்தபடி முக்தியடையவும் ஆறுற்லைக் கொடுப்பது இந்த ராத்திரி தான். இதனால் நம்முடைய பல யோகிகளும் முனிகளும் இந்த மஹாசிவராத்திரி நாளில் விரதம் இருந்து தாங்கள் நினைத்தது போல முக்தியடைந்திருக்கிறார்கள். அவ்வளவு அற்புதங்களைச் செய்யக் கூடிய ராத்திரி இது.

ஏன் இந்த பெயர்?

ஏன் இந்த பெயர்?

நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிவராத்திரி என்பது வருடத்தில் ஒருநாள் வரக்கூடியது என்று. அப்படியல்ல. ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள் சிவராத்திரி வரும். அது அமாவாசைக்கு முந்தைய நாளாக இருக்கும். அமாவாசை நாளை விடவும் இந்த சிவராத்திரி நாள் தான் இருள் அதிகம் கொண்டதாக இருக்கும். அப்படி வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில் மிகவும் சக்திவாய்ந்த இரவாக இருப்பது மாசி மாதத்தில் வருகின்ற சிவராத்திரி தான். அதனால் தான் அதை மஹாசிவராத்திரி என்று சொல்கிறோம்.

இருளின் விளக்கம்

இருளின் விளக்கம்

பொதுவாக சிவராத்திரி என்பது இருளைக் கொண்டாடிய நிகழ்வு தான். ஏன் நாம் இருளைக் கொண்டாட வேண்டுமென்றால் அதனுடைய உள் ஆழமான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் சூன்யமானது. இருள் தான் நிரந்தர உண்மை. இருளுக்குள் எதுவுமில்லை. வெறுமை என்று நினைக்கிறோம். அந்த இருளுக்குள் தான் இந்த உலக அடக்கமே என்பதை உணர வைப்பது இந்த இருள் நிறைந்த ராத்திரி. அப்படி எதில் எதுவுமில்லை என்று நினைக்கிறோமோ அதுதான் சிவன். அதனால் தான் இது சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

விஞ்ஞானம்

விஞ்ஞானம்

இதெல்லாம் வீண் பிதற்றல் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நவீன விஞ்ஞான முறைகள் கூட உலகத்தில் உள்ள எல்லா பொருள்களும் சூன்ய நிலையிலிலுந்து தான் தோன்றுகின்றன. மீண்டும் அதற்குள்ளே தான் சென்று அடக்கமாகின்றன என்று நிரூபணம் செய்திருக்கின்றன. அத்தகைய வெற்றுத் தன்மையான சூன்யத்தை தான் நாம் சிவனாகக் கொண்டாடுகிறோம். இதைப் புரிந்து கொண்டாலே நம்முடைய மனம் தெளிவடையும். பிறப்பின் நோக்கத்தை உணரும்.

MOST READ: நீங்க சாப்பிடற சாப்பாட்டுல 5 தோஷம் இருக்கு தெரியுமா? அது என்னென்ன? எப்படி சரிபண்ணலாம்

பூமி சுழற்சி

பூமி சுழற்சி

இதெல்லாம் சரி. இந்த சிரவராத்திரியன்று பூியின் சுழற்சி எப்படி இருக்கும் என்று தெரியுமா? பூமி சூரியனை மட்டுமல்லாது தன்னைத் தானேயும் சுற்றிக் கொள்ளும் பண்பு கொண்டது என்பது நமக்குத் தெரியும்.இந்த சுழற்சி மூலம் உண்டாவது தான் மையவிலக்கு விசை என்று என்று இயற்பியலாளர்கள் சொல்வார்கள்.

இந்த மையவிலக்கு விசையானது 1 முதல் 33 டிகிரி அட்சரேகை வரை இருக்கக்கூடியது. அதில் பதினோராவது டிகிரி தான் மிக செங்குத்தான் நிலை. இந்த செங்குத்தான நிலையானது மஹாசிவராத்திரியன்று ஏற்படும். நாமும் இந்த பதினோரு டிகிரியில் இயங்கும்போது கண்விழித்து வாழ்வது என்பது நம்முடைய ஆன்ம சக்தியை மேல்நோக்கி உயர்த்துவதற்கு உதவி செய்யும்.

இதுதாங்க இந்த மஹாசிவராத்திரி எல்லோரும் கண் முழிச்சுட்டு இருக்கறதுக்கான காரணம். இனியாவது தெரிஞ்சுகிட்டு அதன் பலத்தை உணர்ந்து சிவராத்திரை வழிபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why should we stay awake on mahashivratri

The fourteenth day of every lunar month or the day before the new moon is known as Shivratri. Among all the twelve Shivratris that occur in a calendar year, Mahashivratri, the one that occurs in February-March is of the most spiritual significance. On this night, the northern hemisphere of the planet is positioned in such a way that there is a natural upsurge of energy in a human being
Story first published: Monday, March 4, 2019, 11:21 [IST]
Desktop Bottom Promotion