For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமானின் தலையில் எப்பொழுதும் நிலா பிறை வடிவில் இருப்பதன் சுவாரசியமான காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக மற்ற கடவுள்களிடம் இருந்து சிவபெருமான் மிகவும் வித்தியாசமானவர். அதை நீங்கள் அவரின் உருவத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

|

இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள்களில் ஒருவர் சிவபெருமான். பொதுவாக சிவபெருமான் மிகவும் கோபப்படக்கூடிய கடவுள் என்று அனைவராலும் கூறப்படுவபவர். ஆனால் உண்மையில் அவர் கெட்டவர்களுக்கு மட்டும்தான் ருத்ர மூர்த்தி, தன் பக்தர்களுக்கு எப்போதுமே அவர் சாந்த மூர்த்திதான். தன்னை முழுமையாக நம்பும் பக்தர்களுக்கு சிவபெருமான் அவர்கள் வேண்டும் வரங்களை வழங்கக்கூடியவராவார்.

Why Lord Shiva has moon on his head

பொதுவாக மற்ற கடவுள்களிடம் இருந்து சிவபெருமான் மிகவும் வித்தியாசமானவர். அதை நீங்கள் அவரின் உருவத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம். மற்ற கடவுள்கள் ஆபரணங்களில் ஜொலிக்க சிவபெருமானோ வெறும் தோல் ஆடையை உடுத்திக்கொண்டு கையில் திரிசூலத்துடன் காட்சியளிக்கிறார். அவர் அணிந்துள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தமும், கதையும் உள்ளது. அந்த வகையில் அவர் தலையில் பிறை வடிவில் நிலா இருப்பதற்கும் காரணம் உள்ளது. அந்த காரணத்தையும், அதன்பின் இருக்கும் கதையையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்திரசேகராய நம ஓம்

சந்திரசேகராய நம ஓம்

சிவபெருமானுக்கு சந்திரசேகர் என்று ஒரு பெயர் உள்ளது. அதற்கு காரணமே அவர் தலையில் இருக்கும் பிறைதான். சந்திரன் என்றால் நிலா என்று பொருள் சேகர் என்பதற்கு உச்சம் என்பது பொருள். உச்சத்தில் நிலவை கொண்டவனே என்பதன் அர்ததம்தான் சந்திரசேகர் எனபதாகும். ஆனால் சிவபெருமான் ஏன் தலையில் நிலவை வைத்திருக்க வேண்டும்.

ஆலகாலன்

ஆலகாலன்

பாற்கடலை கடைந்த போது கிடைத்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்திய பிறகு அவர் உடலின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. நிலவானது குளிர்ச்சியை வழங்கக்கூடும் ஆதலால் சிவபெருமான் தன் உடலின் வெப்பநிலையை குறைத்து கொள்வதற்காக நிலவை தன் தலையில் வைத்துக்கொண்டதாக புராண குறிப்புகள் கூறுகிறது. இது உணர்த்துவது என்னவெனில் கஷ்டமான காலத்தில் கூட நம்மை அமைதிப்படுத்தி கொள்வதற்கான செயல்களை நாம் செய்ய வேண்டும்.

மற்றொரு கதை

மற்றொரு கதை

வேறு சில புராண குறிப்புகளின் படி பிரம்மாவின் மகனான தக்ச பிரஜாபதி 27 நட்சத்திரங்களை தன் மகள்களாக கொண்டிருந்தார். அவரின் அனைத்து மகள்களும் சந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டனர். 27 மனைவிகள் இருந்தாலும் ரோகிணி மீது மட்டும் அதீத ஈர்ப்பு கொண்டிருந்தார். எனவே இதனால் மற்ற மனைவிகள் அவரின் மீது அதிக பொறாமை கொண்டனர்.

மனைவிகளின் புகார்

மனைவிகளின் புகார்

ரோகிணி மீது கொண்ட பொறாமை காரணமாக மற்ற மனைவிகள் அனைவரும் அவர்களின் தந்தையிடம் சந்திரன் தங்களை சரியாக கவனிப்பதில்லை என்று புகார் செய்தனர். இதுதான் நிலா மற்றும் ரோகிணிக்கு சோதனையாக அமைந்தது.

MOST READ: இந்த 5 பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் வீட்டில் ஒருபோதும் வறுமை இருக்காது என்று கிருஷ்ணர் கூறுகிறார்...!

சாபம்

சாபம்

பிரஜாபதி தன் மகள்கள் அனைவரையும் சரிசமமாக நடத்தும் படி சந்திரனிடம் கூறினார். ஆனால் சந்திரன் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் கோபமுற்ற பிரஜாபதி தினமும் உனது பிரகாசத்தை இழப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். அதன் விளைவாக சந்திரன் தினம் தினம் தனது பிரகாசத்தை இழக்க தொடங்கினார்.

இயற்கை சமநிலைமையின்மை

இயற்கை சமநிலைமையின்மை

பிரஜாபதியின் சாபத்தால் சந்திரன் கடலுக்குள் தஞ்சம் புகுந்தார். நிலவு இல்லாததால் இயற்கையின் சமநிலை சீர்குலைந்தது, இயற்கையை சார்ந்திருந்த அனைத்து உயிரினங்களும் இதனால் பாதிப்படைந்தனர். எனவே தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுமப்டி வேண்டினர்.

சிவபெருமானின் கருணை

சிவபெருமானின் கருணை

தன்னிடம் இருந்த பாதி ஒளியை வைத்துக்கொண்டு நிலா சிவபெருமானின் தலையில் தஞ்சமடைந்தார். சிவபெருமான் பாதி ஒளி பொருந்திய நிலவை தலையில் அணிந்துகொண்ட பிறகு தன் சக்தி மூலம் அடுத்த 15 நாட்களுக்கு நிலவின் ஒளியை அதிகரிப்பதில் வெற்றிகண்டார். அடுத்த 15 நாட்களில் நிலா மீண்டும் தேயத்தொடங்கியது.

நேரத்தை கடந்தவர்

நேரத்தை கடந்தவர்

சிவபெருமான் மஹாகால் என்று அழைக்கப்படுகிறார். அதற்கு அர்த்தம் காலங்களை கடந்தவர் என்பதாகும். நிலா தேய்வதும், வளர்வதும் சிவபெருமானாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது, அதற்கு காரணம் சிவபெருமான்தான் நேரத்தை கட்டுப்படுத்துபவர் ஆவார். பலமுறை மக்களை காப்பாற்றிய சிவபெருமான் உயிரினங்களை காப்பாற்ற மேற்கொண்டும் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.

MOST READ: வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் உங்களுக்கு எவ்வளவு ஆயுள் கூடும் தெரியுமா..?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual lord shiva
English summary

Why Lord Shiva has moon on his head?

The word 'Chandra' means moon. Shekhar means 'crest' or 'peak'. Because the moon adorns the head of Lord Shiva, which is the peak -point of any human being, he is called Chandrashekhara.
Desktop Bottom Promotion