For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரெல்லாம் இறந்த பின் பேயாக சுற்றிவருவார்கள் என்று கருட புராணம் கூறுகிறது தெரியுமா?

பொதுவாக மனித வாழ்க்கையின் சுழற்சி என்பது ஒரு ஆன்மா பிறக்கிறது அதன் பின் உடலை விட்டு பிரிந்து மீண்டும் அதன் சுழற்சியை தொடங்குகிறது.

|

உலகில் இருக்கும் அனைவருக்கும் பொதுவான விஷயம் பசி, தாகம், தூக்கம் மட்டுமல்ல மரணமும்தான். பூமியில் பிறந்த அனைவருமே கண்டிப்பாக இறந்துதான் ஆகவேண்டும். அனைத்து மதங்களிலும் மரணம் பற்றிய கருத்தானது ஒன்றுதான். அனைத்து மதங்களிலும் மரணத்திற்கு பிறகான மறுவாழ்க்கை பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

Why does a Soul wander as a Ghost in the mortal world?

பொதுவாக மனித வாழ்க்கையின் சுழற்சி என்பது ஒரு ஆன்மா பிறக்கிறது அதன் பின் உடலை விட்டு பிரிந்து மீண்டும் அதன் சுழற்சியை தொடங்குகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த ஆன்மா மேல் உலகத்திற்கு செல்லும் அல்லது பூமியில் பேயாக சுற்றும் என்று புராணங்கள் கூறுகிறது. இறந்த ஆன்மாக்கள் எப்படி மறுஉலகத்தில் பேயாக சுற்றுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்மம் - கர்மா

தர்மம் - கர்மா

மனித வாழ்க்கை என்பது பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது ஆகும். மனித உருவில் இருக்கும் போது ஆன்மா வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை எதிர்கொள்கிறது. அவற்றின் செயலை பொறுத்துதான் அதன் கர்மா மற்றும் தர்மம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆன்மாவின் பிரிவு

ஆன்மாவின் பிரிவு

கருட புராணத்தின் படி மரண உலகில் இறப்பிற்கு பிறகு உடல் மட்டுமே அழிகிறது அதன் பிறகு அதன் கர்ம பலன்களை பொறுத்து ஆன்மா அடுத்த வாழ்விற்கு தயாராகிறது. ஆன்மாவும், உடலும் ஒன்றை ஒன்று சார்ந்தவை ஒன்று இல்லாமல் மற்றொன்று இருப்பது கடினமாகும்.

 ஆன்மாவின் விடுதலை

ஆன்மாவின் விடுதலை

மரணத்திற்கு பிறகு ஆன்மாவிற்கு இரண்டு நிலைகள் உள்ளது. ஒன்று விடுதலை மற்றொன்று கட்டுப்பாட்டிற்குள் இருப்பது. விடுதலை அடையும் ஆன்மா மறுவுலகில் கடவுளை உணர்ந்து நித்திய வாழ்க்கையை வாழும்.

MOST READ: தந்திரங்களின் சக்கரவர்த்தியான சாணக்கியர் வஞ்சகத்தால் எப்படி கொல்லப்பட்டார் தெரியுமா?

கட்டுப்பாட்டில் இருக்கும் ஆன்மா

கட்டுப்பாட்டில் இருக்கும் ஆன்மா

கட்டுப்பாட்டிற்குள் ஆன்மாவானது மரணத்திற்கு பிறகு சொர்க்கத்திற்கு செல்லும் அல்லது நரகத்திற்கு செல்லும். அவர்களின் பாவங்களை பொறுத்து இது முடிவு செய்யப்படும். புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையையும், பாவம் செய்தவர்கள் நரகத்தில் அவர்களின் பாவங்களுக்கான தண்டனைகளையும் அனுபவிப்பார்கள்.

சிக்கிக்கொள்ளும் ஆன்மா

சிக்கிக்கொள்ளும் ஆன்மா

பொதுவாக ஆன்மாக்கள் விடுதலை அடையாமல் சிக்கிக்கொள்ள காரணம் அவர்களின் நிறைவேறாத ஆசைகளாக இருக்கலாம். அது காதலாகவோ அல்லது உறவுகளாகவோ அல்லது செய்யாமல் விட்ட கடமையாகவோ இருக்கலாம். இது அவர்கள் ஆவி அல்லது பேயாக இருக்கும் நிலைக்கு தள்ளுகிறது.

பேய்

பேய்

ஆன்மாவானது பேய் வடிவத்தில் இருக்கும்போது அது மூன்று மூலக்கூறுகளால் ஆனதாக இருக்கிறது. அவை காற்று, ஆற்றல் மற்றும் வெற்றிடம் ஆகும். பிறப்பு மற்றும் இறப்புக்கு இடையே இருக்கும் சுழற்சியை முடிக்காதவரை அதாவது 84 லட்சம் உயிரினங்களாக பிறக்காத வரை அந்த ஆன்மா விடுதலை நிலையை அடைய இயலாது.

MOST READ: திட்டம் போட்டு சொல்லி அடிப்பதில் இந்த 6 ராசிகளில் பிறந்தவர்கள் கில்லியாம் தெரியுமா?

இறுதி சடங்குகள்

இறுதி சடங்குகள்

சிலசமயம் ஆன்மாவின் நிறைவேறாத ஆசைகள் அவற்றை மரணத்திற்கு பிறகு உலகத்தை விட்டு நிறைவேறாமல் தடுக்கிறது. இந்த மத நம்பிக்கைகளில் இறுதி சடங்குகள் ஆன்மாக்களுக்கு அமைதியையும், மோட்சத்தையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.

ஆன்மாவின் வேதனை

ஆன்மாவின் வேதனை

மரண உலகத்திற்கும், மேல் உலகத்திற்கும் இடையே மாட்டிக்கொள்ளும் ஆன்மாக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகக்கூடும். இந்த ஆன்மாக்கள் நம்மிடையேதான் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல்,சிலசமயம் அவை தாங்கள் இருப்பதாய் நமக்கு உணர்த்தும்.

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம்

சிலசமயம் ஆன்மாக்கள் தன் குடும்பத்தினரின் வேலைகளையும், அமைதியையும் கெடுப்பதன் மூலம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். சாஸ்திரங்களின் படி இது பித்ரு தோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பித்ரு தோஷத்தை சரிபண்ணும் சில வழிகளை மேற்கொண்டு பார்க்கலாம்.

அவர்களின் கடைசி ஆசையை மதிக்க வேண்டும்

அவர்களின் கடைசி ஆசையை மதிக்க வேண்டும்

ஒருவேளை இறந்தவர்களுக்கு ஏதேனும் கடைசி ஆசையோ அல்லது நிரவிராத ஆசையோ இருந்தால் அவரது குடும்பத்தினர் அவர் இருந்த 13 நாட்களுக்குள் அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும். இந்த மதத்தின் படி ஆன்மாக்கள் இந்த காலக்கட்டத்தில் அவர்கள் குடும்பத்தினரை சுற்றியேதான் இருக்கும்.

MOST READ: உங்கள் எண்ணங்கள்தான் உங்க ஆன்மாவோட நிறத்தை தீர்மானிக்கும்... உங்கள் ஆன்மாவோட உண்மையான நிறம் என்ன?

மாதம்தோறும் பிண்டம் வைத்தல்

மாதம்தோறும் பிண்டம் வைத்தல்

ஒவ்வொரு மாத பௌர்ணமியின் போதும் இறந்தவரது மூத்த மகன் அல்லது சகோதரன் பிண்ட தானம் செய்ய வேண்டும். இது இறந்தவர்களுடைய ஆன்மாவை அமைதிப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: puranas vedas ghost
English summary

Why does a Soul wander as a Ghost in the mortal world?

Check out the reason for why souls wander in the mortal world according to Garuda Purana.
Desktop Bottom Promotion