For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவிலை சுற்றிவருவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா?

கோவிலில் வலதுபுறத்தில் இருந்து சுற்றிவருவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா?Synopsis: கடவுளை வலதுபுறத்தில் இருந்து இடதுபுறமாக பிரதிஷ்டை செய்வதும், அங்கபிரதட்சணம் செய்து வழிபடுவதும

|

உலகத்திலேயே அதிக கோவில்கள் இருக்கும் நாடு என்றால் அது இந்தியாதான், அதேபோல அதிக வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் இருப்பதும் இந்தியாவில்தான். இந்தியாவில் கடவுளை வழிபடும் ஒவ்வொரு வழிபாட்டு முறைக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது.

Why do we do pradakshina in temples

கடவுளை வலதுபுறத்தில் இருந்து இடதுபுறமாக பிரதிஷ்டை செய்வதும், அங்கபிரதட்சணம் செய்து வழிபடுவதும் இந்தியாவில் பரவலாக இருக்கும் ஒரு வழிபாட்டு முறையாகும். ஆனால் அதை ஏன் செய்கிறோம் என்பதே இங்கு பலருக்கும் தெரியாது என்பதே உண்மை. இந்த பதிவில் கோவில் வழிபாட்டு முறைகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் கோவிலை சுற்றி வருகிறோம்?

ஏன் கோவிலை சுற்றி வருகிறோம்?

மையபுள்ளி இல்லாமல் வட்டத்தை வரைவது என்பது இயலாத ஒன்று. நமது வாழ்க்கையின் மையப்புள்ளியாக இருப்பது கடவுள்தான். கடவுளை மையப்புள்ளியாக அடையாளம் கொண்டு நமது அன்றாட வேலைகளை செய்ய வேண்டும். கோவிலை சுற்றி பிரதிஷ்டை செய்வதன் அர்த்தம் இதுதான்.

கடவுளிடம் நெருக்கம்

கடவுளிடம் நெருக்கம்

வட்டத்தில் இருக்கும் எந்த புள்ளியில் இருந்தும் மையத்திற்கான தூரம் ஒரே அளவில்தான் இருக்கும். இதன் அர்த்தம் என்னவெனில் எங்கே இருந்தாலும், யாராக இருந்தாலும் நாம் அனைவரும் கடவுளுக்கு முன் சமம்தான் என்பதை உணர்த்துகிறது. கடவுள் எந்த பாரபட்சமும் இல்லாமல் நம்மை காத்துக்கொண்டிருக்கிறார்.

ஏன் எப்பொழுதும் கடிகார திசையில் சுற்றுகிறோம்?

ஏன் எப்பொழுதும் கடிகார திசையில் சுற்றுகிறோம்?

பிரதிஷ்டை செய்யும்போது கடவுள் நம்முடைய வலது பக்கத்திலேயே இருப்பார். இந்தியாவில் வலது புறம் என்பது புனிதமானதாக கருதப்படுகிறது. எனவே நாம் வலது புறமாக சன்னிதியை சுற்றிவரும்போது நமது தர்மத்தின் பக்கம் இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வலதுபுறம் சுற்றுவது நமது பலமாக இறைவன் நமது பக்கத்தில் இருக்கிறார் என்பதை உணர்த்தும்.

MOST READ: இந்த இடத்தில் மச்சம் இருக்கும் ஆண்களும், பெண்களும் அடிக்கடி காதலில் விழுவார்களாம் தெரியுமா?

வேதங்கள்

வேதங்கள்

இந்திய வேதங்களில் கூறியுள்ள படி மத்ருதேவோ பவா, பித்ருதேவோ பவா, ஆச்சர்யதேவோ பவா. அதாவது உங்கள் பெற்றோரை நீங்கள் கடவுளாக நினைத்து வழிபடலாம். அவர்களையும் வலதுபுறத்தில் இருந்து சுற்றி பிரதிஷ்டை செய்யலாம்.

மரங்கள் ஏன் புனிதமானதாக கருதப்படுகிறது?

மரங்கள் ஏன் புனிதமானதாக கருதப்படுகிறது?

கடவுள் மரங்கள், மிருகங்கள், தாவரங்கள் என அனைத்து பொருட்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவை அனைத்தும் புனிதமானவைதான். பூமியில் மனித வாழ்க்கையானது பெரும்பாலும் மரங்களையும், தாவரங்களையும் நம்பித்தான் இருக்கிறது. அவற்றின் உதவியால்தான் நம்மால் பூமியில் வாழமுடிகிறது. அதனால்தான் மரங்கள் எப்போதுமே புனிதமானதாக கருதப்படுகிறது.

புனித மரங்கள்

புனித மரங்கள்

அரச மரம் போன்ற சில மரங்களும், துளசி போன்ற சில தாவரங்களும் இன்றும் மனிதர்களால் வழிபடப்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அவை கடவுளுடன் தொடர்புடையவை என்பதால்தான். இந்த மரங்கள் மட்டும் செடிகளை வழிபடுவது நம்முடைய வேண்டுதல்களை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

MOST READ: மீன் சாப்பிட ரொம்ப பிடிக்குமா? இந்த பொருளோடு சேர்த்து மட்டும் சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..!

கோவிலில் ஏன் மணி அடிக்கப்படுகிறது?

கோவிலில் ஏன் மணி அடிக்கப்படுகிறது?

கடவுளை எழுப்ப என்று நினைக்காதீர்கள் ஏனெனில் கடவுள் ஒருபோதும் தூங்குவதில்லை. கோவில் மணி அடிக்கும் போது அது சில புனிதமான ஒலியை எழுப்புகிறது. இது கடவுளின் பொதுப்பெயரான ஓம் என்னும் ஒலியை எழுப்புகிறது. இது உங்களை சுற்றி இருக்கும் நல்ல சக்திகளின்சக்தியை அதிகரிக்கும்.

ஆரத்தி

ஆரத்தி

கடவுளுக்கு ஆரத்தி எடுக்கும் போது மணி அடிப்பது வழக்கமாக இருக்கிறது. சிலசமயம் மணிக்கு பதிலாக சங்கொலியும் எழுப்பப்படுகிறது. இந்த சத்தங்கள் சுற்றியிருக்கும் மற்ற சத்தங்களை குறைத்து இந்த புனித ஒலியில் மக்கள் முழுமையான பக்தியோடு கடவுளை வழிபட உதவுகிறது.

கலசம்

கலசம்

கலசம் என்பது பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் நீர் நிரப்பட்டு அதன் மேலே சில மா இலைகள் மற்றும் தேங்காய் வைக்கப்பட்டிருக்கும். அதனைச்சுற்றி மஞ்சள் அல்லது சிவப்பு நிற நூல் சுற்றப்பட்டிருக்கும். இதைத்தான் நாம் கலசம் என்கிறோம். கலசம் நீர் அல்லது அரிசியால் நிரப்பப்படும் போது அது தெய்வீக சக்திகளை பிரதிபலிக்கும் பூர்ணகும்பமாக கருதப்படுகிறது.

கலசத்தை ஏன் வழிபட வேண்டும்?

கலசத்தை ஏன் வழிபட வேண்டும்?

கலசத்தை ஏன் வழிபட வேண்டும்? சிருஷ்டிக்கு முன் விஷ்ணு பாற்கடலில் தன் பாம்பு படுக்கையில் படுத்திருந்தார். அவரது தொப்புளில் இருந்து உருவான தாமரையில் இருந்துதான் படைப்பின் கடவுளான பிரம்மா தோன்றினார்.

MOST READ: சிவபெருமான் புலித்தோல் உடுத்துவதற்கும் அவரின் பக்தர்கள் செய்த சதிக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா?

அடையாளங்கள்

அடையாளங்கள்

கலசத்தில் இருக்கும் நீரானது ஒட்டுமொத்த உலகமும் உருவாக்கப்பட்ட நீரை அடையாளப்படுத்துகிறது. இந்த நீரில் இருந்துதான் எண்ணிலடங்கா உயிர்களும், பொருட்களும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மா இலைகளும், தேங்காவும் உருவாக்கத்தை பிரதிபலிக்கிறது. அதில் இருக்கும் நூலானது உயிர்களிடையே இருக்கும் பிணைப்பை பிரதிபலிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: god india இந்தியா
English summary

Why do we do pradakshina in temples?

Pradakshina is a famous ritual which done in many Indian temples.
Desktop Bottom Promotion