முத்தம் கொடுப்பதில் இந்த ராசிக்காரங்கதான் கில்லாடிகளாம்...உங்கள் ராசியும் இதுல இருக்கா?

உலகில் அன்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த விஷயம் என்றால் அது முத்தம்தான் . இது காதலன், காதலிக்கு மட்டுமல்ல அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும்.

உலகம் முழுவதும் காதலர் தின கொண்டாட்டங்கள் கலைக்கட்ட தொடங்கிவிட்டது. பூக்கள், பரிசு பொருட்கள், பொம்மைகள் என தான் நேசிப்பவருக்கு தன் அன்பை வெளிப்படுத்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தயாராகி கொண்டிருக்கின்றனர்.நீங்கள் கொடுக்கும் பரிசு பொருட்களை விடவும் உங்கள் நீங்கள் காதலோடு கொடுக்கும் ஒரு முத்தம் உங்கள் அன்பை எளிதாகவும், ஆழமாகவும் கூறிவிடும்.

Which Zodiac Sign Is The Best Kisser? Zodiac Ranking Of Kissers

உலகில் அன்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த விஷயம் என்றால் அது முத்தம்தான் . இது காதலன், காதலிக்கு மட்டுமல்ல அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். முத்தம் கொடுப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளும் கூட கிடைக்கிறது. இதழ்கள் இருக்கும் அனைவருமே முத்தம் கொடுக்கலாம், ஆனால் அதனை ரசனையோடும், அழகியலோடும் கொடுக்க வேண்டும். நீங்கள் முத்தம் கொடுப்பதில் எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் ராசியே கூட சொல்லும். இந்த பதிவில் 12 ராசிகளில் முத்தம் கொடுப்பதில் வல்லவர்கள் யாரென்ற தரவரிசையை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் முட்டாள்தனமாக முத்தம் கொடுப்பவர்கள் அல்ல. மற்றவர்களை போலவே இவர்களும் எப்பொழுதும் தனக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள். மகர ராசியினர் முத்தம் கொடுக்கும் போதோ அல்லது முத்தம் பெறும்போதோ தங்கள் துணை தனக்கு பிடித்த மாதிரி முத்தம் கொடுக்கிறார்களா என்று சிந்திப்பார்கள். இது அவர்களின் தவறு அல்ல, அவர்கள் எப்பொழுதும் உயர்ந்த தரத்தை எதிர்பார்ப்பவர்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியினரை போல முத்தம் கொடுப்பது கடினமாகும். இவர்களுக்கு முத்தம் கொடுக்கும் கலை முழுமையாக வராவிட்டாலும் முத்தம் கொடுக்கும் ஆர்வமும், ஆற்றலும் எப்போதும் அதிகமாக இருக்கும். முத்தம் கொடுப்பது அவர்களை மிகவும் பரவசப்படுத்துவதாகும். முத்தம் கொடுக்கும் போது அவர்கள் உலகத்தில் தாங்கள் இரண்டு பேர் மட்டுமே இருப்பதாக நினைப்பார்கள், அது மிகச்சிறிய முத்தமாக இருந்தாலும் சரி.

தனுசு

தனுசு

சுவாரஸ்யமான முத்தங்கள் யாருக்குத்தான் பிடிக்காது, அந்த வகையில் தனுசு ராசிக்கார்கள் எப்பொழுதுமே அதில் கில்லாடிகள்தான். ஆழ்ந்த முத்தங்கள் உங்களை மிகவும் கனமாக உணரச்செய்யும், ஆனால் இவர்கள் கொடுக்கும் முத்தங்கள் எப்பொழுதுமே பரவசப்படுத்துவதாக இருக்கும். முத்தம் கொடுத்து சீண்டுவதில் இவர்களுக்கு தனிப்பிரியம் இருக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் நல்ல, அழகிய, மென்மையான முத்தங்களுக்கு சொந்தக்காரர்கள். அவர்களை போலத்தான் அவர்களின் முத்தங்களும், ஆழமான மற்றும் சிந்தனை மிகுந்தவையாக இருந்தாலும் முடிவில் முரட்டுத்தனமாக இருக்கும். சரியான நபர்களுடன் இல்லாத போது அவர்களுக்கு உடல்ரீதியான பிணைப்பு ஈர்க்காது. ஒருவேளை சரியான நபருடன் இருந்தால் உடனிருப்பவர்கள் உருக தயாராகி கொள்ள வேண்டும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களை நீங்கள் முத்தமிட விரும்ப அவர்களிடம் சில விஷயங்கள் இருக்கிறது. அவர்கள் எப்பொழுதும் ஆரம்பிக்க மாட்டார்கள், ஆனால் தங்களுக்கு பிடித்தமானவர்களை முத்தமிட இவர்கள் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள். இவர்கள் முத்தமிட மற்றவர்களை மயக்க வேண்டிய அவசியமில்லை, மற்றவர்களாக விரும்பி இவர்களை முத்தமிடும் படி செய்யக்கூடியவர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் நன்றாக முத்தம் கொடுக்க கூடியவர்கள். அவர்களுக்கு முத்தம் கொடுப்பது எப்படி என்ற தெளிவு இருக்காது, அதற்காக அவர்கள் முத்தம் கொடுக்க தெரியாதவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்திலும் மோசமாக இருப்பவர்கள் அல்ல, அதில் முதல் இடத்தில் இருப்பது முத்தமிடுவதுதான். ஒவ்வொரு முறை இவர்கள் முத்தமிடும் போதும் இவர்கள் வித்தியாசமான முறைகளை கையாளுவார்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் துணையின் கவனத்தை ஈர்ப்பதில் எச்சரிக்கையாக இருப்பார்கள்ம் மேலும் தன்னுடைய முத்தம் கொடுக்கும் திறனை வளர்த்து கொள்வதில் இவர்கள் எப்பொழுதும் ஆர்வமாக இருப்பார்கள். தங்கள் துணை எதிர்பார்ப்பதை விட எப்பொழுதும் அதிகமாக காதலுடன் முத்தமிட வேண்டும் என்று எண்ணுவார்கள். தங்கள் மீதான ஆர்வத்தையும், கவனத்தையும் ஈர்ப்பதில் இவர்கள் எப்பொழுதும் கவனமாக இருப்பார்கள்.

மேஷம்

மேஷம்

சாகசங்களை விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் அதிக கூச்ச சுபாவம் உடையவர்கள், குறிப்பாக முத்தமிடுவதில். சரியான சூழல், பாதுகாப்பான இடம், அழகான மனநிலை என அனைத்தும் சரியாக அமைந்தால் மட்டுமே இவர்கள் முத்தம் கொடுக்க ஆர்வம் காட்டுவார்கள். எதிர்பாராத நேரத்தில் கொடுக்கும் சுவாரஸ்ய முத்தங்களை இவர்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது.

கடகம்

கடகம்

முத்தம் என்பது கடக ராசிக்காரர்களுக்கு உடல் முழுவதும் சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு அனுபவமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆழமாக முத்தமிடும் போது அவர்களின் கைகளின் ஆளுமை உடல் முழுவதும் பரவியிருக்கும். பொதுவான இடங்களில் மட்டுமின்றி காதுமடல், கழுத்து என வித்தியாசமான இடங்களில் முத்தம் கொடுக்க விரும்புவார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களை முத்தமிட அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எப்பொழுதும் அக்கறை அற்றவர்களாய் இருப்பார்கள், தனக்கு நெருக்கமானவர்கள் எப்பொழுதும் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்க வேண்டுமென்பதில் உறுதியாய் இருப்பார்கள். காதல் கலையில் இவர்கள் வல்லவர்கள், எனவே தன்னுடைய அனைத்து முயற்சிகளையும் அதன் மீது செலுத்துவார்கள். அவர்கள் உங்களை முத்தமிடும் போது அது உங்களுக்கு மீண்டும் மீண்டும் தேவைப்படுவதாக உணரச்செய்யும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கார்கள் எப்பொழுதும் கவர்ச்சிகரமான முத்தங்களில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் எதை நினைத்தும் பயப்பட மாட்டார்கள் அதுவே இவர்களை பயமறியா முத்தமிடுவதில் வல்லவர்களாக மாற்றும். அவர்கள் எதையாவது புதிதாக முயற்சிக்க விரும்பினால் துணையின் அனுமதிக்காக எப்போதும் காத்திருக்க மாட்டார்கள். மயக்கும் படி முத்தமிடும் இவர்களின் முத்தத்தில் இருந்து சுயநினைவு வர சில நிமிடங்கள் கூட எடுக்கும்.

மீனம்

மீனம்

மற்ற ராசிகளை விட முத்தம் கொடுப்பதில் சிறந்தவர்கள் என்றால் அது மீன ராசிக்காரர்கள்தான். அன்பான, அமைதியான, ஆர்வம் மிகுந்த இவர்கள் முத்தமிட எப்பொழுதும் தயாராக இருப்பார்கள். தங்களின் அன்பை நிலைநிறுத்த இவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். கவனமாக முத்தமிடுவதில் வல்லவர்களான இவர்கள் உங்களுக்கு துணையாக அமைந்தால் முத்தக்கடலில் மூழ்க தயாராகி கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion