Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
உங்க ராசியே வைச்சே முன்ஜென்மத்துல நீங்கள் எப்படி இருந்தீங்கன்னு ஈஸியா தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
நமது கடந்த ஜென்ம ராசியானது இந்த ஜென்மத்தில் நாம் யாராக இருக்கிறோம் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.
நம் அனைவருக்குமே நம்முடைய எதிர்காலத்தை தெரிந்து கொள்வதில் எவ்வளவு ஆர்வம் இருக்குமோ அதேயளவு நமது கடந்த காலத்தை தெரிந்து கொள்வதிலும் இருக்கும். கடந்தகாலம் அல்லது முன்ஜென்மம் என்பது மிகவும் முக்கியமானது ஏனெனில் உங்கள் கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தில் முக்கியபங்கை வகிக்கிறது.

நமது கடந்த கால நினைவுகளில் 70 சதவீதத்தை நாம் நிகழ்காலத்தில் சுமந்து கொண்டிருப்போம். அவை நமது நிகழ்காலத்தை முடிவு செய்வதில் முக்கியமானவையாகும். குறிப்பாக நமது கடந்த ஜென்ம ராசியானது இந்த ஜென்மத்தில் நாம் யாராக இருக்கிறோம் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. இந்த பதிவில் உங்களுடைய கடந்த ஜென்மத்தின் ராசியாக எது இருந்தது என்று பார்க்கலாம்.

மேஷ ராசியின் கடந்த ஜென்ம வாழ்க்கை
இந்த ஜென்மத்தில் உங்களுடைய ராசி மேஷமாக இருந்தால் உங்களுடைய கடந்த ஜென்மத்தில் உங்களின் ராசி மீனமாகத்தான் இருந்திருக்கும். மீனராசிக்காரராக கடந்த ஜென்மத்தில் உங்களின் தேவை யாருக்கெல்லாம் இருந்ததோ அவர்களுக்கு நீங்கள் உதவியிருப்பீர்கள். உங்களின் ஆழமான சுயதொடர்பும், புரிதலும் உங்களை சிறந்தவராக வைத்திருந்து இருக்கும். மேஷ ராசிக்காரராக இந்த ஜென்மத்தில் நீங்கள் சமநிலையுடன் வரும் சவால்களை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். சுயநலமில்லாத பாதையில் உங்கள் வாழ்க்கையில் சீராக தொடரும்.

ரிஷப ராசியின் கடந்த ஜென்ம வாழ்க்கை
ரிஷப ராசிக்காரர்களின் இலட்சியத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற குணம் அவர்களின் கடந்த ஜென்ம ராசியான மேஷ ராசியிடம் இருந்து வந்திருக்கும். கடந்த ஜென்மத்தில் நீங்கள் நிச்சயம் சண்டைக்காரராக இருந்திருப்பீர்கள். உங்களை கடந்த ஜென்மத்தில் பாதுகாத்ததே உங்களின் கோபமாகத்தான் இருந்திருக்கும். இந்த ஜென்மத்தில் நீங்கள் மிகவும் அமைதியானவராக வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவராக இருப்பீர்கள்.

மிதுன ராசியின் கடந்த ஜென்ம வாழ்க்கை
நீங்கள் மிதுன ராசிக்காரராக இந்த ஜென்மத்தில் இருந்தால் உங்கள் கடந்த ஜென்ம ராசி ரிஷபமாக இருக்கும். கடந்த ஜென்மத்தில் நீங்கள் அனைவரின் மீதும் அக்கறை செலுத்தி உலகில் இருக்கும் அனைவரையும் சமமாக பார்த்தவராக இருப்பீர்கள். இந்த ஜென்மத்தில் நீங்கள்உங்களுக்குள் மனரீதியான பல சவால்களை சந்தித்து கொண்டிருப்பீர்கள், உங்களுக்குள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த சூழ்நிலையிலும் உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.

கடக ராசியின் கடந்த ஜென்ம வாழ்க்கை
உங்களின் கடந்த ஜென்ம ராசியாக மிதுன ராசி இருந்திருக்கும். நீங்கள் இன்று வலிமையாக இருப்பதற்கு கடந்த ஜென்மத்தில் மிகப்பெரிய விலை கொடுத்திருப்பீர்கள். எப்போதும் நீங்கள் அலட்சியமாகவோ, விளைவுகளை பற்றி சிந்திக்காதவர்களாகவோ இருந்திருப்பீர்கள். ஆனால் இந்த ஜென்மத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பீர்கள்.

சிம்ம ராசியின் கடந்த ஜென்ம வாழ்க்கை
சிம்ம ராசிக்காரர்களின் கடந்த ஜென்ம ராசியாக கடகம் இருந்திருக்கும். உங்களின் முடிவுகள் அனைத்தும் பயம் சார்ந்ததாகவே இருந்திருக்கும், உங்களை நினைத்தே நீங்கள் பயந்திருப்பீர்கள். இந்த ஜென்மத்தில் சிங்கத்தின் ராசியில் பிறந்திருக்கும் நீங்கள் அனைத்து முடிவுகளையும் நம்பிக்கையாக எடுத்துக்கொண்டிருப்பீர்கள்.

கன்னி ராசியின் கடந்த ஜென்ம வாழ்க்கை
கன்னி ராசியில் பிறந்த உங்களுடைய கடந்த ஜென்ம ராசி சிம்ம ராசியாக இருந்திருக்கும். கடந்த ஜென்மத்தில் நீங்கள் முழுநேர சுயநலவாதியாக இருந்திருப்பீர்கள். இந்த ஜென்மத்தின் இறுக்க நிலையை பார்க்கும் போது நீங்கள் சமநிலையை அடைந்திருப்பீர்கள். அதனால் நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அனைவரையும் மகிழ்ச்சி படுத்துவதையும், சந்தோசத்தை பரவ செய்வதையும் நீங்கள் வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள்.

துலாம் ராசியின் கடந்த ஜென்ம வாழ்க்கை
உங்களுடைய கடந்த ஜென்ம ராசி கன்னி ராசியாக இருந்திருக்கும். கடந்த ஜென்மத்தில் நீங்கள் மற்றவர்களுக்காகவும், நல்லதுக்காகவும் தியாகம் செய்பவராக இருந்திருப்பீர்கள். எனவே உங்கள் ஆன்மா உங்களுக்காகவும் கொஞ்சம் வாழ வேண்டும் என்று முடிவெடுத்துதான் இந்த ஜென்மத்தில் துலாம் ராசியில் பிறந்திருக்கிறீர்கள். இந்த ஜென்மத்தில் உங்கள் வாழ்க்கை அனைத்திலும் சமநிலையில் இருக்கும்.

விருச்சிக ராசியின் கடந்த ஜென்ம வாழ்க்கை
நீங்கள் கடந்த ஜென்மத்தில் துலாம் ராசிக்காரராக இருந்திருப்பீர்கள். உங்களின் நன்மைக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்திருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் சுயநநலமாக இருந்திருப்பீர்கள். இந்த ஜென்மத்தில் விருச்சிக ராசியாக நீங்கள் அனைவருடனும் நல்ல உறவை வளர்த்து கொள்ள உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.

தனுசு ராசியின் கடந்த ஜென்ம வாழ்க்கை
இந்த ஜென்மத்தில் தனுசு ராசியில் பிறந்திருந்தால் உங்களின் ராசி விருச்சிகமாகத்தான் கடந்த ஜென்மத்தில் இருந்திருக்கும். உங்களின் நேரம் முழுவதையும் மற்றவர்களுடன் நல்ல உறவை வளர்த்து கொள்வதிலேயே நீங்கள் செலவழித்து இருப்பீர்கள். இப்போது உங்களின் ஞானத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதற்கு நீங்கள் தயாராக இருப்பீர்கள். ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டுவர நீங்கள் புதிய வழிகளை கண்டுபிடிப்பதுடன் அதனை அனைவருடன் சேர்ந்தும் செய்வீர்கள்.

மகர ராசியின் கடந்த ஜென்ம வாழ்க்கை
நீங்கள் முன் ஜென்மத்தில் தனுசு ராசியில் பிறந்திருப்பீர்கள். எவ்வளவு ஜாலியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமோ அது அனைத்தையும் கடந்த ஜென்மத்திலியே செய்திருப்பீர்கள், அதனால் இந்த ஜென்மத்தில் நீங்கள் பொறுப்பாக உங்கள் எதிர்காலத்தின் மீது மட்டும்தான் அக்கறை செலுத்துவீர்கள். உங்களுக்கு முக்கியம் எதுவென நினைக்கிறீர்களோ அதனை உடனடியாக செய்யுங்கள்.

கும்ப ராசியின் கடந்த ஜென்ம வாழ்க்கை
கடந்த ஜென்மத்தில் நீங்கள் மகர ராசியில் பிறந்திருப்பீர்கள். மிகவும் பொறுப்பாகவும், பொறுமையாகவும் உங்களுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்து உங்களுக்கான உயரத்தை நீங்களே அமைத்திருப்பீர்கள். இந்த ஜென்மத்தில் உங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ்வீர்கள். சுதந்திரமும், மகிழ்ச்சியும் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

மீனம்
உங்களுடைய முன்ஜென்மத்தில் நீங்கள் கும்ப ராசியில் பிறந்திருப்பீர்கள். கடந்த ஜென்மத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியானவராகவும், உங்களுக்கான விதிமுறைகளை நீங்களே உருவாக்கி கொண்டவராகவும் வாழ்ந்திருப்பீர்கள். இந்த ஜென்மத்திலும் அதற்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தாலும் அதனுடன் மற்றவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை செலுத்துவீர்கள். உணர்ச்சிகளும், புத்திசாலித்தனமும் நிறைந்த உங்களுக்காக உலகம் காத்திருக்கிறது.



Click it and Unblock the Notifications