For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ணருக்கு முன்னால் பிறந்த அனைத்து குழந்தைகளும் பிறந்தவுடனேயே கொல்லப்பட காரணம் என்ன தெரியுமா?

வாசுதேவர் மற்றும் தேவகிக்கு எட்டாவதாக பிறந்த கிருஷ்ணர் பிறப்பதற்கு முன்னரே அவரின் ஏழு சகோதரர்களும் கம்சனால் கொல்லப்பட்டனர். அவர்களின் விதி ஏன் அவ்வளவு மோசமாக இருந்தது.

|

மகாபாரதத்தில் கிருஷ்ணரின் பிறப்பே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. கம்சனை அழிப்பதற்காக பிறந்த கிருஷ்ணர் பிறப்பதற்கு முன்னரே பல சோதனைகளை சந்தித்தார். அவர் சந்தித்த சோதனைகளில் மிகவும் முக்கியமானது அவரது சகோதரர்கள் அனைவரும் இறந்ததுதான்.

what happened to elder brothers of Lord Krishna?

வாசுதேவர் மற்றும் தேவகிக்கு எட்டாவதாக பிறந்த கிருஷ்ணர் பிறப்பதற்கு முன்னரே அவரின் ஏழு சகோதரர்களும் கம்சனால் கொல்லப்பட்டனர். அவர்களின் விதி ஏன் அவ்வளவு மோசமாக இருந்தது, அதற்கு பின் அவர்களுக்கு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு இந்த பதிவில் பதிலை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவகியின் திருமணம்

தேவகியின் திருமணம்

தேவகியின் திருமணத்தில் இருந்துதான் இவை அனைத்தும் தொடங்கியது. தனது நண்பன் தனது சகோதரியை திருமணம் செய்து கொண்ட செய்தி கேட்டு அவர்களை வரவேற்க மகிழ்ச்சியுடன் சென்றான் கம்சன். அப்போது வானத்தில் தோன்றிய அசரீரி ஒன்று தனது மரணத்தை உறுதிசெய்யும் திருமணத்தை தானே கொண்டாடப்போகும் கம்சனை பார்த்து சிரித்தது. மேலும் வாசுதேவருக்கும், தேவகிக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சன் கொல்லப்படுவான் என்று கூறியது.

வாசுதேவரின் சத்தியம்

வாசுதேவரின் சத்தியம்

தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கம்சன் தேவகியை கொல்ல முயற்சித்தான். ஆனால் வாசுதேவர் அதனை தடுத்துவிட்டார். மேலும் ஆபத்து எங்கள் சந்ததியினரால் மட்டுமே தவிர எங்களால் அல்ல. எனவே தங்களை விட்டுவிடும்படியும், குழந்தை பிறந்தால் உடனடியாக அதனை கம்சனிடம் ஒப்படைப்பதாகவும் வாசுதேவர் வாக்களித்தார்.

கம்சனின் சம்மதம்

கம்சனின் சம்மதம்

வாசுதேவர் வார்த்தை மாறமாட்டார் என்று கம்சன் நன்கு அறிவான், மேலும் தேவகி அவனது அன்பு சகோதரி என்பதால் அவளை உயிருடன் விட கம்சன் சம்மதித்தான். இருப்பினும் அவர்களை சிறையில் அடைத்து அப்பொழுதும் கண்காணிக்க ஆட்களை அமர்த்தினான்.

MOST READ: சாஸ்திரங்களின் படி தம்பதியினர் இந்த இடங்களில் கலவியில் ஈடுபடுவது மிகப்பெரிய பாவமாகும்...!

முதல் குழந்தை

முதல் குழந்தை

சிறையில் அடைக்கப்பட்ட சில காலங்களுக்கு பிறகு தேவகிக்கு முதல் குழந்தை பிறந்தது. குழந்தை தனது தாயுடன் சிறிது நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் முன்னரே குழந்தை பிறந்த செய்தி கம்சனை சென்றடைந்தது. ஆனால் அவர்கள் அதனை தடுக்கவில்லை ஏனெனில் அவ்வாறுதான் முடிவு செய்யப்பட்டிருந்தது.

முதல் குழந்தையை ஏன் கொல்ல வேண்டும்?

முதல் குழந்தையை ஏன் கொல்ல வேண்டும்?

கம்சன் எட்டாவதாக பிறக்கும் குழந்தையை மட்டும்தான் கொல்ல நினைத்தான். ஏனெனில் அவனால்தான் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவன் அறிவான். ஆனால் அவனின் பாவங்களை அதிகரிப்பதற்காக கடவுள் ஒரு சதித்திட்டம் தீட்டினார். அதன்படி கம்சனை குழப்ப நாரதரை அனுப்பி வைத்தார்.

வட்டத்தின் புள்ளிகள்

வட்டத்தின் புள்ளிகள்

ஒரு வட்டத்தில் வைக்கப்படும் புள்ளிகளின் ஆரம்பம் உனக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியுடன் நாரதர் கம்சனை அணுகினார். எது வேண்டுமென்றாலும் முதலாக இருக்கலாம் எது வேண்டுமென்றாலும் இறுதியாக இருக்கலாம் என்று கூறினார். நாரதரின் அறிவுரையை ஏற்ற கம்சன் விஷ்ணு ஏதேனும் தந்திரம் செய்யலாம் என்று எண்ணி அனைத்து குழந்தைகளையும் கொல்ல முடிவெடுத்தான்.

தொடர் மரணம்

தொடர் மரணம்

அப்போது தொடங்கிய கொலைகள் தொடர்ந்து நடந்தது. தேவகிக்கு பிறந்த ஏழுகுழந்தைகளை தொடர்ச்சியாக கம்சன் கொன்றான். கிருஷ்ணரின் 7 மூத்த சகோதரர்கள் பூமியில் எந்த வாழ்க்கையும் இன்றி கொல்லப்பட்டனர். அவர்களின் விதி ஏன் அப்படி இருந்தது. கிருஷ்ணருக்கு சகோதரராக பிறந்தும் அவர்களுக்கு ஏன் இந்த நிலை?

MOST READ: முட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா? தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!

கர்மா

கர்மா

கிருஷ்ணரின் சகோதர்களுக்கு இந்த நிலை ஏற்பட காரணம் அவர்களின் பூர்வ ஜென்ம கர்மாவாகும். அவர்களின் கர்மா காரணமாக அவர்கள் மனித பிறவியில் ஒரே அம்மாவிற்கு குழந்தைகளாக பிறந்து எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் இறக்க வேண்டும் என்பது அவர்களின் விதி.

எட்டாவது குழந்தை

எட்டாவது குழந்தை

சரியான நேரம் வந்த போது கிருஷ்ணர் அவதாரமெடுத்தார். தன்னை கொல்லப்போகும் எட்டாவது குழந்தையை கொல்வதற்காக கம்சன் நீண்ட காலமாக காத்திருந்தான்.

தெய்வீக லீலை

தெய்வீக லீலை

விஷ்ணுவின் லீலை காரணமாக கிருஷ்ணர் பிறந்த போது அனைவரும் மூர்ச்சையுற்றனர். அந்த சமயத்தில் வாசுதேவர் கிருஷ்ணரை தூக்கி கொண்டு சென்று தனது நண்பர் நந்தரிடம் கொடுத்து பெண் குழந்தையை மாற்றிக்கொண்டார்.

சாதாரண குழந்தை அல்ல

சாதாரண குழந்தை அல்ல

பெண் குழந்தை பிறந்த செய்தி கம்சனை சென்றடைந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கம்சன் அந்த பெண் குழந்தையையும் கொல்ல முடிவெடுத்தார். அந்த குழந்தையை கொல்ல முயன்றப்போது அது மாயஉருவம் எடுத்து கம்சனிடம் அவனை கொல்லப்போகும் குழந்தை இன்னும் உயிருடன்தான் உள்ளது என்று கூறிவிட்டு மறைந்தது.

MOST READ: உங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா?

மற்ற குழந்தைகளை ஏன் காப்பாற்றவில்லை

மற்ற குழந்தைகளை ஏன் காப்பாற்றவில்லை

மற்ற குழந்தைகளை காப்பாற்றாமல் கடவுள் ஏன் கிருஷ்ணரை மட்டும் காப்பாற்றினார் என்ற கேள்வி

அனைவருக்கும் எழலாம். அதற்கு காரணம் அவர்கள் முன்ஜென்மத்தில் முனிவர்களுக்கு செய்த பாவத்தின் காரணமாக அவர்கள் பெற்ற சாபம்தான். அந்த சாபத்தின்படி கந்தர்வர்களாக பிறந்த போது அவர்கள் செய்த தவறுக்காக அவர்கள் பிறந்தவுடனேயே இறக்க வேண்டும் என்ற சாபம் பெற்றிருந்தனர். அதனால்தான் அவர்களை காப்பாற்றவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what happened to elder brothers of Lord Krishna?

what happened to elder brothers of Lord Krishna?
Story first published: Wednesday, July 10, 2019, 12:11 [IST]
Desktop Bottom Promotion