Just In
- 21 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 1 day ago
மைதா போண்டா
- 1 day ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 1 day ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- Movies
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- News
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா?
ஜோதிடத்தின் மூலம் நம்முடைய குணநலன்களை கணிக்க முடியும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஜோதிடம் என்பது சில சமயம் சிலரால், பல விமர்சனங்கள் வைக்கப்படும். ஜோதிடம் என்பது ஏமாற்று வேலை. அதில் லாஜிக் இல்லை.
மூட நம்பிக்கை இப்படி பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டாலும் அதில் சொல்லப்படும் விஷயங்களை பெரும்பாலானோர் நம்புவதற்குக் காரணம் அதில் நம்மையும் மீறிய ஏதோ ஒரு சக்தி இருப்பது தான் என்பது தான் உண்மையும் கூட.

ஜாதகக் கணிப்புகள்
ஜாதகம் என்பது வெறும் 12 கட்டங்கள் 9 கிரகங்களின் பெயரால் எழுதப்பட்டிருக்கும் என்பது மட்டும் கிடையாது. அதில் உள்ள அறிவியல் உண்மையை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். ஆம். பிரபஞ்ச இயக்கம் என்பதே கிரகங்களின் இயக்கத்துடன் சேர்ந்தது தான். ஒரு மனிதன் பிறக்கும்போது, அந்த குறிப்பிட்ட நேரத்தின் போது கிரகங்கள் எப்படி இயங்குகின்றனவோ அதைப் பொருத்து அந்த மனிதனுடைய குணங்கள், வாழ்க்கை ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன என்று தானே இந்த ஜோதிடம் சொல்கிறது.
MOST READ: 4 நாளில் இந்த கொடூரமான பாதவெடிப்பை கூட சரிசெய்யும் இரண்டு பொருள்கள் இவைதான்...

முன் ஜென்ம காலம்
ஜோதிடத்தின் மூலம் வெறுமனே எதிர்காலத்தை மட்டுமே கணிக்க முடியும் என்று கிடையாது. ஜோதிடத்தின் மூலம் கடந்த காலத்தில் குறிப்பிட்ட நபருடைய வாழ்க்கையையும் கணித்துச் சொல்ல முடியும். ஜோதிடக் கலையில் கை தேர்ந்த சிலரால், முன் ஜென்மத்தைக் கூட கணித்துச் சொல்லிவிட முடியும்.

முன் ஜென்ம மரணம்
மரணம் என்பது மாற்ற முடியாத, தவிர்க்க முடியாத இயற்கை விதி. அப்படி முன் ஜென்மத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன மாதிரியான மரணங்களைத் தழுவியிருப்பார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.

மேஷம்
உங்களுக்கு முன் ஜென்ம மரணம் என்பது, உங்களுடைய நண்பர்கள் மூலமாக நீங்கள் கொலை செய்யப்பட்டிருப்பீர்கள். குறிப்பாக உங்களுடைய ரகசியங்கள் தெரிந்தவர்களால்... அதனால் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களைத் தவிர மற்ற யாரிடமும் நீங்கள் உங்களுடைய சொந்த, ரகசியங்களையும் பகிர்ந்து கொள்வதை தவிர்த்திடுங்க்ள.
MOST READ: தன் ஐந்து வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து 60 முறை கத்தியால் குத்தி கொன்ற தந்தை

ரிஷபம்
உங்களுடைய முன் ஜென்ம மரணம் என்பது நீண்ட ஆயுளுடன் நீங்கள் மகிழ்வாக வாழ்க்கையை வாழ்ந்து நிறைவு செய்த பின்னரே நிகழ்ந்திருக்கும். வயது முதிர்நு்த பின், உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்திருப்பீர்கள். அதனால் இந்த ஜென்மத்திலும் அவ்வப்போது மருத்துவரிடம் சென்று உங்களுடைய உடல்நிலையை பரிசோதனை செய்து கொண்டு, நீண்ட ஆயுளுடன் வாழுங்கள்.

மிதுனம்
நீங்கள் கொஞ்சம் வித்தியாசமான முறையில் இறந்திருப்பீர்கள். அதாவது மிக உயரமான இடத்திலிருந்து கீழே குதித்து இறந்து போயிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை நீங்களாக தவறியும் விழுந்திருக்கலாம். அல்லது வேறு யாராவது உங்களைப் பிடித்து பின்னாலிருநு்து தள்ளி விட்டிருக்கலாம். அதனால் உங்களுக்கு சொல்லப்படுகிற அறிவுரை என்னவென்றால், உயரமான இடங்க்ள, உயரமான கட்டிடங்கள், மலைகள், ஹெய்ண்ட் வீல் போன்றவற்றில் நிதானமாக இருப்பது நல்லது. அதேசமயம் மெதுவாகச் செல்லப் பழகுங்கள். இந்த இடங்களிளெல்லாம் உங்களுடைய வேகத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

கடகம்
முன் ஜென்மத்தில் நீங்கள் தண்ணீருக்குள் மூழ்கி இறந்திருப்பீர்கள். அதனால், இப்போதும் கூட, நீச்சல் தொட்டி, பெரிய தண்ணீர் தொட்டி ஆகியவற்றைக் குனிந்து உற்றுப் பார்ப்பதைத் தவிர்த்திடுங்கள். கடற்கரை, ஏரிகளில் விளையாடும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக, தண்ணீர் சம்பந்தப்பட்ட இடங்களில் வீட்டுத் தொட்டி முதல் வாட்டர் பார்க், ஏன் கிணறு ஆகியவற்றின் அருகில் செல்லும்போது மிகமிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

சிம்மம்
முன் ஜென்மத்தில் பெரும்பாலும் இவர்கள் மற்றவர்களால் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, வேலை, தொழிலில் உடனிருப்பவர்கள் மூலமாகவே நடந்திருக்கும். மனதில் பட்டதை அப்படியே பேசும் குணம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பதால், இவர்களுடைய வார்த்தைகளால் பலருடைய மனங்களும் புண்படும் வாய்ப்புகள் உண்டாகும். அதனால் அந்த பண்பை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
MOST READ: இந்த ரேகைதான் துரதிஷ்ட ரேகை... இது உங்க கையில எப்படி இருக்குனு கொஞ்சம் பாருங்க...

கன்னி
முன் ஜென்மத்தில் இவர்கள் பெரும்பாலும் விபத்துக்களில் இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் சாலைகளில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கூட்டமாக இருக்கும் இடங்களில் வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்து விடுங்கள். வாகனங்கள் ஓட்ட முடியாத மனநிலையில் உள்ளபோது துணைக்கு யாராவது நண்பர்களை அழைத்துச் செல்லுங்கள்.

துலாம்
முன் ஜென்மத்தில் உடல் நலக் கோளாறினால் இறந்திருப்பார்கள். அதனால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்து விடக்கூடாது. அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகளை முறையாக செய்து கொள்ள வேண்டும். தங்களைச் சுற்றிலும் எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

விருச்சிகம்
முன் ஜென்மத்தில் இவர்கள் அடையாளம் தெரியாத நபரின் மூலம் கொலையுண்டு இறந்திருக்கக்கூடும். பொதுவாக தெரியாத இடத்துக்கு தனியாகச் செல்வது, இரவு நீண்ட நேரம் வெளியில் சுற்றுவது, கூட்டமாக பயணங்கள் மேற்கொள்வது போன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
MOST READ: இதுல நீங்க எப்படி உட்காருவீங்கனு சொல்லுங்க... நீங்க எப்படிப்பட்ட ஆள்னு நாங்க சொல்றோம்

தனுசு
முன் ஜென்மத்தில் நீங்கள் தற்கொலை செய்து இறந்து போயிருப்பீர்கள். அதனால் மன அழுத்தம், பெருங்கோபம் போன்றவற்றை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரம்
முன் ஜென்மத்தில் நீங்கள் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பீர்கள் அல்லது கொல்லைக்காரர்களால் தாக்கப்பட்டு இறந்திருப்பீர்கள். சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

கும்பம்
முன் ஜென்மத்தில் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தின் மூலம் இறந்திர்ப்பீர்கள். அதனால் சமைக்கும் போதும், எலக்ட்ரிகல் பொருள்கள் கையாளும்போதும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
MOST READ: சுயஇன்பம் பண்ணாம இருக்க முடியலயா? அத நிறுத்தறது ஏன் கஷ்டம்? உண்மை இதுதான்

மீனம்
முன் ஜென்மத்தில் வயது முதிர்ந்த பின்பு, உண்டான கடுமையான சளி மற்றும் காய்ச்சலின் காரணமாக இறந்து போயிருப்பீர்கள். அதனால் உடல் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.