For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ரேகை கையில இருக்குறவங்களுக்கு காதல் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லையாம் தெரியுமா?

கைரேகையை பார்த்து எதிர்காலத்தை கணிக்கும் வழக்கம் இந்தியா மட்டுமின்றி திபெத், சீனா, பெர்ஸியா, சுமேரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இருந்தது.

|

புராணகாலங்கள் முதல் தற்போதைய விஞ்ஞான காலம் வரையிலும் நமது எதிர்காலத்தை அறிய பயன்படுத்தும் ஒரு முறையாக கைரகை பார்ப்பது இருக்கிறது. நாடி ஜோதிடம் மூலம் நம் கடந்த காலம் முதல் எதிர்காலம் வரை அனைத்தையும் தெரிந்து கொள்ளலாமென நம்புபவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

What does it mean that heart line on both palm forms half moon shape?

கைரேகையை பார்த்து எதிர்காலத்தை கணிக்கும் வழக்கம் இந்தியா மட்டுமின்றி திபெத், சீனா, பெர்ஸியா, சுமேரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இருந்தது. கைரேகையை பொறுத்தவரையில் நமது கையில் இருக்கும் ஒவ்வொரு கோட்டிற்க்கும் ஒரு அர்த்தம் உள்ளது. இந்த பதிவில் இதய கோடு பற்றியும் அது கூறும் உங்கள் எதிர்காலம் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கைரேகை சொல்வது என்ன?

கைரேகை சொல்வது என்ன?

கையில் ஆயிரக்கணக்கான ரேகைகள் இருந்தாலும் அதில் முக்கியமான ரேகைகள் என்றாலும் அதில் முக்கியமாக கருதப்படுவது சில ரேகைகள் மட்டும்தான். அவை ஆயுள்ரேகை, இதய ரேகை, விதி ரேகை, தலைமை ரேகை மற்றும் கல்யாண ரேகை. இவற்றை கொண்டுதான் ஒருவரின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. நமது கையில் இருக்கும் ஐந்து ரேகைகளும் பஞ்சபூதங்களை பிரதிபலிக்கிறது.

இதய கோடு

இதய கோடு

சுண்டுவிரலின் கீழ்ப்புறத்தில் தொடங்கி ஆள்காட்டி விரல் நோக்கி செல்லும் கொடு இதய கோடு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காதல் கோடு என்ற பெயரும் உள்ளது, இது ஒருவரின் உணர்ச்சிகள் மற்றும் உடல்ரீதியான தொடர்புகளை பற்றி கூறுவதாக இருக்கிறது. இது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கும், ஏன் ஒரே மனிதருக்கு கூட இரண்டு கையிலும் வெவ்வேறு வகையான இதய ரேகை இருக்க வாய்ப்புள்ளது.

வடிவம்

வடிவம்

உங்கள் இரண்டு கைகளையும் ஒன்றாக வைத்து அதாவது இரண்டு கையின் இதய கோட்டையும் இணைத்து பார்த்தால் அது ஒரு வடிவத்தை காட்டும். அது வித்தியாசமானதாகவோ, நேர்கோடாகவோ அல்லது பிறை நிலவாகவோ இருக்கலாம். இந்த ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது.

MOST READ:கஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்? தடுத்தது உண்மையா தெரியுமா?

நேர்கோடு

நேர்கோடு

உங்கள் இரண்டு நேர்கோட்டையும் ஒன்றாக வைத்து பார்த்தால் அவை இரண்டும் ஒரே வடிவில் இருந்து நேர்கோடாக இருந்தால் நீங்கள் அமைதி, ஒழுக்கம் மற்றும் கருணை நிறைந்தவராக இருப்பீர்கள். அவர்கள் சீரான மனநிலையை கொண்டவராக இருப்பீர்கள், எதிர்மறை சிந்தனைகள் கொண்டவர்களுடன் பழகுவது என்பது உங்களுக்கு பிடிக்காததாகும். தன்னுடைய அமைதியான வாழ்க்கையை கெடுக்கும் எவரையும் இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த குணம் கொண்டவர்கள் எப்பொழுதும் வீட்டில் பார்க்கும் வரனைத்தான் திருமணம் செய்து கொள்வார்கள்.

வித்தியாசமான இதய கோடு

வித்தியாசமான இதய கோடு

ஒருவேளை இதய கோடுகள் இரண்டும் வித்தியாசமாக இருந்தால் அதாவது ஒன்று மற்றொன்றை விட பெரியதாகவோ அல்லது வேறு திசையில் சென்றாலோ அவர்கள் வயதிற்கும், செயல்களுக்கும் தொடர்பே இருக்காது. சிறுவயதிலேயே மிகவும் அனுபவசாலிகள் போல நடந்து கொள்வார்கள். இவர்கள் மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் அவர்களை விட முதிர்ச்சியானவர்களுடன் திருமணம் செய்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

பிறை நிலா

பிறை நிலா

ஒருவேளை இதய கொடுகள் இரண்டும் அரைவட்டம் அல்லது பிறை நிலா வடிவில் இருந்தால் அவர்கள் மிகவும் வலிமையான எண்ணங்கள் மற்றும் உறுதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப எந்தவொரு துணிச்சலான முடிவையும் இவர்கள் எதிர்கொள்ள தயங்க மாட்டார்கள். காதலிலும் இவர்கள் மிகவும் ஆழமாக இருப்பார்கள், ஆனால் அதனை கெஞ்சி பெறமாட்டார்கள். இந்த ரேகை உள்ளவர்களுக்கு வசீகரமும், கவர்ச்சியும் இயற்கையாகவே இருக்கும். இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களை காதலித்து திருமணம் செய்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது.

கல்யாண ரேகை

கல்யாண ரேகை

இதய ரேகையை தவிர்த்து கல்யாண ரேகையும் உங்கள் எதிர்காலம் பற்றிய பல ரகசியங்களை கூறக்கூடும். கல்யாண ரேகையின் நீளம், வடிவம் போன்ற அனைத்தும் உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி நிறைய கூறும். கல்யாண ரேகை பற்றி உங்களுக்கு இருக்கும் குழப்பங்கள் மற்றும் அதன் விளக்கங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ:இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...

சந்தேகங்கள்

சந்தேகங்கள்

கல்யாண ரேகையில் நான்கு அல்லது ஐந்து கோடுகள் இருந்தால் உங்களுக்கு நிறைய திருமணம் நடக்குமோ என்று சந்தோசப்பட வேண்டாம். அப்படி எதுவும் நடக்காது. உங்கள் கல்யாண ரேகையில் இரண்டு அடர்த்தியான ரேகைகள் இருந்தால் அதில் நீளமாக இருக்கும் கோடு உங்கள் திருமண வாழ்க்கையையும், சின்னதாக இருக்கும் கோடு முறியப்போகும் உறவையும் குறிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What does it mean that heart line on both palm forms half moon shape?

Heart line which represents an indication of an individual emotional and physical relationship.
Desktop Bottom Promotion