For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் எதிர்காலம் வளமாக இருக்க வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த சிறிய மாற்றங்களை செய்தாலே போதும்...!

வாழ்க்கையின் மற்ற அமசங்களை போலவே வாஸ்து சாஸ்திரமும் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.

|

அனைவருக்குமே வளமான எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழி என்ன என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. சொல்லப்போனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துபவர்கள் இங்கு வெகுசிலரே. அதற்கு காரணம் தனக்கு கிடைத்திருப்பது வாய்ப்பு என்பதே இங்கு பலருக்கும் தெரியாமல் இருப்பதுதான்.

Vastu Shastra Tips for Career growth

உங்களை தேடிவரும் வாய்ப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க நீங்கள் சிலவற்றை செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கையின் மற்ற அமசங்களை போலவே வாஸ்து சாஸ்திரமும் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கவும், வாய்ப்புகளை வரவேற்கவும் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூங்கும் திசை

தூங்கும் திசை

தூங்கும்போது எப்பொழுதும் கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். இது உங்களின் எதிர்காலத்திற்கும் நல்லதாகும்.

கழிவறை

கழிவறை

உங்கள் வீட்டின் கழிவறை எப்பொழுதும் வடக்கு திசையில் இருக்கக்கூடாது. இது உங்களுக்கான வாய்ப்புகள் வருவதை தடுக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே இதை சரியான திசையில் மாற்றி வைப்பதுதான் உங்களுக்கு நல்லது.

MOST READ: இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி தர்மசங்கடத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாவார்கள்...!

பதவி உயர்வு

பதவி உயர்வு

நீங்கள் ஏற்கனவே வேலையில் இருந்து பதவி உயர்வுக்காக காத்திருப்பவராக இருப்பின் நீங்கள் உங்கள் அலுவலக மேசை இருக்கும் திசையின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். வேலை செய்யும்போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்வது நல்ல பலனை அளிக்கும். இது உங்களின் கடின உழைப்பை அனைவருக்கும் தெரியும்படி வெளிக்கொணரும்.

வாயிற்கதவு

வாயிற்கதவு

உங்கள் வீட்டின் வாயிற்கதவு எப்பொழுதும் உங்கள் இல்லத்திற்கு நேர்மறை சக்திகளை அழைத்துவரும் திசையில் இருக்க வேண்டும். தவறான திசையில் உங்கள் வீட்டின் கதவு இருப்பது உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தடுக்கக்கூடும்.

உட்காரும் விதம்

உட்காரும் விதம்

வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி அமரும் போது உங்கள் பீமுக்கு கீழே அமர வேண்டாம். இது உங்கள் வேலையில் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் இதனால் எந்தவித நேர்மறை பலன்களும் கிடைக்காது.

MOST READ: உங்கள் உணவு விஷமாக மாற காரணம் என்ன தெரியுமா? அதை எப்படி தடுக்கலாம்?

அலுவலக மேஜை

அலுவலக மேஜை

உங்கள்திறமையாக வேலை செய்வதற்கும், வேலையில் பதவி உயர்வு பெறுவதற்கும் அதிக ஆற்றல் தேவை.எனவே நேர்மறை ஆற்றலை வழங்கும் சில படிகங்களையும், பொருட்களையும் உங்கள் மேஜையின் மீது வைக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: vastu job வாஸ்து
English summary

Vastu Shastra Tips for Career growth

Here are some useful tips for your career growth based on Vastu Shastra.
Story first published: Thursday, July 4, 2019, 17:12 [IST]
Desktop Bottom Promotion