For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுமாம்..!

பொதுவாகவே பிரதோஷம் விசேஷமான நாள்தான், அதிலும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷங்கள் அதிக நன்மைகளை வழங்கக்கூடியதாகும்.

|

இந்து மதத்தில் முக்கியமான பல தினங்கள் உள்ளது. அவற்றில் சில வருடம் ஒருமுறை வருவதாக இருக்கும். சில தினங்கள் மாதம் ஒருமுறை வருவதாக இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு தினங்களில் கடவுளை வழிபடுவது நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்ற உதவும். அந்த வகையில் சிவபெருமானை விரதமிருந்து வழிபட பல நாட்கள் இருந்தாலும் பிரதோஷ தினத்தன்று ஈசனை வழிபடுவது சற்று கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

unknown facts and benefits of pradosh vrat

பொதுவாகவே பிரதோஷம் விசேஷமான நாள்தான், அதிலும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷங்கள் அதிக நன்மைகளை வழங்கக்கூடியதாகும். பிரதோஷ வழிபாட்டை போலவே பிரதோஷ விரதமும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியதாகும். இந்த பதிவில் பிரதோஷம் பற்றி தெரியாத தகவல்களையும், பிரதோஷ வழிபாட்டின் பயன்களையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரதோஷம்

பிரதோஷம்

பிரதோஷ விரதம் என்பது இந்து மதத்தில் இருக்கும் குறிப்பிடத்தக்க, மகிமைவாய்ந்தக விரதங்களில் ஒன்றாகும். சிவபெருமானிற்காக கடைபிடிக்கப்படும் இந்த விரதமும், வழிபாடும் சிவபெருமானை மனதை குளிரச்செய்வதாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமியில் இருந்து 13 வது நாள் பிரதோஷமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பிரதோஷம் எதை குறிக்கிறது

பிரதோஷம் எதை குறிக்கிறது

பிரதோஷம் என்பது சூரியன் மற்றும் சந்திரன் தங்களது அச்சில் ஒன்றுக்கொன்று நேர்கோட்டில் இருக்கும் நேரத்தை குறிப்பதாகும். வேதங்களின் படி இந்த நேரம் சிவபெருமானை வழிபட மிகச்சிறந்த நேரமாகும். சோம பிரதோஷம் சிவபெருமானை வழிபட என்பது மிகச்சிறந்த நாளாக கருதப்படுகிறது.

பிரதோஷத்தின் கதை

பிரதோஷத்தின் கதை

புராணங்களின் படி நாகங்களின் ராஜாவான வாசுகி என்னும் பாம்பை கொண்டு பாற்கடலை கடைந்தபோது அதற்கு பல காயங்கள் ஏற்பட்டது. அந்த காயத்தின் விளைவாக வாசுகி உலகத்தையே அழிக்க கூடிய கொடிய விஷத்தை கக்கியது. உலகத்தில் இருந்த அனைத்து உயிர்களையும் காப்பாற்ற சிவபெருமான் முன்வந்தார்.

நீலகண்டன்

நீலகண்டன்

வாசுகியிடம் இருந்து வெளிப்பட்ட விஷத்தை சிவபெருமான் பெற்றுக்கொண்டார். சிவபெருமானை காப்பாற்றும் பொருட்டு தேவி பார்வதி தன் அற்புத சக்தியின் மூலம் அந்த விஷத்தை ஈசனின் தொண்டைக்கு கீழே செல்லாமல் தடுத்தார். அதனால் சிவபெருமானின் தொண்டை நீல நிறமாக மாறியது. அதனால்தான் சிவபெருமான் நீலகண்டன் என்னும் பெயர் பெற்றார்.

MOST READ: உடலுறவில் ஈடுபட்ட பிறகு இந்த உணவுகளை தெரியாமல் கூட சாப்பிட்டுவிடாதீர்கள்

த்ரயோதசி

த்ரயோதசி

தாங்கள் செய்த தவறை உணர்ந்த தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தங்களை மன்னிக்கும்படி கெஞ்சினர். தவறை உணர்ந்த அவர்களை மன்னித்து அவர்களை ஆசீர்வதித்தார் சிவபெருமான். அந்த குறிப்பிட்ட நேரம்தான் பிரதோஷம் அல்லது த்ரயோதசி என்று அழைக்கப்பட்டது. புராணங்களின் படி அந்த குறிப்பிட்ட நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் அவர்களின் வேண்டுதல்கள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் சிவபெருமான் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு

பெரும்பாலான மக்கள் பிரதோஷத்தன்று விரதமிருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிரதோஷ பூஜை அபிஷேகத்துடன் எப்பொழுதும் நாளின் பிற்பகுதியில்தான் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகமானது சூரியன் மறையும் 48 நிமிடத்திற்கு முன்னர் தொடங்கி சூரியன் மறைந்த 144 நிமிடங்கள் வரை செய்யப்படும். அந்த நேரத்தில் நந்தி தேவனை வழிபடுவது நல்ல பயன்களை அளிக்கும். பிரதோஷ வழிபாட்டினால் விளையும் நன்மைகள் என்னென்ன என்றும் தொடர்ந்து பார்க்கலாம்.

பாவங்கள் மன்னிக்கப்படும்

பாவங்கள் மன்னிக்கப்படும்

புராணத்தின் படி சிவெபருமான் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை குடித்தார். தேவர்கள் மற்றும் அசுரர்களின் பாவங்களை மன்னித்தார். எனவே அந்த நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது நீங்கள் செய்த பாவத்தில் இருந்து உங்களை மன்னித்து பாதுகாப்பதுடன் உங்களுக்கு முக்தியையும் அளிக்கும்.

வெற்றி

வெற்றி

பிரதோஷ வழிபாடு உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றியை அளிக்கும். பிரதோஷ தினத்தன்று பகல் முழுவதும் விரதமிருந்து மாலை வேலையில் சிவபெருமானை வில்வ இலை கொண்டு வழிபடும் போது உங்களின் வாழ்க்கையில் நேர்மறை சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கை வெற்றியின் பாதை பக்கம் திரும்பும்.

MOST READ: தக்காளியை ஆலிவ் எண்ணெய்யில் சமைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

unknown facts and benefits of pradosh vrat

Pradosh fast is observed by people on the 13th day of the lunar calendar which is also known as the Trayodashi tithi.
Desktop Bottom Promotion